வெள்ளி, 15 மே, 2015

அலுவலர் பெயர்

 அலுவலர் பெயர்
அஞ்சகார-காடியின் அஞ்சல் அலுவலர்
அட்டவனே-காடியின் வருவாய்க் கணக்கர்
அமில்தார்-தற்போதைய வட்டாட்சியருக்கு இணையான பதவியை வகித்தவர்
அரிகார்-செய்தி கொண்டு சேர்ப்பவர்(பிராமண வகுப்பினர்)
இராகுத்தராயன்-குதிரை வீரர்களின் தலைவன்
எக்கொட-கிராமத்தலைவன்
ஒபாலிதார்-ஒபாலியின் ஆட்சித்தலைவர்
கண்டசார்-சுதேசி
கரித்தாக்கன்-மதுரைநாயக்க மன்னர்களைக் குறித்த பட்டப் பெயர்
கிலாதார்-கோட்டை அதிகாரி
சில்லாதார்-சொந்தமாக போர்க்குதிரையும்,ஆயுதமும் வைத்திருக்கும் வீரன்
சுபேதார்-ஆட்சித் தலைவர்
தேஸ்குல்கர்னி-மாவட்டக்கணக்கர்
நீர்க்கண்டி-பாசனநீர் வீணாக்காமல் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட அலுவலர்
பண்டாரம்,பண்டாரி-கருவூல அலுவலர்
படேல்-தலைவன்
பட்டணசெட்டி-நகர வணிகக் குழுவின் தலைவன்
பட்டின சுவாமி-நகரத் தந்தை,மேயர்
பவுஸ்தார்-மாவட்டங்களை ஒத்த பகுதியை -நிர்வகித்த ஆட்சித் தலைவரைக் குறித்தது
பாரா,பலூடி-கிராமத்தலைவன்,கணக்கன்,சோதிடன்,கண்காணி,காவலன்,நீர்க்கண்டி,வண்ணான்,நாவிதன்,குயவன்,கொல்லன்“,தச்சன்,தட்டான்ஆகியோர் செய்யும் தொழில்களைக் குறித்தன.
இவர்கள் அறுவடைக் காலங்களில் கிராம மக்களிடம் இருந்து ஒரு பகுதியைத் தானமாகப் பெற்றன.
போயி,போவா-பல்லக்குதூக்கி
மஞ்சநீர்ப்பிள்ளை-தத்துப்பிள்ளை
முட்டாதர்-நிலக்கிழார்
ரிசால்தார்-குதிரைப் படையில் நியமிக்கப்பட்ட சுதேசி அதிகாரி
லஸ்கர்-காலாட்படையின் கடைநிலைப் பணியாள்,துப்பாக்கி சுமந்து வருதல்,கூடாரம் அடித்தல் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்
நன்றி
க.இலக்குமி நாராயணன்


நாணயங்களின் பெயர்

அகமதி-நான்கு பகோடா தங்க நாணயம்
அம்மன் காசு-புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெளியிட்ட செப்புக்காசு
ஆமிதி-திப்பு வெளியிட்ட அரைரூபாய் நாணயம்
இமாமி-திப்பு வெளியிட்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயம்
ஐதரி-திப்பு வெளியிட்ட இரண்டுரூபாய் நாணயம்
கிஜ்ரி-திப்புசுல்தான் வெளியிட்ட 1 32ரூபாய் நாணயம்
கோபாலி சக்கரம்-பத்து கோபாலி பண மதிப்பு உடைய நாணயம்
கோபாலி பணம்-18 ஆம் நூற்றாண்டில் சேலத்தில்வழங்கி வந்த நாணயம்
சாதிக்-திப்புசுல்தான் வெளியிட்ட இரண்டு பகோடா தங்க நாணயம்
தம்பிடி-12இன் ஒரு பங்கு மதிப்புள்ள சிறிய செம்பு நாணயம்
திருவாழிக்கல்-பெருமாள் கோவில்நிலங்களின் எல்லையைக் குறி்க்க நடும் சக்கர முத்திரை கொண்ட கல்
துட்டு-நான்கு தம்பிடிகளுக்கு சமமான நாணயம்
பகதூரி பகோடா-ஐதர்அலி வெளியிட்ட முதல் நாணயம்
பகோடா-தங்க நாணயம்(16,17ஆம் நூற்றாண்டு)
பரூகி-திப்பு வெளியிட்ட ஒரு பகோடா தங்க நாணயம்
பாகிரி-திப்பு வெளியிட்ட வெள்ளி கால்ரூபாய் நாணயம்
புத்தன்-புதுக்காசு,கொச்சி சமஸ்தானம் வெளியிட்ட வெள்ளி நாணயம்5-8 கிரைய்ன் எடை கொண்டது
வாளால் வழி திறந்த குளிகை-முதலாம் ஜடாவர்மன் வழங்கிய நாணயம்
ஜபாரி-திப்பு வெளியிட்ட வெள்ளி1 8 ரூபாய் நாணயம்


கோட்டை குறித்த பழந்தமிழ்ச் சொற்கள்

கோட்டை குறித்த பழந்தமிழ்ச் சொற்கள்

அகப்பா-உள் கோட்டை
அரண்-கோட்டை
அரும்பம்-மலை மீதுள்ள கோட்டை(கிரிதுர்க்கம்)
அலங்கம்-கொத்தளம்
ஆரை-கோட்டைமதில்
இஞ்சி-கோட்டைமதில்
இட்டிகை-செங்கல்
இளை-மதிலை ஒட்டி அமைந்த காவற்காடு
எயில்-கோட்டையாக அமைந்த ஊர்
ஏப்புழை-குறிபார்க்க கோட்டை மதிலில்அமைக்கப்பட்டுள்ள துளை
ஏவறை-எதிரிகள்மீது ஆயுதங்களை வீரர் வீச கோட்டை மதிலில் அமைக்கப்பட்ட அறை
கிடங்கு-அகழி
குண்டுநீர்-நீர் நிறைந்த அகழி
குறும்பு-சிறுகோட்டை
ஞாயில்-குருவித்தலைமேல்மதில் மீது அமைந்த ஏவறை
தண்டயம்-வாசல்படியில்மேல் கட்டை
தாடிப்படை-மதிலின்மேல்பகுதி
திட்டிவாசல்-இரகசியவாசல்,நுழைவாயிலுக்கு அடுத்த சிறுவாயில்

நிலைவாயில்-கோட்டைவாசல்

பசுமிளை-பசுமையான காவற்காடு
பதணம்-மதிலின் உட்பக்கம் அமைந்த மேடை
பதப்பர்-வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை
பரிகம்-கோட்டை சுவரில் முனைப்பான பகுதி
புதலம்-கோட்டை வாயில்
புதவு-கோட்டைக்கதவு
புரிசை-வீரர் தங்கி காவல் புரிய மதில் மீது அமைந்த மாடம்
மிறை-வளைவு
மிளை-அகழிக்கு முன் அமைந்த காவற்காடு
வரைப்பு-கோட்டை வாகைமதில்


பண்டைக்கால அளவீடுகள்

பண்டைக்கால அளவீடுகள்
700 காவதம்-7640 கி்மீ
1000மைல்-1500 கி.மீ
2 மைல்-32 கி.மீ
குண்டா-141 சதுர கஜம் கொண்ட ஒரு நில அளவு -ஏக்கரில்1 /4 பகுதி
செவிடு-ஆழாக்கில் ஐந்தில் ஒரு பகுதி
தம்பிடி-ஒரு அணாவில் 12இல் ஒரு பங்கு
முக்கால் துட்டு-காலணா,மூன்று தம்பிடிகள்-ஒரு ரூபாயின் 1/192 பகுதி

விஜயாபதி-இராமாயண ஆதாரம்

Thanks-net-aanmigakkadal.com
இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது..விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும்.

 
கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.பண்டைய இந்தியாவின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன்.வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின் படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது..விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை கலைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலைஎன்ற மகள் பிறந்தாள்.விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது .

விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி...

  300
ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.


 
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் 

விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர்

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..