சனி, 31 ஆகஸ்ட், 2013

பெண் வயது என்ன ?

பெண் வயது என்ன ?

Penulis : Tamil on Wednesday, July 24, 2013 | 12:33 AM



(i) பேதை (Pethai): 
Girl between the ages of 5 to 8;
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.

(ii) பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10;
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(iii) மங்கை (Mangai):
A girl between 11 and 14 years;
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(iv) மடந்தை (Madanthai):
Woman between the ages of 15 and 18;
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(v) அரிவை (Arivai):
Woman between the age of 19 and 24;
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.

(vi) தெரிவை (Therivai):
Woman between 25 and 29 years of age;
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.

(vii) பேரிளம்பெண் (Perilampenn):
Woman between the ages of 30 and 36;
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.
> Tamil Literature Reference:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
’’ 227

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.சுடர்நிலை மாளிகைப் புலியூர்என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம். www.eegarai.net

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

சனி, 17 ஆகஸ்ட், 2013

tamil -general knowledge

 சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா
*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
*  தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11
*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா
*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
*  தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11
*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

*  திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
*  காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
*  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்
*  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
*  தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
*  தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.
*  பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
*  நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.
*  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
*  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
*  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
*  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
*  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
*  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
*  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
*  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்தையார் பாண்டியன்
*  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
*  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்தையார்
*  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
*  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
*  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
*  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
*  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
*  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
*  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
*  தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
*  திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
*  சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
*  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
*  கருடாம்சம்    - பெரியாழ்வார்
*  சுதர்சனம் - திருமழிசை
*  களங்கம் -  திருமங்கையாழ்வார்
*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
*  நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி


1. Toilet Make-up, toilet and use of beautifying agents
2. Painting the body, and colouring the nails, hair, etc.
3. Decoration of the forehead.
4. Art of hair dressing. Dressing

5. Art of dressing.
6. Proper matching of decorations and jewellery. Music and Dancing
7. Singing.
8. Playing on musical instruments.
9. Playing on musical glasses filled with water.
10. Acting.
11. Dancing. General Education
12. Good manners and etiquette.
13. Knowledge of diffenrent langguages and dialects.
14. Knowledge of vocabularies.
15. Knowledge of Rhetoric or Figures of Speech.
16. Reading.
17. Reciting poems.
18. Criticism of poems.
19. Criticism of dramas and analysis of stories.
20. Filling up the missing line of a poem.
21.Composing poems to order.
22. Reply in verse (when one person recites a poem, another gives the reply in verse).
23. The art of speaking by changing the forms of words.
24. Art of knowing the character of a man from his features.
25. Art of attracting others (bewitching). Domestic Science
26. Art of cooking.
27. Preparation of different beverages, sweet and acid drinks, chutneys, etc.
28. Sewing and needle work.
29. Making of different beds for different purposes and for different seasons. Physical culture
 
30. Physical culture.


31. Skill in youthful sports.
32. Swimming and water-sports. Games
33. Games of dice, chess, etc.
34. Games of chance.
35. Puzzles and their solution.
36. Arithmetical games. Art of Entertaining
37. Magic: art of creating illusions.
38. Trick of hand.
39. Mimicry or imitation (of voice or sounds).
40. Art of disguise. Fine Arts
41. Painting in colours.
42. Stringing flowers into garlands and other ornaments for decorating the body, such as crowns, clapnets, etc.
43. Floral decorations of carriages.
44. Making of artificial flowers.
45. Preparation of ear-rings of shell, ivory, etc.
46. Making birds, flowers, etc., of thread or yarn.
47. Clay-modelling: making figures and images.
48. The art of changing the appearance of things such as
making to appear as silk. Pet Animals
49. Training parrots and other birds to talk.
50. Training rams and cocks and other birds for mock fight.
Professional Training
51. Gardening and agriculture.
52. Preparation of perfumery.
53. Making furniture from canes and reeds.
54. Wood-engraving.
55. Carpentry.
56. Knowledge of machinery.
57. Construction of building (Architecture).
58. Floor decoration with coloured stones.
59. Knowledge of metals.
60. Knowledge of gems and jewels.
61. Colouring precious stones.
62. Art of war.
63. Knowledge of code words.
 
64. Signals for conveying messages.
ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .

1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28.  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது  - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் -  பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35  சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த  காலம் - கி.பி.2
49.  பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற  நூலை எழுதியவர் -  பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவிஎன்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் -  5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்  - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்
TET Tamil2
திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால்  -  70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
1. நாயனார்
2. தேவர்
3. முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்
5. நான்முகனார்
6. மாதானுபங்கி
7. செந்நாப்போதார்
8.பெருநாவலர்
திருக்குறளின் வேறு பெயர்கள்
1. முப்பானூல்
2. உத்தரவேதம்
3 தெய்வ நூல்
4. திருவள்ளுவம்
5. பொய்யாமொழி
6. வாயுறை வாழ்த்து
7. தமிழ் மறை
8. பொதுமறை
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10)

         நூல்                     பாடல்கள்           -     திணை

1. நற்றிணை               - 400 +1                         -அகம்
2. குறுந்தொகை         - 400+1                          -அகம்
3.ஐங்குறுனூறு          - 500+1                           -அகம்
4.அகநானூறு              - 400+1                           -அகம்
5. கலித்தொகை          - 400+1                          - அகம்
6.புறநானூறு                 -400+1                           - புறம்
7.பதிற்றுப்பத்து              10+10                            - புறம்
8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.
    நூல்      -         தொகுத்தவர்     -       தொகுப்பித்தவர்
 நற்றிணை              --------           -  பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை     - பூரிக்கோ               -  ------------------
ஐங்குறுநூறு       - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு         - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை        - நல்லந்துவனார்     - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் செரியவில்லை.
பத்துப்பாட்டு
               நூல்                                          புலவர்
1. திருமுருகாற்றுப்படை           - நக்கீரர்
2. பொருநராற்றுப்படை              - முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை          - உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை                 - நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு             - கபிலர்
7.முல்லைப்பாட்டு            - நப்பூதனார்
8. பட்டினப்பாலை             - உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை           - நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி            - மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)
     நூல்                       -----------              ஆசிரியர்
1.நாலடியார்                            - சமண முனிவர்கள்   
2.நான்மணிக்கடிகை             - விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது                    - கபிலர்
4.இனியவை நாற்பது             - பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம்                              - நல்லாதனார்
6. ஆசாரக்கோவை                 - பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி                             -  முன்றுறை அரையனார்
8. ஏலாதி                                   -  காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி          - கூடலூர்க் கிழார்
10. திருக்குறள்                         - திருவள்ளூவர்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது                       - மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது                  - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது                        - மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது    - கணிமேதாவியார்
கைந்நிலை                                   - புல்லங்காடனார்
கார்நாற்பது                                   - கண்ணங்கூத்தனார்
புறநூல் - 1
களவழி நாற்பது                          - பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம்  - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம்   - கபாடபுரம்
கடைச்சங்கம்   - தற்போதைய  மதுரை
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 30, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம்   -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம்   -7 
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம்   - இளங்கோவடிகள்
2. மணிமேகலை   - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4. வளையாபதி      ---------------------
5. குண்டலகேசி    - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி              - தோலாமொழி தேவர்
2. நீலகேசி                                  -----------------------
3. உதயணகுமார காவியம்   ----------------------
4. யசோதா காவியம்              ----------------------
5. நாககுமார காவியம்           ----------------------
 * திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
 * திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள் அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர்           - திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர்       - திருத்தாண்டகம்
3. சுந்தரர்                - தேவாரம்
4. மாணிக்கவாசகர்   - திருவாசகம்திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர்          - திருமந்திரம்
6. சேக்கிழார்         - பெரியபுராணம்
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்