சனி, 13 செப்டம்பர், 2014

தமிழ் பிராமி கல்வெட்டுகள்



தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன.

ஆனைமலை கல்வெட்டில் 'அரட்ட' என்ற சொல்லில் ' ட்' என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
                                                                                             அழகர்மலை

மதுரைக்கு வடக்கே வைணவர் திருத்தலமான அழகர்கோவில் உள்ளது. அழகர் கோவலின் கோட்டையை வெளியே கிழக்காக மேலூர் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் அதனில் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன.
 சிந்துவெளிக் காலம் முதல் சங்க காலம் வரையில் மக்கள் புள்ளி இடும் ஒற்றெழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்ததனாலேயேபிராமி கல்வெட்டுகளிலும், பானைஓடுகளிலும் புள்ளி இட்ட எழுத்துகளை காண முடிவதில்லை. இதை எண்ணிப்பாராமல் ஐ.மகாதேவன் போன்றோர் தமிழில் மெய் எழுத்துகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவிலேயே எழுதப்படத் தொடங்கியதாக முடிபு கட்டிவிட்டனர். இதனால் புள்ளி பற்றி குறிப்பிடும் தொல் காப்பியம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினது அல்லது 7 ஆம் நூற்றாண்டினது என மனம்போன போக்கில் கருத்துரைக்கின்றனர். வேடிக்கை என்ன என்றால் தொல் காப்பியத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள சில குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் 2,000 ஆண்டுகள் பழமையது என்பதை இவர்கள் ஏற்பது தான். மக்கள் ஓலைகளில் துளைப்படுத்தி மெய் எழுத்துகளை எழுதினால் ஓலை கிழிந்துவிடும் என்பதற்காக ஈற்றாகவும் இடையிலும் வரும் மெய் எழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்துள்ளனர் அதையே கல்வெட்டுகளிலும் காசுளிலும் கைக்கொண்டனர் என்பதே ஏற்கதக்கது.
மாங்குளம்

மதுரைக்கு வடக்கில் மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கு நோக்கிச் சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டி மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  'ஓவாமலைஎன்றும் 'கழுகுமலை' என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
 கொங்கர்புளியங்குளம்

    மதுரை மாவட்ட திருமங்கலம்  வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் அமைந்து உள்ளது. இவ் ஊர் அருகில்  பெருமாள் கோவில்  மலையில் இயற்கையான் குகைத்தளத்தில் 50 க்கும் மேலான்  கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.

விக்கிரமங்கலம்
  
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. செக்கானூரணி வழியாக விக்கிரமங்கலம் செல்லும் மதுரை நகர் பேருந்துகள் இக் குன்றின் வழியே செல்கின்றன. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
மேட்டுப்பட்டி

மதுரைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில்   சித்தர் மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும்  வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறையில் வெட்டப்பட்ட விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் என பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து உசிலம்பட்டிப் பேருந்தில் சென்றால் இக்குன்றின் அடிவாரத்திற்குச் செல்லலாம்.
திருமலை


சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
திருப்பரங்குன்றம்


மதுரை மாநகருக்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் மூன்று கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

முத்துப்பட்டி
மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி  அமைந்து உள்ளது.  முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும்  220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன.  குகைத்தள மழைவடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.

ஜம்பை

விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு  அருகில் தென் பெண்ணை
ஆற்றின் வடகரையில் இவ்வூர அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்கள் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்  வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது. அஙகு வழவழப்பாகச் செதுக்கிய அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் ஆழமாகவும் செம்மை ஆகவும்  வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

ஐயர் மலை


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை எனும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரிஷ்வரர் மலையில்  இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.

திருமலை


சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கருங்காலக்குடி

மதுரை மேலூர் வட்டத்தில் மேலூரிலிருந்து  திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி  விளிம்பில். இதில் ஒரு கல்வெட்டு உளளது.
முதலைக்குளம்

மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் அமைந்து உள்ளது முதலைக்குளம். விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை அருகே சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு  என்ற குகையின் புருவத்தில்    164 செ.மீ. நீளத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.

மறுகால்தலை


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்ஏரி என்ற ஊரின் அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளம் ஒன்று சமணத் துறவியர் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டு  உள்ளது.


வரிச்சியூர்


மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர்  உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில்  மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும்கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி  விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.
விக்கிரமங்கலம்
  
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. செக்கானூரணி வழியாக விக்கிரமங்கலம் செல்லும் மதுரை நகர் பேருந்துகள் இக் குன்றின் வழியே செல்கின்றன. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக