வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தமிழர் எண் விளையாட்டுகள்



தமிழர் எண் விளையாட்டுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறுவர் முதல் பெரும் புலவர்கள் வரை எண்களைக் கொண்டு விளையாடி மகிழ்வதற்கென சில பாடல்கள், விடுகதைகள் போன்றவைகளை அமைத்திருக்கின்றனர். இவைகளை எண் விளையாட்டு என்கின்றனர்.
பொருளடக்கம்
சிறுவர் விளையாட்டு
ஒரு குடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததுஎன்று ஒன்று முதல் பத்து வரை இருவர் எதிரெதிராக இடைவெளிவிட்டு நின்று கைகளை மேலே தூக்கிக் கோர்த்துக் கொள்ள அதன் இடைவெளியில் மற்றவன் புகுந்து சொல்லிச் செல்லும் போது பத்தாவது எண் சொல்லப்படும் போது நுழைபவன் பிடித்துக் கொள்ளப்படுவான். பிடிபடாமல் தப்புவது அவன் திறமையைப் பொறுத்தது. இப்படி எண்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு இன்றும் உள்ளது.
பள்ளிச் சிறுவர் மறை விளையாட்டு
எண் விளையாட்டு (39)
இது ஒரு ஊழ்வலி வேடிக்கை விளையாட்டு.
ஒருவர் 10-க்குள் ஓர் எண்ணை மறைவாக எழுதி வைத்துக்கொள்வார்.
அது எத்தனை என்று மற்றவர் 6 வாய்ப்புகளுக்குள் சொல்லவேண்டும்.
சொல்லிவிட்டால் அவர் எழுதலாம்.
சொல்லாவிட்டால் மீண்டும் எழுதியவரே எழுதுவார்.
சரியாகச் சொன்னதற்கு மட்டும் வெற்றிப்புள்ளி.
அதிக வெற்றிப்புள்ளி ஈட்டியவர் வெற்றி.
எண் புதிர் விளையாட்டு
சிறுவர்கள் எண்ணைக் கொண்டு புதிர் அமைத்து விளையாடும் முறையும் முன்பு இருந்திருக்கிறது.
டா டா டா டா டா டா அது
டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை
என்று சொல்லி விளையாடுவார்கள். இதில் டா எனும் எழுத்து பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு புதிருக்கு விடை காண வேண்டும். அதாவது ஆறுடா அது பத்துடா மாட்டைஎன்று சரியான விடையைக் கணிக்க வேண்டும்.
விடுகதை விளையாட்டு
விடுகதை வழியாகவும் எண் விளையாட்டு இருந்துள்ளது. இதன் மூலம் சிறுவர் சிறுமியர்க்கு எண் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை, அஃது என்ன?
விடை: பல்லாங்குழி
ஏழும் ஏழுமாக பதினான்கு குழிகள் பல்லாங்குழியில் இருக்கும். இதைக் கொண்டு இந்த விடுகதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் எண் விளையாட்டு
தமிழ் எண்களை நினைவில் கொள்ளும் விதமாகவும் சில விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தலையில் எட்டு
இடையில் ஐந்து
கடையில் மை
எல்லாம் சேர்ந்தால் மேன்மை. அஃது என்ன?
விடை: அருமை
தமிழ் எண் வடிவத்தில் எட்டாவது எண் வடிவம் அ, ஐந்தாவது எண் வடிவம் ரு, இவையுடன் கடைசியாக மை சேர்த்து விடை காணப்பட்டுள்ளது.
ஊர் பெயர் விளையாட்டு
ஊரின் பெயரை எண்களைக் கொண்டு விடுகதை வடிவில் அமைத்து விடை காணச் சொல்லும் விளையாட்டும் இருந்திருக்கிறது.
எட்டெழுத்தில் ஓர் ஊரின் பெயர்
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு
அஃது என்ன?”
எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து விடை காண வேண்டும். அதாவது திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் திருவாவினன்குடி என்று விடை காண் வேண்டும்.
இலக்கியத்தில் எண் விளையாட்டு
பழந்தமிழ் சிலேடைப் பாடலொன்றில் பின்வருமாறு வருகிறது.
"பூனக்கி ஆறு கால்
புள்ளினத்திற்கு ஒன்பது கால்
ஆனைக்குக் கால் பதினாறு ஆனதே"
இங்கு
பூனக்கி- பூ + நக்கி = பூச்சியினம்.
ஒன்பது கால் = 9 x 1/4= 2 1/4 = இரண்டு கால்.
கால் பதினாறு = நாலு கால் என விளக்கம் பெறலாம்.

சிந்துசமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடு



சிறுமலையில் 4000ம் ஆண்டுகள் பழமையான குறியீடு கண்டுபிடிப்பு!
ஆகஸ்ட் 28,2012
http://stat.dinamalar.com/new/temple/images/icon_print.gif 
அ-
http://stat.dinamalar.com/new/temple/images/SliderArrow.gif
+
http://img1.dinamalar.com/kovilimages/news/TN_120828103717000000.jpg
Stay connected to temple.dinamalar.com

dinamalar
பழநி: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், 4000 ஆண்டுகள் பழமையான பளியர் இன பழங்குடிகளின் குறியீடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சிறுமலை பளியர் இனபழங்குடிகளின் வாழ்வு முறை ஆய்வின் போது, இந்த குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை சிந்துசமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடுகளை போலவே உள்ளன.  தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் சந்திரபாபு, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியை திலகவதி, திண்டுக்கல் கிராண்டில் கல்லூரி வரலாறு பேராசிரியர் பாலகுருசாமி, மற்றும் மாணவர்கள் கொண்ட குழு இந்த குறியீடுகளை கண்டுபிடித்துள்ளனர். 
இதுகுறித்து நாரயணமூர்த்தி கூறியதாவது: சிறுமலை பழங்குடியினர் வணங்கும் குலதெய்வ கோயில் அருகே உள்ள கன்னிமார் 7 சிலை புதைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டில் இந்த குறியீடுகள் உள்ளன. குறிஞ்சி இன தமிழர்களான பளியர் இன மக்கள், பண்டைகாலத்தில் வேட்டையாட கல் ஆயுதங்களை பயன்படுத்தினர். மேலிருந்து கீழாக குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சிந்துசமவெளி குறியீடுகள் போலவே இவை குறிக்கப்பட்டுள்ளன. அதன்படி படித்தால் கோ (கடவுள்) அல்லது மேல் என படிக்கலாம். ஹைரோ கிளிபிக் எழுத்துவடிவில் இந்த சிறுமலை குறியீடுகள் எழுதப்பட்டுள்ளன.  இந்த எழுத்து முறை எகிப்திய வடிவமுறை எழுத்துகளை பின்பற்றியது. சமவெளிபகுதியான சிந்துவில் கிடைத்த 134வது குறியீடும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சிறுமலை குறியீடும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றது. ஏற்கனவே ஏராளமான சிந்துசமவெளி குறியீடுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. மேலும் சிறுமலை குறியீடுகள் சிந்துசமவெளி நாகரிகம், தமிழர்களின் நாகரிகமே என்ற கருத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது, என்றார்.