சனி, 13 செப்டம்பர், 2014

பாவையும்,இலக்கியங்களும்



                   பாவையும்,இலக்கியமும்
வழுதி என்போரே விதுரனின் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள்; தாம்ரவர்ணர் எனக் குறிக்கப்பட்டனர். விதுரன் மற்றும் செழியனிடம் சோழநாட்டை ஒப்படைக்கக் காரணம் மிக நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் மிக முக்கியமான காரணம் வசிட்ட அலெக்சாந்தனுக்கு எதிராக விசுவாமித்திரனைக் கொண்டு குருதிப்பலியற்ற வேள்வியைச் செய்ததும், முசுகுந்த பரசுராமனால் கெடுத்துக் கருவுற்றா கரிகாலின் தங்கை பாவையையும் கருவில் உள்ள குழந்தையையும் அழிக்கவேண்டும் என்பதே. கரிகால்சோழனுக்கு விதிக்கப்பட் தண்டனையை மணிமேகலை 20/22-25: "மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்து; கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான் மாதவன் மாற்கு இட்ட சாபம் ஈர்ஆறு ஆண்டு வந்தது.."எனக் காவிரியின் இருகரைகளையும் சேர்ந்த பிளவுபடாத வலிமைமிக்க நாடுகளுக்கு இந்திரனாக முயன்ற கரிகால்சோழன் செய்த வேள்வியை உறுதிசெய்கிறது. நாட்டை ஆளும் உரிமையைச் சேது மன்னர்களிடமிருந்து பறிக்கும் எண்ணம் கொண்ட முசுகுந்த பரசுராமனின் செயல்களையும் உறுதிப்படுத்த மணிமேகலை சிறைசெய்காதை. முனிவன்மன்னனை வாழ்த்தல்: "உயர்ந்தோங் குச்சி உவாகதி போல நிலந்தோங்கு வெண்குடை மன்னகம் நிழல்செய வேலுங் கோலும் அருற்கண் விழிக்க தீதின் அருள்க நீ யேந்திய திகிரி நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கினிதாக வாழிய வேந்தே!.......... மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகாதொழி* நீயெனக் கன்னி ஏவலின், காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினை இ நாவலந் தன்பொழில் நண்ணார் நடுக்குறக்......... அரசாளுரிமை நின்பா லின்மையின் பரசுராம நின்பால்வந் தனுகான் அமரமுனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான் தோன்றளவும் சுகந்தன் காத்தல் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பத்திக் கிட்டீங் குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்" எனக் குறிப்பிடுகிறது. இதில்,ஆட்சியில் இருந்த 'காந்தமன் [கரிகால்சோழன்] சத்திரியன் என்பதால் அவனை, பரசுராமன் அழிக்க முற்படக்கூடும், அதனால் ககந்தன் [விதுரன் அல்லது அவனது மகன் செழியன்] சத்திரியன்அல்ல என்பதால் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு நீங்கி பொதியைமலையில், தண்டனைபெற்று துயருற்று இருக்கும்,'மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்' கரிகால்சோழன்முன் தோன்றாமல் மறைந்து சென்றுவிடு,அங்கு பொதியைமலையில் வீற்றிருக்கும் [கரவேலன்] அகத்தியனின் துயரமான தண்டனைக் காலம் முடியும்வரை, நான் மீண்டும் இங்கு தோன்றும்வரை காத்திரு. அதுவரை இந்நகர் காகந்தி [கன்னிவனம்] என இருக்கட்டும்', என்று கூறுவதாக உள்ளது. நிறைகருவுற்ற கரிகாலின் தங்கை முசுகுந்த பரசுராமனால் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டாள். பெருமளவில் பாதிக்கப்பட்ட கரிகால்சோழனின் தங்கை பாவை தீர்த்தங்கரியானதாகப் பல பாடல்கள் உணர்த்துகின்றன. சோழநாட்டைப்பெற்ற செழியனின் ஆட்சி குறித்த தகவல்கள் சிலப்பதிகாரத்தில் விரிவாக உள்ளன. 'கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பன்னின் பயன்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன' என்று தன் ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்து....... எனச் செழியனின் மனைவி வருந்துமளவுக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறது. மணிமேகலை 99- 104: "எம்கோ வாழி என்சொல் கேண்மதி நும்கோன் உன்னைப் பெறுவதன் முன்நாள் பன்னீ ராண்டுஇப் பதிகெழு நல்நாடு மன்னுயிர் மடிய மழைவள்ம் கரந்தீங்கு ஈன்றாள் குழவிக்கு இறங்கா ளாகி தான்தனி திண்ணும் தகைமையது ஆயது" எனக் குறிப்பிடுகிறது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதாகப் பல பாடல்கள் உள்ளன. கலித்தொகை 5 நெய்தல் கலி: "வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்த நல்ஆற்றின் உயிர்காத்து நடுக்குஅறத் தான்செய் தொல்வினைப் பயன்துய்ப்ப துறக்கம்வேட்டு எழுந்தாற்போல் பல்கதிர் ஞாயிறு பகல்ஆற்றி மலைசேர ஆனாது கழுல்கொண்ட உலகத்து மற்றுஅவன் ஏனையோன் அளிப்பான்போ லிகல்இருள் மதிசீய்ப்பக் குடைநிழல் ஆண்டாற்க்கும் ஆளிய வருவாற்கு இடைநின்ற காலம்போல்.. .. .. மாலை என்மனார் மயங்கி யோரே" என வேள்வி விளைவுகளால்; ஞாயிறு-கரிகால் நாட்டைநீங்கினான்; பெற்ற அந்திரகுலச் செழியன்-'மதிசீய்ப்ப'; முசுகுந்த= பரசுராம பார்கவப் பார்ப்பனருடன் சேர்ந்து சதிசெய்ததையும் குறிப்பிடுகிறது. 'மாலை' என: முசுகுந்த= பரசுராம கூட்டம் நிகழ்த்திய போரில்; அந்தணரும் ஏழுமுனிவர்களும் தூயசித்தர்களும் மக்களும் உட்பட 88000ம்பேர்; தென்புலத்தார், பிதிர்கள், தேவர்கள், நல் ஒழுக்கங்காத்துக் கடைப்பிடிப்போர் இறந்ததாக; விஷ்ணுபுராணம் குறிப்பிடுகிறது. அகநாநூறு13: கரிகால்சோழன் செய்த வேள்வியின் விளைவுகளை: "வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின் விழுமிது நிகழ்விது ஆயினும் -தெற்குஏர்பு கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச் சாயல் இன்துணை இவற்பிரிந்து உறையின் நோய்இன் றாக செய்பொருள்" என சூரியகுடிக் கோடைப்பொருநன்-சேத்சென்னி- தெக்கன் பண்ணிய வேள்வியின் விளைவுகளாலும் முசுகுந்த பரசுராமனின் சதியாலும் நிகழ்த்தப்பட்ட பலகொலைகளாலும் கரிகால்சோழனுக்கும் பாவைக்கும் அந்தணருக்கும்;12ஆண்டு தண்டனைவிதித்து நாடுகடத்தினர்(பரி-பா2/60-64,17/28-32,புறம்361, 366,400); நிறைகருவுற்ற பாவையைக் காக்கச் சென்றதால் கரிகாலும் பாவையும் காணாத நிலையில்; அகநாநூறு 13 பாடலின்படி: " .. தெறல்அரு மரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும் .." என; "இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன்" செழியனுக்குச் சோழநாட்டை ஆள்வதற்கான ஆரம் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. மேலும் இதனை மனிமேகலை- 165- 169: மறயிருல் இரிய மன்னுயிர் ஏமுற அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றும் காறும் செத்தும் பிறந்தும்செம்பொருள் காவா இத்தலம் நீங்கேன் இளங்கொடி" என உணர்த்துகிறது. செழியனை அடக்கி நீக்கியபின்னர் சோழபாண்டியனாக அமர்த்தப்பட்டவனே வெற்றிவேற்செழியன். இராவண செழியனின் வரலாற்றை மேலும் விரிவாக அறிய விரும்புவோர் http://nhampikkai-kurudu,blogspot.com தளத்தில் காணலாம்.
http://nhampikkai-kurudu.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக