சனி, 20 டிசம்பர், 2014

தமிழ்ப் புலவர்களின் இயற்பியல் அறிவு


தமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு


அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

"
மகரக் குழைகளும் ஊசலாட
பங்கய மடமாதர் நோக்கி இருவேம்
ஆட்ட - அவ்வூசலில் பாய்ந்திலது
இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய"
- (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)

என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும், பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டதை உணரலாம்.

அன்றைய மனிதன் கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியது. இதைப் போன்று பல்வேறு சங்க பாடல்களை பார்க்கும் போது, தற்போதைய பேராசிரியர்கள் போல சங்க கால புலவர்கள் பல்வேறு துறைகளில் இருந்திருப்பார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
 — with Udhaya Kumar.


விஞ்ஞானமும் மெய்ஞானமும்--புலவர்களின் இயற்பியல் அறிவு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrryxilRnQ54gqNszqida7fGn1Xx7ECxNmRJIwbawHw0EJlIfcYmmmJSitvULZd2LKiLJPit6mBmsqyujS_jQ-u2IOt1bnYbEGmMFmiUNyyEmBH7XIP_QSP8qLNj4PeB4jk_P4sr7mjl8/s320/6a00d8341bf67c53ef01676826af8e970b-800wi.jpg

விஞ்ஞானம்:
           
ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் Higgs boson எது? என்பதை கண்டறிய சோதனை பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLkhQLbewpChg2h-_iM3muMApXrpmE09bXrW-A6MxqaSAgwXq7YCzW480K7EjnnDtg45N64OYJT5bmctEedCR1iaL4LjUAwbuYKwpqKCUVNrR1maWJ4yoO4KTXHG1yztgTPLRdcKJkrBM/s320/higgs-boson_696051a.jpg

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு சமீபத்தில் அதற்க்கு வெற்றியும் கண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwhH_Ft0oR6JA3p5fZ3qjlK8TV5SUjIJZgm8g-FAGbGHoNEP4Z_1C2THoACjvBR_EUb25fnjJPxLc-A8V5fjz3oETpQB6CUHOIjdb5s5A1Uddtt6UobTEUvrSMkqUu-pqxfRnWNSzDfpg/s320/_61348406_higgs_standard_mod_464.gif

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் இது பற்றிய குறிப்பு எழுதி உள்ளார் அதை நீங்களே பாருங்கள்.

மெய்ஞ்ஞானம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:
அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzYchrmywdR3RKlch7f5S0_XHYXJpgACmggLTVWBopehLqHwpiRqR_FuW3jTIGbzz1QthZcoPHuO6hCLNOxsi-94eftbUf1yAUzwF4iuCX797ZcVHC-Z3flTC2uv70P4ar5sLKrBGeVo4/s1600/Sri+Thirumoolar+Siddhar.jpg


என்ன வியப்பாக உள்ளதா லட்சகணக்கான கோடிகள் செலவு செய்து இன்றைய தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து கூறிய கூற்றை திருமந்திரம் என்றோ கூறிவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக