வெள்ளி, 12 ஜூன், 2015

                                போதிதர்மர்
 ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்‘  -போதிதர்மா
       தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியதாகக் கருதப்படுகிறது.களறிப்பயட்டுஎன்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது.
என்றுமே அரசாட்சியை விரும்பாத போதிதருமருக்கு இரண்டு சகோதரர்கள்.   போதிதருமரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டப்பட்டதுபல வருடங்கள் குருநாதர் பிரக்யதராவிடம்   அவர் பயிற்சிகள் பல  பெற்றார்.  தமது வருங்காலக் கடமை குறித்தும், குருவின் மரணத்திற்குப்பின் செய்யவேண்டிய கடமை குறித்தும் கேட்டபோது, போதிதர்மன் உலகப் புகழ் அடையும் காலம் வந்துவிட்டது. ஆனால், புகழ் என்பது மாயை. அது நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். ஆகையால், சீனா சென்றால் அங்கு கடமை காத்திருப்பதாகவும் கூறினார். சீனா செல்லத் தயாராகும் நேரத்தில் சகோதரர் இறந்துபோனார்.இருப்பினும்,              புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
           சென் புத்தமதத்தைச் சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. போதிதர்மா் சீனா சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான்.  தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர்வூ-டியைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்குச் சென்றார்.  இது ஷேடோ குத்துச்சண்டை முறையில் அமைந்த ஷின்பகவான் யோகப்பயிற்சியாகும். பின்னாளில் இது சாவோலின் மாரிஷியல் ஆர்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. மாதா என்ற இந்தியப் புத்ததுறவியின் நினைவாகக் கி.பி.495ஆம் ஆண்டு சாவோலின் ஆலயம் எழுப்பினார்

 போதிதர்மா் ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவரினைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா் அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும்யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மரின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார்தான்லின் எழுதிய "தரும போதகரின்" சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்
தேநீர் தோன்றிய வரலாறு
போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர்டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில்டேஎன்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள்
மஹாபோதி கோயில் ஸ்தலத்தில் உள்ள இந்த போதி மரம் ஷீ மஹாபோதி என்று அழைக்கப்படுகிற்து. புனிதமான இந்த மரத்தின் அடியில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றதாகவும், எனவே இந்த மரத்தின்மீது புத்தருக்கு அளவற்ற மதிப்பு இருந்ததாகவும் பௌத்த மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.
காஞ்சி என்ற பெயரில் கிடைத்த சொல்ஆதாரங்களின்படி குமரிமாவட்டத்தைச் சார்ந்தவர் என்ற ஆய்வுக்கருத்துகளை உறுதிப்படுத்த இன்னமும் பல தரவுகள் கிடைக்கவேண்டியுள்ளன.
·         தியென்சு
·         யின்-து
·         ஷ்ஹ்சி
·         ஷென்து போன்றவற்றைச்  சீனச் சரித்திர நூலில் இந்தியாவின் பெயராகக் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.சு என்றால் மேற்கத்திய சொர்க்கம் என்பது பொருளாகும்.வணிகப் பொருள் நிறைந்த இந்தியா அக்காலத்தில் அவ்வாறு இருந்துள்ளதையே இவை காட்டுகின்றன.இப்பெயர்களினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் போதிதர்மர் பற்றிய செய்திகள் மேலும் புலப்படலாம்