சனி, 17 ஆகஸ்ட், 2013

பண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்

பண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்
ஒரு சமுதாயம் ஆக்கப்பூர்வமான முறையில் செழித்தோங்க வேண்டுமெனில், அந்தச் சமுதாயம் பண்பாட்டின் தொட்டில்போல் விளங்கவேண்டும் என்பதைப் பசுமரத்தாணி போல் உணர்த்துகிறார் வள்ளுவர். பெண் உரிமை காக்கும் வள்ளுவர் பண்பு கற்பு போன்றவை பெண்களுக்கும் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்துகிறார். சமுதாயத்தில் பண்பாடு காக்கப் பட வேண்டுமெனில் ஆண் பெண் பண்பு நலன் மட்டுமல்லாது அன்பும் இருபக்கமும் இழைந்தோட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் அன்பு, பாசத்துடன் விளங்க, மற்றொருவரோ பாராமுகமாக இருந்தால் அன்பு மட்டுமல்லாது பண்பும் தடம் புரண்டு விடும். எனவே அன்பும் பண்பும் கலந்து ஓங்கும் இல்லற சமுதாயத்தை வடிவமைக்கும் வகையில்,
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது
- – - (குறள் 1196)
என்று போதிக்கிறது குறள். திரு. சி.கே. இரவிசங்கர்
கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி
கே.எஸ்.ஆர். கல்வி நகர்
திருச்செங்கோடு – 637 209.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக