ஞாயிறு, 25 டிசம்பர், 2011

காலகணக்கு

1 ."கல்பம்" என்ற ஆண்டுக் கணக்கை பயன்படுத்திய இந்திய தத்துவ அறிஞர்களுக்கு, "ஒளி ஆண்டு" கணக்கு எப்படி வியப்பூட்டும் விஷயம் அல்லவோ, அதே போல "சார்பு கோட்பாடு " கண்டு பிடிப்பும் அவர்க்களுக்குப் புதிதல்ல.- ஆலன் வாட்ஸ் - ( 1915 - 1973 ),பிரிட்டன் தத்துவ அறிஞர். 2 .பிரபஞ்சம் ஆழ்ந்த , எண்ணற்ற பிறப்பு , இறப்புக்களைக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரே மதம் இந்து மதம் தான்.நவீன பிரபஞ்ச கோட்பாடுகளுடன் ஒத்துப் போகும் கால அளவுகளைக் கொண்ட ஒரே மதமும் அது தான்.-- டாக்டர் கார்ல் ஷாகன்( 1934 -1996 ), வான் இயற்பியலாளர். 3 .இந்தப் பூமியின் வயது, உலகின் கால அட்டவணை ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைகளை பழங்கால ரிஷிகள் உருவாக்கினர்.-ஆர்தர் ஹோம்ஸ் (1895 - 1965 ), புவியியலாளர், துர்ஹம் பலகலைக் கழக பேராசிரியர்.இங்கிலாந்து. (மேற்கண்ட 3 மேற்கோள்கள், தினமலர்,மதுரை பதிப்பில், இது இந்தியா என்னும் தலைப்பில் முறையே அக். 28 ,நவ 17 ,மற்றும் 22 ஆகிய தேதிகளில் வந்தவை). ///கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம் கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம் கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம் கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்///

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக