வியாழன், 9 ஆகஸ்ட், 2012

யாழ் கோட்டை


யாழ் கோட்டை

jaffna fortjaffna fortjaffna fort
ஒல்லாந்தரால் இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட இக்கோட்டையானது நட்சத்திரவடிவில் அதன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இக்கோட்டையின் தோற்றக்காலத்தை யாழ்ப்பாணத்தின் மீதான பராந்தகச்சோழனின் ஆட்சிக்காலத்துடன் இணைக்கப்படக் கூடியதாகவுள்ளது. இக்கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பின் தோம்புப் பெயர் சோழவணிக கணமொன்றுக்குரியதாகப்படுவதிலிருந்து இக்கோட்டையரசனின் தோற்ற காலத்தினை கி.பி.11ம் நூற்றாண்டுக் காலத்துடன் கொள்ள முடியும். யாழ்ப்பாணக் கோட்டையின் இடிபாடுகளுக்குள்ளிலிருந்து ஏராளமான சோழர் காலத்திற்குரிய மட்பாண்டங்கள் சேகரிக்கப்பட்ட வகையிலிருந்து இக்கருத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். போர்த்துக்கேயருடைய யாழ்ப்பாண வருகையுடன் (கி.பி. 1619) சோழர் காலத்துக் களிமண் கோட்டை புதுப்பிக்கப் பெற்று ஒரு சிறிய வடிவத்தினைப் பெற்றுக் கொண்டது. கோட்டையின் மையப்பகுதியில் காணப்படும் சிறிய கத்தோலிக்க தேவாலயம் (ஒ.எல்.ஆர்.சேர்ச்) போத்துக்கேயர் காலத்து யாழ்ப்பாணக் கோட்டையின் மையப்பகுதியாக விளங்கியது. ஒல்லாந்தர் வசம் யாழ்ப்பாணம் கையளிக்கப்பட்டதுடன் (1696) யாழ்ப்பாணக் கோட்டை அகல்விக்கப்பட்டு நட்சத்திரவடிவினைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணக் கோட்டை ஒரு தொல்லியல் கருவூலமாகும். தமிழ்க் கல்வெட்டுக்கள் பல அதன் புறச்சுவர்களில் மறைத்து வைத்துக் கட்டப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களிலுள்ளே தொல்லியல் கருவூலங்கள் காணப்படுகின்றன. இதனை முழுமையான ஆய்விற்கு உட்படுத்தும் போது வரலாற்றுத் தகவல்கள் பல எமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக