வெள்ளி, 15 மார்ச், 2013

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம்

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட் சியகத்தில் கண்காட்சியில் 2011 பாரதியாரின் கைப்பட எழுதப்பட்ட கவிதை கள் தொகுப்பு, தொல் காப்பியம், தமிழ் ஆங் கில அகராதி, வடமொழி ஆங்கில அகராதி, தமிழ் பழங்கால ஓலைச்சுவடி, வெற்றோலை, சதுரங்க விஹாரா போன்ற ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழ் மொழியை கற்க விரும்புபவர்களுக்கு உதவ உயிரெழுத்து மற் றும் மெய்யெழுத்தின் வரிசையில் உள்ள அரிச் சுவடி, யுனானி மருத்து வம் தொடர்பாக அரபு மொழியில் கி.மு.1316ஆம் ஆண்டு கையால் தயா ரித்த காகிதத்தை கொண்டு எழுதப்பட்ட கமில் உஸ் சினஅத் போன்றவை இடம் பெற்றுள்ளன.
மேலும், வால்மீகி ராமாயணம், தேவாரம், சிவஞானபோதம், பந்தோதயா, பகவத் கீதை, பெரியபுராணம், கும்பமுனி வைத்தியநூல் போன்ற ஓலைச் சுவடி களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஓலைச்சுவடியில் எழுதும் முறை, ஓலைச் சுவடிகளில் எழுதப் பயன்படுத்தப்படும் கருவிகள், ஓலைச்சுவடி களை படிக்கும் முறை, பழங்கால எழுத்து பல கைகள், மிகவும் பழமை யான எழுத்து பொறிப் புகள், காகிதச்சுவடி, சுவ டிகளுக்காக பயன்படுத் தப்பட்ட பனை மரங் களின் வகைகள் போன்ற வையும் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன.
http://www.viduthalai.in/home/india/74-government/3506-2011-02-15-10-22-25.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக