சனி, 13 செப்டம்பர், 2014

தமிழ் பிராமி கல்வெட்டுகள்



தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன.

ஆனைமலை கல்வெட்டில் 'அரட்ட' என்ற சொல்லில் ' ட்' என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
                                                                                             அழகர்மலை

மதுரைக்கு வடக்கே வைணவர் திருத்தலமான அழகர்கோவில் உள்ளது. அழகர் கோவலின் கோட்டையை வெளியே கிழக்காக மேலூர் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் அதனில் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன.
 சிந்துவெளிக் காலம் முதல் சங்க காலம் வரையில் மக்கள் புள்ளி இடும் ஒற்றெழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்ததனாலேயேபிராமி கல்வெட்டுகளிலும், பானைஓடுகளிலும் புள்ளி இட்ட எழுத்துகளை காண முடிவதில்லை. இதை எண்ணிப்பாராமல் ஐ.மகாதேவன் போன்றோர் தமிழில் மெய் எழுத்துகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவிலேயே எழுதப்படத் தொடங்கியதாக முடிபு கட்டிவிட்டனர். இதனால் புள்ளி பற்றி குறிப்பிடும் தொல் காப்பியம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினது அல்லது 7 ஆம் நூற்றாண்டினது என மனம்போன போக்கில் கருத்துரைக்கின்றனர். வேடிக்கை என்ன என்றால் தொல் காப்பியத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள சில குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் 2,000 ஆண்டுகள் பழமையது என்பதை இவர்கள் ஏற்பது தான். மக்கள் ஓலைகளில் துளைப்படுத்தி மெய் எழுத்துகளை எழுதினால் ஓலை கிழிந்துவிடும் என்பதற்காக ஈற்றாகவும் இடையிலும் வரும் மெய் எழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்துள்ளனர் அதையே கல்வெட்டுகளிலும் காசுளிலும் கைக்கொண்டனர் என்பதே ஏற்கதக்கது.
மாங்குளம்

மதுரைக்கு வடக்கில் மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கு நோக்கிச் சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டி மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  'ஓவாமலைஎன்றும் 'கழுகுமலை' என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
 கொங்கர்புளியங்குளம்

    மதுரை மாவட்ட திருமங்கலம்  வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் அமைந்து உள்ளது. இவ் ஊர் அருகில்  பெருமாள் கோவில்  மலையில் இயற்கையான் குகைத்தளத்தில் 50 க்கும் மேலான்  கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.

விக்கிரமங்கலம்
  
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. செக்கானூரணி வழியாக விக்கிரமங்கலம் செல்லும் மதுரை நகர் பேருந்துகள் இக் குன்றின் வழியே செல்கின்றன. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
மேட்டுப்பட்டி

மதுரைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில்   சித்தர் மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும்  வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறையில் வெட்டப்பட்ட விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் என பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து உசிலம்பட்டிப் பேருந்தில் சென்றால் இக்குன்றின் அடிவாரத்திற்குச் செல்லலாம்.
திருமலை


சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
திருப்பரங்குன்றம்


மதுரை மாநகருக்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் மூன்று கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

முத்துப்பட்டி
மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி  அமைந்து உள்ளது.  முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும்  220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன.  குகைத்தள மழைவடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.

ஜம்பை

விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு  அருகில் தென் பெண்ணை
ஆற்றின் வடகரையில் இவ்வூர அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்கள் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்  வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது. அஙகு வழவழப்பாகச் செதுக்கிய அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் ஆழமாகவும் செம்மை ஆகவும்  வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஐயர் மலை


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை எனும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரிஷ்வரர் மலையில்  இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.

திருமலை


சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கருங்காலக்குடி

மதுரை மேலூர் வட்டத்தில் மேலூரிலிருந்து  திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி  விளிம்பில். இதில் ஒரு கல்வெட்டு உளளது.
முதலைக்குளம்

மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் அமைந்து உள்ளது முதலைக்குளம். விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை அருகே சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு  என்ற குகையின் புருவத்தில்    164 செ.மீ. நீளத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.

மறுகால்தலை


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்ஏரி என்ற ஊரின் அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளம் ஒன்று சமணத் துறவியர் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டு  உள்ளது.


வரிச்சியூர்


மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர்  உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில்  மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும்கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி  விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.
விக்கிரமங்கலம்
  
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. செக்கானூரணி வழியாக விக்கிரமங்கலம் செல்லும் மதுரை நகர் பேருந்துகள் இக் குன்றின் வழியே செல்கின்றன. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

