திங்கள், 15 ஆகஸ்ட், 2011

புதிர்கள்

சிந்தனையைக் கிளறி யோசிக்க வைக்கும் புதிர்கள் தமிழ் மொழியில் நிறைய உண்டு. இத்தகைய புதிர்கள் சங்ககாலம் தொட்டே வழங்கி வருகின்றன. இவை தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. வாசகர்கள் தாங்கள் அறிந்த இத்தகைய புதிர்களை அனைவருடன் பகிர்ந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இப்பகுதி அமைகிறது.
புதிர் 1
எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
என்று.
நண்பர் சொன்னாராம்:
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய்
என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக