சனி, 27 ஆகஸ்ட், 2011

மதுரமும், மதுரையும்

http://thamizhan-thiravidana.blogspot.com/2011/04/50.htmlஞாயிறு, 24 ஏப்ரல், 2011




வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011



மதுரம் என்ற சொல் மனித பாஷையைக் குறிப்பதாக இருக்கிறது
மதுர மொழியைப் பேசியவர்கள் வாழ்ந்த நாடு மதுரை என்று பெயர் பெற்றிருக்க வேண்டும்.
தலைச் சங்கம் கண்டு கடலுக்குள் முழுகிய தென்மதுரையைப் பற்றி இங்கு பேசுகிறோம்.
திருவிளையாடல் புராணக் கருத்துப்படி, ஆதியில் மதுரை என்னும் பெயர் இருந்தது. பிறகுதான் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது. (பகுதி 42).

மதுர என்னும் சொல்லை பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
மத் என்னும் சமஸ்க்ருத வேர்ச்சொல்லிலிருந்து மது, மதுர, மதுரம் போன்ற சொற்கள் எழுந்தன.
மத் என்றால் மயக்கம், சொக்கிப் போதல் என்று அர்த்தம்.
அழகானவற்றைப் பார்த்துச் சொக்கிப் போவார்கள்.
இனிமையானவற்றில் மயங்கிப் போவார்கள்.
எனவே அழகும், இனிமையும் மது, மதுர என்றாயின.

·         சொக்க வைக்கும் அழகுடைய பெருமான், சொக்கநாதர் என்றானார், அழகானவராக இருந்ததால், சுந்தரர் என்ற பெயரைக் கொண்டவரானார். அந்த நாளில் உருவகப் பெயராகவோ, காரணப் பெயராகவோதான் அழைத்தார்கள். எனவே சொக்கநாதர், சுந்தரர் போன்ற பெயர் கொண்ட பெருமான் இருக்கும் தலமும் மதுர என்ற பெயரைக் கொண்டதாகவே அமையும்

somasundarar

·         இனிமையும் மதுர எனப்படும். அது இனிய காட்சியாக இருக்கலாம். இனிய உணவாக இருக்கலாம், இனிய தேனாக இருக்கலாம், இனிய கள்ளாக இருக்கலாம், இனிய கருப்பஞ்சாறாக இருக்கலாம், இனிய இசையாக இருக்கலாம். இனிமையான உணர்வைத் தரும் பேச்சாகவும் இருக்கலாம்.
மேலே சொல்லப்பட்ட அனைத்துடனும் மதுரை மூதூருக்குத் தொடர்பு இருந்தது.
அவற்றுக்கும் சிவனுக்கும் தொடர்பு இருந்த்து.
இவை அனைத்துடனும், மதுர மொழி என்று சொல்லப்பட்ட மனித மொழிக்குத் தொடர்பு இருந்தது.  
  • மதுரை என்பதில் உள்ள என்ற எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். என்பதே ஒரு ஓரெழுத்துச் சொல். என்றால் சிவன் அல்லது யமனைக் குறிக்கும் என்கிறது செந்தமிழ் அகராதி. சிவன் அதிபதியானதால், சிவனைக் குறிக்கும் என்ற சொல்லிலிருந்து மது என்றாகி, மதுர என்ற சொல் நாளடைவில் வந்திருக்கலாம்.
  • என்னும் சொல்லால் குறிக்கப்படும் சிவனும், யமனும் ஒன்று என்கிறது மதுரைக் கலம்பகம். குமர குருபரர் எழுதிய மதுரைக் கலம்பகத்தில், இந்த இரண்டு பெயர்களுமே சிவனைக் குறிக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.

அழகுற்றதொர் மதுரேசனை யமரேசனெனக்
கொண்டாடும் களியானின்றிசை பாடும்
களியேம் யாம்(மது- கல- 24)

என்னும் இந்த வரிகளால் சோம சுந்தரரை மதுரேசன் என்றும் அவரையே யமரேசன் என்றும் அழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிவனையும், யமனையும் தெரிவிக்கும் மகாரத்தை ஒட்டி மதுரை என்னும் பெயர் எழுந்திருக்கக்கூடும். 
  • ·         மதுரைக் கலம்பகத்தில் அடிக்கடி மதுரேசன்என்ற பெயரே சோம சுந்தரேசருக்குச் சொல்லப்பட்டுள்ளது. மதுரைக்கு ஈசன் என்றால் மதுரையீசன் என்றல்லவா சொல் புணரும்?
மதுரை + ஈசன் = மதுரையீசன்.
ஆனால் மதுர: என்ற சொல் சமஸ்க்ருதச் சொல்.
மதுர: என்ற இடத்துக்கு ஈசன் என்றால்
மதுர: + ஈசன் = மதுரேசன் என்று புணரும்.
இது
சுந்தர: + ஈசன் = சுந்தரேசன்
ராம: + ஈஸ்வரம் = ராமேஸ்வரம்
என்பவற்றில் உள்ளது போலப் புணர்வது. இதனால் மதுரை என்பதை விட மதுர என்னும் பெயரில்தான் ஆதியில் அழைக்கப்படிருக்கிறது என்று தெரிகிறது.

  • இதை இன்னும் ஆராய்ந்தால், மதுரேசனும், யமரேசனும் ஒரே இட்த்தில் குடி கொண்டிருந்தனர் என்றும் தெரிகிறது. வால்மீகி ராமாயணக் குறிப்புகள் மூலம், இந்தியக் கடலுக்குள் அமிழ்ந்த நிலங்களைத் தேடினோமே அதில் கண்ட ரிஷப மலைக்குத் தெற்கில் (பகுதி 57) யமனது இடம் உள்ளது என்று சுக்ரீவன் சொல்கிறான்! (வால்-ராமா 4-41). 
Rishba+malai
  • இதை நோக்கும் போது, மதுரைக்கும் அதிபதி, யமப்பட்டணத்துக்கும் அதிபதி என்று சிவபெருமான் இருப்பதும், அந்த இடங்கள் (தென் மதுரை இருந்த ரிஷப மலையும், யமப் பட்டணமும்) ஒன்றுக்கொன்று அருகில் இருந்தன என்பதும் ஒரு பழைய வரலாற்றின் சுவடுகளாகத் தெரிகின்றன.
  • அதே பகுதியில் சாகத்தீவும் இருந்தது (பகுதி 60) அங்கு நால் வகை வர்ணத்தவர்கள் இருந்தார்கள் அவர்கள்  (பிராம்மணர்), சக (க்ஷத்திரியர்), மானச (வைசியர்), ந்தக (சூத்திர்ர்). எல்லாப் பெயர்களும் மகாரத்தில் ஆரம்பிப்பது எதேச்சையான ஒன்றா அல்லது சிவனை முன்னிட்டு இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டனவா? சாகத்தீவின் தெய்வம் சிவ பெருமான்.
  • மகாரத்திலிருந்து ஈரெழுத்து மதுவுக்குச் செல்வோம். மது என்பது இனிமை, தேன் போன்ற பொருள்களில் வருகிறது. சிவனைப் பற்றிச் சொல்லும் பல இடங்களில் அவன் அணியும் கொன்றை மாலை சொல்லப்படுகிறது. இந்தக் கொன்றை மாலை தேன் சிந்தும் தன்மையுடையது.  மதுரைக் கலம்பகத்தில்  தேந்த்த கொன்றையான் தெய்வத் தமிழ்க் கூடல்(ம-க 48). தேனும், இனிமையும் பிரிக்க இயலாதவை. அதனால் சிவனிருக்கும் இடத்துக்கும் இனிமைக்கும் தொடர்பு இருக்கிறது.
  • konrai+poo
  • மது என்றால் இனிய சாறு என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த நாளில் கரும்பிலிருந்து சாறு எடுத்தார்கள். பரிபாடல் திரட்டில் காணப்படும் இருந்தையூர் திருமாலைப் பற்றிச் சொல்லும் பாடலில் அந்த ஊரின் வயலில் கரும்பு பயிரிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. கருப்பஞ்சாறு பிழியும் ஆலைகள் இருந்தன என்றும் சொல்லப்பட்டுள்ளது. கடல் கொண்ட தென்பகுதியிலும் கரும்பு விளைச்சலே அதிகமாக இருந்த்து என்று சொல்லும் வண்ணம், சாகத்தீவில் இக்ஷுவர்த்தனிகா என்னும் நதி ஒன்று ஓடியது என்றும் பார்த்தோம். (பகுதி 58). இக்ஷு என்றால் கரும்பு என்பது அர்த்தமாதலால், சாகத்தீவில் கரும்புப் பயிர் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் தென்னன் ஆட்சி மலர்ந்தது என்று நாம் சொல்வதால் (பகுதி 59), கரும்புக்கும், கருப்பஞ்சாறுக்கும், அது தரும் இனிமைக்கும் மதுரை மூதூர் பெயர் போனதாக இருந்திருக்க வேண்டும்.
karumbu

  • மதுர என்றால் இனிமை என்றும் அழகு என்றும் பொருள் பெறும்.மதுரக் கழை என்று கரும்புக்குப் பெயர், கழை என்றாலும் கரும்பு. மதுரக் கழை என்றால் இனிமையான கரும்பு என்பதாகும். (இந்தச் சொற் பிரயோகம், மதுரை திருமாலிருஞ்சோலை அழகர்  மீதான அழகர் கலம்பகத்தில்67 ஆம் பாடலில் வருகிறது.) மதுரக் கழை என்னும் கரும்பு சாகத்தீவில் பயிரான முக்கியப் பயிராகும் (பகுதி 58) மதுர என்றாலும் வசீகரம் செய்வது, அழகாக இருப்பது என்றும் சமஸ்க்ருதத்தில் பொருள் அமைகிறது. சோம சுந்தரரை மருமகனாகப் பெற்ற ஊராதலால் மதுர என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். மற்றொரு அழகரான, திருமாலிருஞ்சோலை அழகரும், அந்தப் பழம் பெரும் மூதூரான தென் மதுரையில் குடி கொண்டிருந்திருக்க  வேண்டும். அவரை வேண்டிக் கொண்டதால், மலயத்துவஜ பாண்டியனுக்கு, பார்வதி தேவியே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்று புராணங்கள் சொல்வதால், கடல் கொண்ட மதுரைக்கருகில் ஒரு தென்திருமாலிருஞ்சோலை இருந்திருக்க வேண்டும். அதனையே பெரியாழ்வார் திருமொழி 4-2இல் காண்கிறோம். (பகுதி 44). அந்தப் பெருமானுக்கும் அழகர்என்ற பெயர் உள்ளதால் மதுரமும், அழகும் கொஞ்சும் நகரமாக அந்த்த் தென் மதுரை இருந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக