முற்காலத் தமிழ் நாகரிகம்

முற்காலத் தமிழ் நாகரிகம் காந்திராஜன் & தளவாய் சுந்தரம் - 25 December, 2004 திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் , இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில் , தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு , சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி சமச்சிரான வெப்பம் ; அரிதாகத்தான் மழை பெய்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. தாவரங்கள் உயிர்த்தெழுந்ததும் கானமயில்களின் உற்சாக நடனம் தவறாமல் காணக்கிடைக்கும். இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள் , மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் ஆதிச்ச நல்லூர் தான் என்பதை உறுதி செய்கின்றன. விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் சென்ற வருடம் 600 சதுர கி.மீ. பரப்பில் மட்டும் 160 க்கும் மேலான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் எலும்புக்கூடுகள் , உ...