இலக்கியச் செய்திகள்

பரசுராமன்- 1 குறிப்பு: பரசுராமனது வரலாறு இந்திய வரலாற்றோடும் வேத இதிகாச புராணங்கள் குறிப்பிடும் பரசுராமனின் வரலாற்றோடும் தொடர்புகொண்டது. ஆயினும் அவற்றில் கொடுக்கப்படும் தகவல்களை வரலாற்றோடும் நம்மைப் போன்ற மாந்தரின் இயல்பான நடத்தைகளோடுமே காணவேண்டும்; இயல்புக்கு மாறாக; இயற்கை இறந்த தகவல்களில் புதைந்துள்ள வரலாற்றை மட்டுமே இக்கட்டுரையில் காணமுடியும். இதில் கடவுளர் என்போர் பாதுகாப்பாளரே. முன்முடிவுகளை மனதில் கொள்ளாமல் வரலாற்றாளர் குறிப்பிடும் ஆண்டுக்கணக்கீடுகள் புத்தனின் இறப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட நிச்சையமற்றவை என்பதை மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். ப்ளுடார்க் குறிப்பிடுவது: "அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான்." ஞானியரும் முனிவர்களும் என ப்ளுடார்க் குறிப்பிடுவது தமிழ் அமண அந்தண முனிவர்களையும் புலவர்களையும் தான். அலெக்சாந்தனால் கொலைசெய்யப்பட்ட தமிழ்ப்புலவர்கள் போக எஞ்சியோரைப் பரசுராமன் மதுரைக்குக் கொண்டு சென்றான். வச்சிரநந்தி என்ற பெயரால் திராவிச்சங்கம் அமைக்கப்பட்டது. அவர்களைக்கொண்டே நமது தொல்தமிழ்ப் பாடல்கள் சிதைக்கப்பட்ட இராவண பாண்டியன் செழியன் போற்றப்பட்டான் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டன; அலெக்சாந்தன் மற்றும் வளர்ப்பு மகன் பரசுராமன் குறித்த தகவல்களை மாற்றி மறைத்துப் பலபெயர்களில் எழுதப்பட்டன. பரசுராமன் குறித்துக் கிடைத்திருக்கும் தகவல்களைச் சிறிதுசிறிதாக முதலிலும்; விளக்கங்களை அவை ஒவ்வொன்றின் கீழும் சிறிதுசிறிதாக வரிசைப்படுத்தி விளக்கங்களுக்கான சான்றுகளுடன் காணவேண்டும். பெரும்தெய்வங்களாகக் இருக்கும் கடவுளருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருப்பதுபோல பரசுராமனுக்கும் அவருடன் தொடர்புகொண்ட கடவுளருக்கும் பிறருக்கும் பல பெயர்கள் உண்டு. அவற்றையும் விளக்கங்களில் காணலாம். ரிக்வேதம் 3.53.24:'விசுவாமித்திரரின்குலத்தவரான பாரதர்க்கும், வசிட்ட குலத்தவர்களான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது.' பாரதர் எனப்படுவோர் இந்தியாவைச் சேர்ந்த விசுவாமித்திரரின் சொந்தங்களே. அலெக்சாந்த பரசுராம வசிட்ட குலத்தவரான திரித்சூக்கள் ஏதோ ஒரு வகையில் இந்திய/ பாரதருடன் தொடர்புகொண்டடு வழிவந்த அந்நியர்களே. சதபத பிராமணம் வேதங்களுக்கு விளக்கமளிக்க எழுதப்பட்ட நூல்களுள் ஒன்றே சதபதபிராமணம். சதபத பிராமணம் என்னும் உச்சரிப்பும் கூடச்சரியானதாகத் தெரியவில்லை; சத்பத அல்லது சத்பாத என உச்சரிக்கத் தக்கதெனத் தோன்றுகிறது. ஏழு-7 எண்ணுடன் தொடர்புகொண்டது. ஏழுநதிகள் அல்லது ஏழுரிஷிகள் கால்வழியினருடன் தொடர்புகொண்ட- ஏழு நதிகளைக் கைப்பற்றி அவற்றின் கரைகளில் வாழ்ந்த- பிராமணப் புரோகிதரைத் தலைமையாகக் கொண்ட கூட்டங்களின் செயல்பாடுகளைக் குறிக்கும் பிராமணம் என்பதாகப் பொருள்கொள்ளத்தக்கதாகலாம். இவற்றின் தலைமைப் புரோகிதரே வசிட்டர். சதபத பிராமணம் 1.4.1..14-17ல்: பரசுராமனின் தொடர்பு கொடுக்கப்பட்டுள்ளது. 14: விதேகனான மாதவன் அப்போது சரஸ்வதியில் இருந்தான். அங்கிருந்து; அவன் [அக்னி] நிலத்தைக் கிழக்கு நோக்கி எரித்தபடி சென்றான். அவனை [புரோகிதன்] கோதம ரகூகணனும், விதேக மாதவனும் பின்தொடர்ந்தார்கள். இந்த ஆறுகளையெல்லாம் அவன் எரித்தான். அப்போது [எப்போதும் நீருள்ள] சதாநீரா எனப்படும் அது-ஆறு வடமலையிலிருந்து பாய்கிறது. அந்த ஒன்றை அவன் எரிக்கவில்லை. அந்த ஒன்றை முந்தைய காலங்களில் 'அக்னி வைஸ்வானராவால் அது எரிக்கப்படவில்லை' என்பதை நினைத்துப் பிராமணர்கள் கடக்கவில்லை. 15: ஆயினும் இந்நாளில் அதற்குக் கிழக்கில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தக்காலத்தில் அது பண்படுத்தப் படாமலும் சதுப்பாகவும் இருந்தது; ஏனென்றால் அக்னி வைஸ்வானராவால் அது சுவைக்கப்படாமல் இருந்தது. 16: ஆயினும் இந்நாளில் அது மிகவும் பண்பட்டதாயுள்ளது. காரணம் யாகங்கள் மூலமாக அக்னி- அதைச்சுவைக்க பிராமணர்கள் காரணமாயினர். கோடையின் பின்பகுதியிலும் அது ஒருவிதத்தில் சீறிப்பாய்கிறது. மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் அது அக்னி வைஸ்வராணாவால் எரிக்கப்பட்டிருக்கவில்லை. 17: மாதவன் விதேகன் அக்னியிடம் சொன்னான்; 'நான் எங்கு உறைவது?'; அக்னி- 'இதன் கிழக்குப்பகுதி உன் உறைவிடம் ஆகட்டும்'. மேற்கண்டவை வரலாற்று நோக்கில் மொழிபெயர்க்கப்பட்டவையல்ல என்பதால் சில தவறான தகவல்களும் சிலசொற்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டும் இருக்கக்கூடும்; படிமங்களாக உள்ள சில தகவல்களுக்கு விளக்கம் பெறுவதும் எளிதல்ல. இவற்றில் விதேகமாதவன், அக்னி, கோதமராகூகணன் உள்ளனர். மேலும் முன்னரே இவர்களின் உறவினர் அக்னி வைஸ்வராணா என அங்கு சென்று அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாமல் திரும்பியதாகவும், அதனால் அங்கு செல்லாமல் தவிர்த்தார்கள் எனவும், இந்நாளில் பிராமணர்களும் அங்கு வாழ்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. [எகிப்து மற்றும் கிரேக்கம்]மேற்கிலிருந்து கிழக்குநோக்கி முன்னேறிய பல அலெக்சாந்தர்களின் வரவுக்காலங்களில் நடந்த தகவல்களே இதில் உள்ளன. விதேகமாதவன் என்பவர்; முன்னர் சென்ற அந்நியன் அக்னி வைஸ்வராணா என்பவனின் குழந்தையாக இருந்து அவரது தாயாரால் எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் திரும்பிவந்தவராகத் தெரிகிறார். மேலும் ஆறு என்ற படிமம் தெளிவான பொருளைத்தராமல் பல இன மக்களை அடிமைப்படுத்தும் முயற்சி எனத் தெரிகிறது. அதற்கு முன்னரான வரவுக்காலங்களில் கைப்பற்றப்பட்ட கங்கைப் பகுதியில் நான்கு வருணங்களை நிறுவ முயன்றதால் அல்லது அங்கு தங்களது மேலான்மை தோற்கடிக்கப்பட்டதால் அதனை விட்டுத் திரும்பிவிட்டதாகத் தெரிகிறது. இது மாபாரதத்தில் கங்கா என்ற பெண்ணுக்கும் சந்தனுவுக்கும் பிறந்த எழுவரை; நதிகளில்விட்டு; எட்டாவதாகப் பிறந்த தேவவிரதன் எனப்பட்ட கங்காதரன்= பீஷ்மனை நினைவுகொள்ளச் செய்கிறது. ஆயினும் சந்திரகொற்றனின் முதல் பட்டத்து அரசியின் மகன் கரவேலன்= கண்ணனும் எட்டாவதாகப் பிறந்ததாகத்தான் காட்டப்படுகிறான். விதேகமாதவன் பீஷ்மனல்ல. சந்தனு- சந்திரகொற்றனுக்கும் சத்தியவதி- ஹெலனுக்கும் பிறந்த இரு புதல்வர்களான சித்ராங்கதன்- இளம் வயதில் கொலை செய்யப்பட்ட பிந்துசாரன்; விச்சித்ரவீர்யன்- பிம்பிசாரன் என்போருள். பிம்பிசாரனே பரசுராமன்- விதேகமாதவன். விதேகம்= அந்நியதேகம்; விதேசி= அந்நியன். விதேகமாதவனே பரசுராமன் எனத் தமிழ்ப்பாடல்கள் உணர்த்துகின்றன. விதேச நாட்டையே விதேக நாடு எனக் குறிப்பிட்டனர். நம்முடைய இந்நாடு அந்நியரால் கைப்பற்றிக்கொள்ளப்பட்டது. சேத்கிழாரின் பெரியபுராணம் 6-1: விதேக மாதவன்: "விரைசெய் நரும்பூந் தொடையிதழி வேணியார்தங் கழழ்பரவிப் 'பரசு' பெறுமா தவமுனிவன் பரசுராமன் பெறுநாடு திரைசெய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழுவளனும் வரையின் வளனும் உடன்பெருகி மல்கு நாடு மலைநாடு" என இப்பாடலில் மேலே சதபத பிராமணம் குறிப்பிட்ட விதேகமாதவன் பரசுராமன்; மாதவமுனிவன் என இடம்பெறுகிறார். தனது வளர்ப்புத்தந்தையான அலெக்சாந்தனின் அருளால் பெற்ற நாட்டைச் சேரர்திருநாடு என்று குறிப்பிடுகிறது. எனவே கங்கைப்பகுதியிலிருந்து அலெக்சாந்த- வசிட்டன் முதலான அனைவரும் நீக்கப்பட்டது தெரிகிறது. வரலாற்றில் புஷ்யமித்திரசுங்கனால் மகதம் கைப்பற்றப்பட்டதாக உள்ளதால்; அலெக்சாந்தன் முதலானோர் நீக்கப்பட்டதை உணர்த்துகிறது. பரசு-ஒருதகுதி; வேள்வியில் பலிபடும் உயிர்களைப் பாதுகாத்து; வேள்வி நேரம் அறிந்து, அவற்றைப் பலியிட- வெட்டப்பயன்படும் கொலைக்கருவியே “பரசு”. இக் கருவி குறித்து ரிக்வேதத்திலும்:3/6,4/3,6/5 உள்ளது. இதனைப் பெற்றவன் பரசுராமன் எனப்படுவான். பெருத்த கால்நடைகளை எளிதில் வெட்டமுடியாது என்பதால் நெருப்பில் வெப்பமாக்கப்பட்டு வச்சிராயுதமாக மின்னும்போது வெட்டுவர். புஷ்யமித்திரனால் மகதம் கைப்பற்றப்பட்டு அனைவரும் நாடுகடத்தப்பட்டதை; புறநாநூறு -174: "அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு; .. .." எனப் புராணவடிவில்; சந்திரகொற்றனின் முதல்வாரிசான கரவேலனைக் கண்ணனாகக் காட்டுகிறது. கரவேலனே புஷ்யமித்திரனைப் பணியவைத்தார் என்பதை அவரது பூவனம் எனப்பட்ட இன்றைய ஒடிஸ்சாவின் புவனேஸ்வரில் உதயகிரி மலையில் உள்ள அகத்திக்கும்பாக் குகைக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. பூவனம் என்பது புவனம் எனப் புவியையும்; கரிகால்சோழனால் அமைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டனத்தின் பூம்புகாரையும்; மாபாரதம்; மலர்- பூநகரம்= மலர்கள் நிறைந்த நகரம்= பாடலிபுத்தரம்- KUSUMUDHWAJA வையும் குறிப்பதாகத் உள்ளது. டி. டி. கோசாம்பி அவர்களின் நூல்: இந்திய வரலாறு ஓர் அறிமுகம் பக்- 346 முதல் கரவேலன் குறித்த தகவல்களும் அவரது கல்வெட்டுக்கள் குறித்தும் உள்ளவை: பி. எம். பருவா அவர்களின் ஓல்டு பிரமி இன்ஸ்கிரிப்சன்ஸ் ஆப் தி உதயகிரி அண்ட் கந்தகிரி கேவ்ஸ், கல்கத்தா 1929 ஐ அடிப்படையாகக் கொண்டது: இதன் வாசிப்புக்களும் பொருள் உரைகளும் முடிவின்றி வாதிக்கப்பட்டு வருகின்றன என்கிறார் ஆசிரியர். அவரது கருத்துக்களை நமது விளக்கங்களுடன் காண்போம். தனது கால்வழியில் மூன்றாம் மன்னனான கரவேலன் [முதல் இருவர் கரவேலனது பாட்டனார் போரஸ், தந்தை சந்திரகொற்றன்] மகாநதிப்பகுதியில் 17 வரிகள்கொண்ட ஒரு கல்வெட்டைப் பொறித்துள்ளார். தற்போது மிகமோசமாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி அவர் அறியப்படாதவராகவே உள்ளார். மகதம் பாண்டியநாடு சாதகண்ணி [பரசுராம துர்யோதனாதி நூற்றுவர்] உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகள்மீது தாக்குதல் தொடுத்துள்ளார். அவர் அமணர். அவரது படை நடவடிக்கைகளை அமணம் தடைசெய்யவில்லை. நந்தன்[அலெக்சாந்தன்] பறித்துச்சென்ற ஒரு திருச்சின்னத்தை மகத மன்னன் பகசதிமிதாவிடம் [பிருகஸ்பதி- மித்ரா அல்லது புஷ்யமித்ரா என்ற சுங்கனிடமிருந்து] மீட்டெடுத்தது உள்ளிட்ட போர் நடவடிக்ககள் பொதுவானதாகக் கொண்டுள்ளன. எண்ணற்ற அமணர் அருகதர்கற்கு உணவிடுவதும் கோயில் கட்டு மானங்களும் நூறு குகைகளுக்கும் கூடுதலாக அகழ்வுகளம் காணப்பட்டுள்ளது. பொதுப் பணிச்செலவுகளாக நூறாயிரக் கணக்கில் செலவிட்டுள்ளார். தொசலி[?] சாலையிலிருந்து ஒரு பழமையான கால்வாயைப் பெரும் செலவில் விரிவுபடுத்திய தாகும். முன்னர் அதனைத் தோண்டியவன் ஒரு மன்னன் நந்தன். மகத மன்னர்கள் கலிங்கத்தை நோக்கி நகர்ந்ததைக் காட்டுகிறது. கரவேலன் [திமிரதக= துயரார்ந்தசதுப்பு] நீரை லாங்கல ஆற்றில் வடிகாலாக்கினான். நீர்த்தேக்க அணைகளைப் பரவலாக விரிவுபடுத்திக் கலிங்க நாட்டில் பயிர்விளைச்சலைப் பெருக்கி நிலைப்படுத்தியதைக் காட்டுகிறது. இருப்பினும் அவரைப்பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லை. [தகவல்கள் மாற்றுப்பெயர்களில் தமிழில் உள்ளன] புஷ்யமித்திரசுங்கன் கடைசி மௌரிய மன்னரை அடக்கி ஆட்சியைக் கைப்பற்றியவர். ஆனால் பேரரசு முழுவதையும் ஆள முடியவில்லை. இவரது குடும்பம் மௌரியரின் ஆட்சிப்பிரதிநிதிப் பொறுப்பை உச்சைனியிலோ விதிசாவிலோ ஏற்றிருந்தனர். சுங்கர் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு பார்ப்பன கோத்திரப் பெயர். ஆரிய குலத்துக்குள் ஒரு புதிய கோத்திரத்தை உள்வாங்குவதாகத் தெரிகிறது. பார்ப்பனன் வழக்கமாக யாருக்காகப் பலிகொடுத்துப் பூசைகள் செய்கிறானோ அந்தக் குலத்தைக் குறிக்கும் சொல். கடைசி சுங்கனின் வீட்டுப் புரோகிதன் ஒரு கண்வாயனாக [கோத்ரனாக] இருந்தான். எனவே சுங்கருக்குப் புரோகிதரல்லாத ஒரு குலக்குழுப் பெயர் இருந்தது; சத்திரியராகவும் இருக்க முடிந்தது. சான்றாக கோதமீ புத்த சிரி சதகணி என்பதுபோல் தாயின் கோத்ரப்பெயரைக் குறிப்பிட்டுக் கொள்வது சாதவாகனரின் வழக்கத்தின் எச்சமாக இருக்கலாம். இதனை ஏற்கவேண்டிய தேவையில்லை; ஏனெனில் இது பலதார மணத்தின் விளைவு. சுங்கர்கள் குதிரையைப் பலியிடும் யாகங்களை மீட்டெடுக்க முயன்றார்கள். அசோகனின் நடவடிக்கைகளை ஒறுத்தான் எனச் சில சமய நூல்களில் காணப்படுகின்றன. ஆயினும் ஒரு யவனன் சுங்கரின் ஆட்சிக்காலத்தில் உச்சயினியின் வணிகப்பெரு வழிகளில் வெகுதொலைவுவரை சூரையாடியதாக உள்ளது. [வியாசரின் வழிவந்தோரே சுங்கர்; யவனருடன் தொடர்பு எனத் தெரிகிறது] கி.பி. 78ல் குசனர்கள் இந்திய நடைமுறைகளை வெற்றிகரமாகக் கையாண்டார்கள். புத்தர் அல்லது சிவன் மற்றுமுள்ள தெய்வங்களின் உருவங்களோடு கூடிய நாணயங்களை வெளியிட்டார்கள். [குசனர்கள் என்போர் புத்தனின் முன்னோரான விசுவாமித்திரரின் முன்னோர் வழியினர். நான்முகனின் வழித்தோன்றலாக குசன் குசநாதன் காதி விசுவாமித்திரர் என உள்ளனர். இவர்களுக்கு எதிரானோருள் ஒரு சுங்கரே நகுசர் எனப்பட்டார்; அவரே பாண்டிய செழியன் எனபதையும் காணலாம். புத்தனோ சிவனோ அப்போது இல்லை; அமணத்திலும் புத்தர்நிலை உண்டு. அமணரின் மகாவீரரும் அவரை வென்ற புத்தரும் அப்போது அமணராகவே இருந்தனர். புத்தரை அமணகோதமர் என்றே நூல்கள் குறிப்பிடுகின்றன] அவர்களின் மாபெரும் தூபிகளைக் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் சீனப்பயணிகளும் 11ஆம் நூற்றாண்டின் அல்பரூனியும் வியந்து பாராட்டியுள்ளார்கள். வாசுதேவன் வரைக்கும் [சுமார் கி.பி. 200வரை] குசனர்கள் பேரரசாக முழு அதிகாரத்தையும் பெற்று வாரிசுரிமைகளுடன் இருந்தார்கள். [தமிழகத்தின் காஞ்சிபுரத்திலும் தூண்கள் இருந்தன; அவற்றைக் கண்டதாகவும் அதே சீனப்பயணி குறிப்பிட்டுள்ளார். அவற்றை அழித்தவர்களே பின்னர் ஆட்சிக்குவந்தவர்கள். குசானர்கள் காலம் எனக் குறிக்கப்பட்ட சாரநாத் கல்வெட்டு வனஸ்பராவையும் கலபல்லனாவையும் மகாசத்ரப் எனக் அறிவிக்கிறது. ருத்ரதாமன் உள்ளிட்ட கஸ்தனாவின் சைத்திய வழித்தோன்றல்கள் மன்னன் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளனர். சொந்தமாக முடிவெடுத்துப் போரிட்டார்கள். உஜ்ஜயினியின் ராசாவாக இருந்த சத்ரப் என அறிவித்துக் கொண்ட கக்கரதன் நாகபாணன் என்பவனை கோதமீபுத்த சாதகணி தோற்கடித்தான்; கோதமீபுத்ரனின் மகனான வாசித்தி புதன் புலமாயி, ருத்ரதாமனுடன் இருமுறை போரிட்டுத் தோற்றான். இருவரும் ஒரே சாதி இனம் குழு மொழி சார்ந்தவர்களாக இருக்கமுடியாது ஆயினும் இந்த அல்லது இன்னொரு வாசித்திபுதன் சிரி- சாதகர்ணி, ருத்ரதாமனின் மருமகனாக இருந்தான். yaudheyas- யவுதேயர்களை ருத்ரதாமன் அழித்தொழித்தான். யவுதேயர்கள் பார்ப்பனர்களை ஆதரித்தவர்கள். [ருத்ரதாமனே பிம்பிசாரனான பரசுராமன் எனப்பட்ட புலமாயியின் மகனான அஜாதச்சத்ரு எனப்பட்ட செங்குட்டுவன். யுதேயரான இளங்கோசர்களையும் அவர்களது தலைவன் பரசுராமன் எனப்பட்ட கொங்கன் பிம்பிசாரனையும் அடக்கினான். அந்நாணயத்தில் யௌதேய கணஸ்ய ஜய என அவர்களை வென்ற தகவல் குறிக்கப்பட்டுள்ளது. தாய்வழியில் இந்தியன் அல்லாதவன் புலமாயி; அவனது மகனோ தாய்வழியில் இந்தியன்; அப்போது தாய்வழிச்சமுதாமே இந்தியாவில் இருந்தது. ] கி.பி. 1500ல் தோற்றுவிக்கப்பட்ட [பெயர்மாற்றப்பட்ட] இந்திய கிராமங்கள் ஏறக்குறைய அதற்கு 1000 ஆண்டுகற்கு முற்பட்ட கிராமங்களின் பெயர்களைத் தாங்கி இருந்ததாகக் காணப்பட்டது. வெளிநாட்டுப் பார்வையாளர்கற்கு இந்திய கிராமங்கள் காலமற்றதாய்த் தோன்றின. பெரும் குடிகாரனும் சண்டைக்காரனுமான இந்திரனையும் [பிம்பிசானே மெகஸ்தனிஸ் குறிப்பிடும் இந்திரனான டயோனிசஸ்]; உருமாற்றப்பட்ட [சந்திரகொற்றன், கரவேலன் மற்றும் கரிகாலன்] விஷ்ணுவையும் தவிர்த்துப் பிற வேதியக் கடவுளரைத் தேவைக்கேற்றபடி திருத்தி அமைக்க முடியவில்லை. ஆயினும் பழங்கால வட்டார கிராம சாமிகளையும் வழிபாடுகளையும் கடவுளின் அம்சமாகவோ அவதார மாகவோ கவர்ந்துகொள்வது எளிதாக இருந்தது. இதனால் அந்நியரின் கால்வழியினர்; பிற சாதிய சமுதாயங்களுக்குள் எளிதாக ஊடுறுவ வழியமைக்கவும் ஆதிக்கம் பெறவும் முடிந்தது. பழைய விதிசா நகரின் பெஸ்நகரில் ஒரு கல்தூண்: "கடவுள்களுக்கும் கடவுளான வாசுதேவனுக்கான- உச்சியில் கழுகை உடைய[கருடத்துவச] இத்தூண் ஹெலியோ டோரசால் நிறுவப்பட்டிருக்கிறது. இவன் பாகவதத்தில் பற்றுள்ளவன். தியா[தியோ]வின் மைந்தன். தட்சசீலத்துக்கான கிரேக்கர்களின் தூதுவன்[யோனா] மாமன்னன் அன்டியல்கிடசிடமிருந்து மன்னன் காசிபுத்த பாகபத்ரனிடம் வந்திருக்கிறவன், மீட்பன் அவன் ஆட்சியான 14ஆம் நடப்பு ஆண்டில் செழிப்பவன்" என பிரகிருத எழுத்து மொழியில் உள்ளது 'மீட்பன்' [திரித்தர- கிரேக்கமொழியில் Solter] என்ற அடைமொழி கிரேக்க மொழிக்கே உரியது. தூணில் உள்ள சொல்வரிசைகளும் கிரேக்க மொழிக்கே உரியது. இந்தப் பாகபத்திரன்[விதுரனின் மகன் செழியன்= நகுசன்] ஒரு சுங்கவம்ச ஆட்சியாளனாகக் காட்டப்படுகிறான். அன்டியஸ்கிடஸ் ஏறத்தாழ கி.மு. 90ல் தட்சசீலத்தை ஆண்டான். அந்த கிரேக்கன் கிருஷ்ண வாசுதேவனை ஹெராக்ளிஸ் என்று கருதி வழிபடவில்லை. ஆயினும் அலெக்சாந்தர் முதல் மெகஸ்தனிஸ் வரை கிரேக்கர்கள் ஹெராக்கிளிசையும் கிருஷ்ண வாசுதேவனையும் ஒருவராகவே காட்டியுள்ளார்கள். விஷ்ணு மற்றும் புருசோத்தமன் [மாமனிதன்] என்ற பெயர்கள்; பகவத்[ஆசீர்வதிக்கப் பட்டவன்] என்ற அடைமொழியால் பௌத்தத்தில் இடப்பட்டது. கண்ணன் எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தொகுத்துக் கீதையாக்கினான்; [இன்றிருக்கும் கீதையல்ல]. அடுத்து இடம்பெற்றவரே சிவன்[பரசுராமன்]. இவர் பலகுடும்பங்களைக் கொண்டவர். அதில் ஒரு முக்கியமான குடும்பத்தைத் தலைமையேற்று அவருக்கெதிராகப் போராடியவரே உமை. சிவனது தொடக்ககால வழிபாடுகளில் களியாட்டங்களையும் சடங்குகளையும் வேண்டினார். இவரது வேண்டுதல்களில் எவையும் வேதங்களிலோ பிராமண இலக்கியங்களிலோ காணப்படாதவை. [நீக்கி அழிக்கப்பட்டுவிட்டன. சில பௌத்த நூல்களில் மகாவீரர் குறித்துப் பல இழிவான தகவல்கள் உள்ளன; மத்தவிலாசப்பிரசசனம் நூலிலும் தொல்தமிழ்ப் பாடல்களிலும் மாற்றுப்பெயர்களில் பல தகவல்கள் தெளிவாக உள்ளன] பெரும் நிலப்பிரபுக்களின் கடவுளாகச் சிவன்[பரசுராமன்] ஆகிறார். கண்ணனோ சிறு உட்பத்தியாளர்களுடன் உறவு கொண்டவர். [அமணத்தில் இவர்களது மோதலே உள்ளுறைந்துள்ளது. அமணம் உயிர்க்கொலைகளை ஆதரிக்கவில்லை என்பதோடு அதற்காகப் போராடவும் செய்தது. நிலத்தை உழுது பயிரிடுவதைக் கண்ணனின் கூட்டத்தாரிடமிருந்து சிவனின் கூட்டத்தார் பறித்துக் கொண்ட தகவல்கள் அமண நூல்களில் உணர்த்தப்படுகின்றன; இப்படித்தான் அமணர்கள் மண்ணின் மீதான உரிமைகளை இழந்தார்கள்] இந்த இருகூட்டத்தாரையும் மொத்தமாக எதிர்த்த முசுலிம்களை அறவே கவனிக்காமல் இவர்கள் இரு கூட்டமாகப் பிரிந்து [கரிகால்சோழன் புத்தனாகவும் அவனது தங்கையை உமையைக் கெடுத்துக் கருவுறச்செய்த பரசுராமன் மகாவீரராகவும்] மோதிக்கொண்டார்கள். இந்த வரலாற்றை மறைப்பதற்கே கலப்பிரர் காலம் இருண்டகாலம்; குப்தர்கள் காலம் பொற்காலம் என ஒரு கற்பிதம் புகுத்தப்பட்டது. மணிமேகலை: 17:11-12ல்: கரிகால்சோழன் சோழநாட்டின் ஆட்சியைப்பெற்றுச் சிறப்படைந்தபோது: " நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரும் முந்நீர் அடைத்த ஞான்று. .. ." மணிமேகலை 20. 22- 25: "மலைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் கழைவளர் கான்யாற்றுப் பழவினை பயத்தான் மாதவன்(பரசுராமன்) மாற்கு(திருமா க்கு) இட்ட சாபம் ஈர்ஆறு ஆண்டு வந்தது. .. ." எனக் குறிப்பிடுகிறது; மணிமேகலை: 22. சிறைசெய்காதை 33- 34: சோழநாட்டின் ஆட்சியைச் சத்திரியனல்லாத விதுர பாண்டியனிடம் கொடுக்கப்பட்டதை: "அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசுராம நின் பால்வந் தனுகான்" எனக் குறிப்பிடுகிறது. மாபாரதம்; விராடபருவம்-அத்யாயம் 41: பிரமத்தைப்பற்றி விதுரனிடம் திருதராட்சசன் கேட்டபோது;"நான் சூத்திரன் ஆதலால் பிரமத்தைப்பற்றிப் பேசமுடியாது" என விதுரன்=புலத்திய பாண்டியன் குறிப்பிடுகிறான். இராமாயணம்: விபீசனன் இராவணனிடம் சோழநாட்டை= சீதையைத் திரும்ப ஒப்படைக்கும்படி சொன்னபோது; பொறுமை இழந்த இந்திரஜித்து: 'நம்முடையகுலம் என்ன? சக்தி என்ன? புலத்திய குலத்தில் பிறந்த சித்தப்பா இப்படிப் பேசுவது வியப்பாக இருக்கிறது'. தொடக்கத்தில் "வைஸ் வானரா" என உள்ளது சரியான உச்சரிப்பா எனத் தெரியவில்லை; நிகழ்வுகளின் காலக்கட்ட எல்லைகளைத் துல்லியமாக உணர இயலவில்லை; ஆயினும் வரலாற்றையும் விளக்கங்களையும் காண்போம். விதேகன் என்னும் சொல் அந்நியனைக் குறிக்கிறது. சரஸ்வதி -முன்னர் அக்கூட்டதர் கைப்பற்றி வாழ்ந்த வடமேற்குப் பகுதியையோ அங்கு ஒரு நதிக்கரையையோ குறிக்கிறது. எதிர்ப்புக்களை ஒழித்துக் கிழக்கு நோக்கி நகர்ந்த அவர்களைக் கோதம ரகூகணன் என்னும் புரோகித- பிராமணனும் விதேக மாதவன் என்னும் அந்நியனும் அக்னி என்னும் சூரியகுலத்து இந்தியனுடன் பின் தொடர்ந்தார்கள் என்பது சூரியகுலத்தவனின் தயவில் வாழ்ந்து அவனை அடிமைப்படுத்தவும் முயன்றார்கள் என்பதைக் காட்டுகிறது. சதாநீரா என்ற சொல் தவறாக உச்சரிக்கப்பட்டுத் தவறான பொருளும் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது; சத் நீரா -என ஏழுநதி -ஆறுகளக் குறிப்பதாகலாம். அங்கு வாழ்ந்தோரை விரட்டாமல் அப்பகுதியை அந்நியர் உரிமையுடன் கைப்பற்றியுள்ளனர். காரணம் அப்பகுதி அக்னி வைஸ்வானராவால் முன்னரே பண்படுத்தி ஆட்சி செய்யப்பட்ட பகுதி. இந்த வைஸ்வானரா என்னும் சொல் சில மாற்றங்களுடன் வஜ்ரகன், வச்சிய, விச்சிரவசு, வைச்சிரவசு, வைசம்பவானா, வைவஸ்வதா போன்று பலவாறு உச்சரிக்கப்பட்டுள்ளது. வைஸ் என்பது சூரியனின் வெப்ப உதவியுடன் நிலத்தையும் விளைச்சலையும் பெருக்கும் வைஷ்ணவ உழவரைக் குறிக்கும் முன்னடைச் சொல். இவர்களிலிருந்தே ஆட்சியாள= சத்திரியர் உருவாயினர். சத்திரியர் என்பது ஒரு வருணமாக அந்நியரால் கட்டமைக்கப்பட்ட போதிலும் அது உண்மையல்லாத வருணம். வச்சிரம்- வச்சிராயுதம் என இவர்களைத் தங்களது அடிமை வீரரராக்கிக் கொண்டனர்; புலவர் பாடல்களில் ஒரு படைக்கருவியாக உருவகித்துக் குறிப்பிட்டுள்ளனர். விச்சிக்கோ என ஒருவர் தொல்தமிழ்ப்பாடகளில் உள்ளார். இவரை நன்னன் எனவும் காண்கிறோம்: இக்கொடிய நன்னன் குறித்து ஒரு கதையும் உண்டு: ' இளங் கண்டீரக்கோவுடன்(இப்பெயர்கள் செங்குட்டுவன்= நள்ளிக்குரியவையென புறநாநூறு உரை பக்கம் 143ல் உள்ளது); நன்னன் வழியில்வந்த இளவிச்சிக்கோவும் சேர்ந்திருந்தபோது -புறநாநூறு-151- அங்குச் சென்ற பெருந்தலைச்சாத்தன் இளங்கண்டீரக் கோவைத் தழுவி மகிழ்ந்து இளவிச்சிக்கோவைத் தழுவாது விட்டபோது இள விச்சிக்கோ சாத்தனிடம் 'என்னை ஏன் ஒதுக்கினீர்' என வினவ; 'கண்டீரக்கோவின் பெண்டிர் தம் கொடையாகப் பரிசிலர்க்கு யானையளிப்பர் என்பதால் தழுவினேன்; நீயும் நன்னன் மரபிலுதித்த பெருமையும் இயற்கைக் கணங்களும் உடையவன்; ஆயினும் நின் முன்னோருள் ஒருவன் பரிசில் வேண்டிச் சென்ற புலவர்க்குத் தனது தலைவாயில்கதவை அடைத்தவன் என்பதால் உன்னையும் உனது மலையையும் பாடாமல் புலவர்கள் தவிர்த்தனர்' என்கிறார். இந்த இளவிச்சிக்கோவைப் புறநாநூறு 200ல் கபிலரும் பாடியது குறிப்பிடத்தக்கது. இந்த விச்சிக்கோவைக் கபிலர் எவ்வண்ணம் குறிப்பிடுகிறார்: ".. .நிணந்தின்று செறுக்கிய நெருப்புத்தலை நெடுவேற் களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே.. ..நீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன்.. ." எனவே புறநாநூறு 151ல் உள்ள இளவிச்சிக்கோ 200ல் உள்ள விச்சிக்கோ எனப்பட்ட நன்னனின் மற்றொரு பெண்ணுக்குப்பிறந்த மகன் என்பதையும்; நன்னனது படைக்கருவி இந்திரனின் படைக் கருவி என்பதையும் காண்கிறோம். எனவே வைஸ் வானரா எனப் பட்டவன் சந்திரகுப்தனின் தங்கையை மணந்த சேத்சென்னியின் சூரியகுல முன்னோனைக் குறிக்கும். சேத்சென்னியின் மகள்வழிப் பேரன் செங்குட்டுவனை, வானரன்-குரங்கு எனக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. செங்குட்டுவனே இளங்கண்டீரக்கோ; அவனைத் தழுவியவரே கரவேலன் எனப்பட்ட பெருந்தலைச் சாத்தன். குறிப்பு: பல கட்டுரைகளாக இக்கட்டுரையின் தொட்சி வெளியிடப்படும்.http://nhampikkai-kurudu.blogspot.in/