திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பழநி

பழநி : பழநி மலைக்கோவிலில், 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவில் கருவறையின் பின்புறம், திருச்சுற்று மண்டபத்தின் அடிப்பகுதியில் (ஜகதி), இக்கல்வெட்டு உள்ளது. இரண்டு வரிகளில் அமைந்த தகவல் குறித்து, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடனகாசிநாதன், பேராசிரியை திலகவதி, ஆர்வலர் ஞானசேகரன் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சங்க காலத்தில், பழநி வணிக நகராக இருந்தது. பாண்டியர்களின் தலை நகரான மதுரையில் இருந்து, நீண்ட பெருவழிப்பாதை, ரோமாபுரி, கிரேக்கத்திற்கு சென்றுள்ள தகவல்களை, சில கல்வெட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு மேலும் ஒரு ஆதாரமாக இக்கல்வெட்டு உள்ளது. இது, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தவுடன் செட்டி என்பவர், பழநியைச் சேர்ந்த கெல்லி செட்டி மகனுக்கு புண்ணியம் (நற்பலன்) சேரும் வகையில், உத்திரக்கல் அமைத்துக் கொடுத்ததாக, இது தெரிவிக்கிறது. மற்றவை குறித்த தகவல் இல்லை. திருச்சுற்று மண்டபத்தின் தூண்களில், இரு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவுடன் செட்டி, கெல்லி செட்டியின் மகனாக இருக்கலாம் என, ஆய்வு நடக்கிறது என்றார்.THANKS-dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக