வெள்ளி, 15 மார்ச், 2013

மூங்கில் சுவடிகள்




2000ம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் சில மூங்கில் சுவடிகள், பண்டைய ச்சின் வம்சத்தின் ஆரம்ப கால வரலாற்றை மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிங்குவா பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் திரட்டிய, வெளிநாடுகளில் இருந்ததாக கூறப்படும் இந்த மூங்கில் சுவடிகள் ச்சின் வம்சக்காலத்தின் ஆரம்பகால வரலாறு இப்போது நினைப்பதுபோல் இருக்கவில்லை என்பதை கூறும் தகவல்கள் கொண்டவை எனக் கூறுகிறார்கள். 2388 மூங்கில் சுவடிகள் கொண்ட இந்த திரட்டு 2008ம் ஆண்டு சீனாவுக்கு திரும்பின. தாள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக மூங்கிலையே சீனர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தினர். இப்போது நாம் குறிப்பிடும் இந்தச் சுவடிகளை கார்பன் டேட்டிங் எனும் வழிமுறையில் எத்தனை ஆண்டு பழமை வாய்ந்தவை என்று ஆய்வுக்குட்படுத்திய பின் கிமு 305ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிமு 213ம் ஆண்டுவாக்கில், ஷு ஹுவாங் என்பவர் அக்காலத்தில் கன்ஃபியூசியஸை பின்பற்றியவர்கள், அவரது ஆதரவாளர்கள் திரட்டிய ஏடுகளையெல்லாம் எரித்து சாம்பாலாக்க கட்டளையிட்டார். இந்த எரியூட்டலில் சிக்காமல் தப்பித்தவை நாம் கூறும் மூங்கில் சுவடிகள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.ஆக இந்த வரலாற்று சம்பவமான நூல் எரியூட்டலுக்கு தப்பிய இந்த சுவடிகள், அதற்கு பிறகு எழுதப்பட்ட நூல்களைவிட, மதிப்பான தகவல்களை, திரட்டுகளை உள்ளடக்கியவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1 கருத்து: