திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தமிழ் மொழி-சோறு

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது.
உணவைக் குறிக்கும் 27 சொற்களில் சோறு என்பது ஒன்று
என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. (6-22)


அவை
அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு என்பன.


இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் உண்டு.
ஒன்று போல மற்றொன்று இல்லை,
அத்தனை வேறுபாடுகள் இந்தச் சொற்களில் உள்ளன.
இவற்றுள் சோறு என்பது சமைக்கப்பட்ட உணவு எனப்படும்.
சொன்றி என்ற சொல்லும் சோறு என்ற பொருளில் வரும்.
சொன்றி என்றால்,
ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய,  
உண்ணுவதற்கு உகந்த பொருள் (SAP) என்று அர்த்தம். .
வரகின் சோறு என்று
வரகுக்குள் இருக்கும் உணவை (sap) சோறு என்று சொல்லும்
சங்கப் பாடல் உண்டு (புறநானூறு 197)


சமைக்கப்பட்ட உணவே சோறாகும் என்று சொல்லும் சங்கப்பாடலும் உண்டு.
ஏற்றுக உலையே, ஆக்குக சோறே (பு-நா -172)
என்று சொல்லப்படுவதன் மூலம்
சோறு என்பது தனித் தன்மையுடன் தமிழில் வழங்கி வந்த சொல்
என்று தெரிகிறது.
காஞ்சிவாழ் மக்கள் அனைவரும்
உணவு என்பதற்கு சோறு என்று அந்தச் சொல்லைப்
பயன் படுத்தி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
.

7 கருத்துகள்:

  1. சோற்றுக்கு இவ்வளவு சொற்களா ?

    பதிலளிநீக்கு
  2. தமிழ் ஒரு கடல் என்பதற்கு இன்னும் என்னென்ன சான்றுகள் உண்டோ, அவற்றைக் கற்றுத் தெளிவதற்கு இந்த ஒரு யுகம் போதாதே !

    பதிலளிநீக்கு
  3. ஒருபொருளைக் குறிக்க இத்தனை சொற்கள் ஏனைய உலக மொழிகளில் இருக்கிறதா எனில் அய்யமே.
    தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி இஃதோர் சிறந்த எடுத்துக்காட்டு.
    சிவனைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உண்டு.
    இது போன்று இன்னும் எராளம்.
    தமிழாசிரியர்கள் தமிழ் நிகண்டுகளையும் அகராதிகளையும் அதிகம் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. தமிழுக்கு நிகர் தமிழ் தான்.

    பதிலளிநீக்கு
  5. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ ஞபழய

    பதிலளிநீக்கு
  6. அருமையான செய்திகளை உள்ளீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  7. சோறு என்று சொல்லக் கூசி
    மீல்ஸ் என்று மீம்சு போடுவோர்
    இத்தனை சொற்களா யென மலையாது
    அத்தனையும் கற்கா விடினும்
    ஒன்றி ரண்டையாவதை உள் வாங்கலாம்

    பதிலளிநீக்கு