ஞாயிறு, 25 டிசம்பர், 2011

விளையாட்டு

கிலி கிலியாடல் கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பிக் மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. சிறுபாணாற்றுபடை என்ற இலக்கியத்தில்.. கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலியாடும் என்று வருகிறது. இன்று முதல் செல்வந்தர் வீடுகளில் உள்ள குழந்தைகளின் அழுகையை அடக்க தம் தகுதிக்கேற்பவோ, தகுதிக்கு மீறியதாகவோ கிலுகிலுப்பைகளை வாங்கிக் குழந்தைகள் கைகளில் கொடுக்கப்படுவது நம் கண்கூடு. கோழிப்போர் தமிழர்கள் விலங்குகள்,பறவைகள் போன்றவற்றுக்கும் இடையே வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர். சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் (305) குப்பைக் கோழித் தனிப்போர் போல என்று குறிப்பிடுவதிலிருந்து கோழிப்போர் சங்க காலம் தொட்டு வழக்கிலிருந்தமையை அறிய முடிகிறது. இவ்விளையாட்டு இன்று பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. கழங்காடுதல் மகளிர் விளையாட்டுகளில் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது மேடான பகுதிகளில் “கழங்கினை“ (கழங்கு-சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) வைத்து ஆடுவர். இப்பொழுது இது பாறைகளித்தல் அல்லது சுட்டி பிடித்தல் என்று வழங்கப்படுகிறது. கழங்கிற்குப் பதில் சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர் பொலஞ்செய் கழங்கிற் தெற்றியாகும் வட்டாடல் தமிழர் விளையாட்டில் மிகவும் சிறப்புற்றிருந்த விளையாட்டு வட்டாடல் ( வட்டாடல்-வட்டை உருட்டி சூதாடுதல்) இதற்காக இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம் ஒருவகைசூதாட்டத்தை ஒத்தது. இவ்விளையாட்டை திருவள்ளுவர் அரங்குஇன்றி வட்டுஆடி அற்றேநிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்( 401) ஆகவே இந்த வட்டாடல் விளையாட்டு குறள் காலத்து விளையாட்டு என்பது தெரிய வருகிறது. எனவே பழந்தமிழரும் விளையாட்டுகளிலும் அறிவியல் வழி சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே தமிழருக்கு மரபு சார்ந்த பெருமையாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக