Tuesday, 28 August 2012

போதிதர்மன் குமரி மாவட்டத்தை சாந்தவரே


போதிதர்மன் குமரி மாவட்டத்தை சாந்தவரே……http://jainkanjiracode.blogspot.in/2012/06/blog-post_05.html
போதிதர்மன் குமரி மாவட்டத்தை சாந்தவரே……
                                                                                                                -ஜெயின்காஞ்சிரக்கோடு

                        ஏழாம் அறிவு திரைப்படம் வெளி வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்த மிக முக்கியமான கதா பாத்திரம், போதிதர்மர் கதா பாத்திரம்.  சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த மறத்தமிழனைப் பற்றி தமிழ்நாட்டில் ஏழாம் அறிவுத் திரைப்படம் வெளிவராமல் இருந்திருந்தால் பலத்தமிழர்கள் கேள்விப்பட கூட வாய்ப்பில்லாமல் போய் இருக்கும்ஆனால், போதிதர்மர் என்ற மறத்தமிழன் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரபலம் ஆனவர் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்  ‘குங்பூகலையைத் தோற்றுவித்தவர்.
                        போதிதர்மனின் வரலாற்றை ஆய்வாளர்கள் பலவிதமாக கூறுகின்றனர் அதில் போதிதாமன் தென்இந்தியாவைச் சார்ந்தவார் என்றுக் கூறுவதில் பெரும்பாலானோர்க்கு ஐயம் இல்லைபோதிதர்மன் பல்லவ மன்னனின் மகன் என்று பெரும்பான்மையான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லைஏனெனில், சாதாரணக்குடியில் பிறந்த ஒருவனை, அவன் செய்யும் செயலால், அவனது அறிவாண்மைமையால், அவனை மேல்குடியில் பிறந்தவனாக கூறி உயர்குடியாக்கம் செய்வதை பலகாலமாக ஆதிக்க  சமுகம் முக்கிய பணியாக செய்து வந்திருக்கிறது.
                        சான்றாக சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளை  நாம் சேரமன்னனின் தம்பி என்றுக் கூறிவருகிறோம்ஆனால் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் தனதுஇளங்கோவடிகள் யார்என்னும் நூலில் இளங்கோவடிகள் ஓர் வணிகர். அரசனைவிட வணிகர்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்கவே சிலப்பதிகாரத்தை இளங்கோ படைத்தார் எனச் சுட்டுகிறார்மட்டுமல்ல இளங்கோ ஒரு வணிகர் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.
                        ஒரு வணிகன் தான் எழுதியப் படைப்பால் அப்படைப்பின் சிறப்பால் உயர்குடியாக்கம் செய்யப்பட்டு வணிக குலத்தைவிட சற்று உயர்ந்த அரசமரபிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இதை நாம் ஏற்றுக் கொண்டும் இருக்கிறோம். இதே நிலைதான் போதிதர்மன் வரலாற்றிலும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து.
                        சில மாதங்களுக்கு முன்னார் ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் போதிதர்மன் வரலாறு பற்றிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் Institute of Asian Studies-ன் இயக்குநர் முனைவர்  ஜாண் சாமுவேல் என்பவர் போதிதர்மரைப் பற்றிய வரலாற்றை விளக்கினார்ஆவர் கூறிய அனைத்துமே போதிதர்மன் பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு ஜப்பானிய ஆய்வாளரின்ன் கருத்துக்களை எடுத்தியம்புவதாக அமைந்திருந்ததுஅவரது கருத்துக்களை நான் அடுக்குகிறேன் படியுங்கள்.
                        1.                    போதிதர்மனின் வரலாற்றைக் கூறும் கல்வெட்டு ஒன்று சீனாவில் போதிதர்மர் வாழ்ந்த குகை அருகே காணக்கிடைக்கிறது அதில்காஞ்சிஎன்றச் சொல்வருகிறதுஎனவே போதிதருமன் காஞ்சிபுரத்தை சார்ந்தவர் அதுமட்டுமல்ல காஞ்சிபுரம் புத்தமதத்தின் முக்கிய தலமாக இருந்துவந்திருக்கிறதுபோதிதருமரும் பௌத்தவ சமயத்தை சார்ந்தவர்.
                        2.                    சீனாவில் குமரிமாவட்டத்தை சார்ந்த ஓலைச்சுவடி ஒன்று கிடைத்ததுஅது போதிதர்மர் காலத்தையதுஅதை போதிதார்மரே சீனா கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உள்ளதுஇதனால் போதிதர்மர் ஒரு தமிழர்.
                        3.                    ‘களரிஎன்னும் கலையேகுங்பூகலைக்கு முன்னோடிபோதிதர்மர் களரிக் கலையை நன்கு பயின்றவர்அவர் அக்கலையை அடிப்படையாகக் கொண்டு, குங்பூ கலையாக மாற்றி சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு பயிற்றுவித்தார். களரி கலை தமிழ் நாட்டின்கலை எனவே அவார் ஒரு தமிழர்.
                   4.               போதிதர்மர் சீனாவிற்கு தரைவழி மார்க்கமாக சென்றார் என்று ஏழாம் அறிவு திரைப்படம் காட்டுகிறதுஆனால் போதிதர்மர் கடல்மார்க்கமாக இலங்கை சென்று பின் கடல்வழிப் பயணமாக சீனா சென்றார்.
                        மேற்கூறிய ஆய்வாளரின் கருத்துக்கள் போதிதர்மர் ஒரு தமிழன் என்பதை ஏற்றுக் கொள்ள வைப்பதாக அமைந்தாலும் அவர் எந்த பகுதியைச் சார்ந்தவர் அதாவது காஞ்சிபுரத்தை சார்ந்தவரா? என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
ஐயங்களும் தீர்வுகளும்
                        சீனாவில் உள்ள கல்வெட்டில்காஞ்சிஎன்ற சொல்வருவதால் மட்டும் போதிதர்மர் காஞ்சிபுரத்தை சார்ந்தவர் என்றுக் கூற முடியாதுஏனெனில் குமரி மாவட்டத்திலும்  ‘காஞ்சிரக்கோடு என்ற மிகப் பழமையான ஊர் உள்ளதுஇவ்வூரை பழங்காலத்தில்காஞ்சிஎன வழங்கி வந்ததாகவும் தெரிகிறதுஇவ்வூரில் முந்தைய தலைமுறைவரை வர்மக்கலை, அடிமுறை போன்றவற்றில் சிறந்த ஆசான்கள் வாழ்ந்தனர்இக்காலத்திலும் அதன் எச்சங்களாக சித்த வைத்ய சாலைகளும், வைத்திய பரம்பரையை சார்ந்த குடும்பங்களும் இங்கு வாழ்ந்து நிலை பெற்றிறருக்கின்றன.
                        காஞ்சிரக்கோடு ஒரு சிற்றூர் இங்கு போதிதர்மன் பிறந்திருப்பாரா என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம்அதங்கோடு கூட ஓர் சிற்றூர் தான் இங்கு முத்தமிழ் அறிஞர் தொல்காப்பியர் பிறந்து சாதனை படைத்திருக்கிறார் என்றால் காஞ்சிரக்கோட்டிலும் போதிதர்மர் பிறந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
                    குமரிமாவட்டத்து ஓலைச் சுவடி சீனாவில் கிடைத்ததை, போதிதர்மர் தமிழன் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் மாறாக அதை போதிதர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்பதற்கு சான்றாகக் கூறுவது அறிவீனம்போதிதர்மர் குமரிமாவட்டத்தை சார்ந்தவர் எனவேதான் அவர் தான் சீனா செல்லும்போது தனது ஓலைச்சுவடியை அங்கு கொண்டு சென்றுள்ளார்ஓலைச்சுவடியில் வைத்திய மரபு, சூத்திரம் போன்றவை எழுதி பத்திரப்படுத்தி பாதுகாப்பது பண்டையோர் வழக்கம் ஆகும்.
                     களரிகலை தமிழ்நாட்டில் குறிப்பாக குமரிமாவட்டத்தில் மட்டுமே வழக்கில் இப்போது காணப்படுகிறதுமட்டுமல்லாமல் இக்கலை தமிழ்நாடடின் வேறுபகுதிகளில் பயிற்றுவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லைஎனவே இக்கலை குமரிமாவட்டம் தொடங்கி கேரள மாநிலம் வரையிலும் பரவி இருந்தக் கலை என்பதில் ஐயமில்லைபோதிதர்மர் குமரி மாவட்டத்தை சார்ந்தவர் ஆதலால் இக்கலையை அவர் கற்றார்.
                        காஞ்சிபுரத்தில் களரி கலையின் சுவடுகள் இருந்தததற்கான சரியான ஆதாங்கள் எதுவுமில்லைஅப்படியிருக்க போதிதர்மர் எப்படி களரி கலையை காஞ்சிபுரத்தில் கற்றிருக்க முடியும்ஒருவேளை போதிதர்மன்; இளவரசன் அதனால் அவன் நினைத்ததை படிக்கும் அதிகாரம் மற்றும் செல்வசெழிப்பு அவனுக்கு இருந்தது என்று நீங்கள் வினவலாம்உண்மை என்னவெனில் இக்கலையைஆசான்விரும்பினால் மட்டுமே கற்றுக் கொடுப்பார்அதிகாரம் இங்கு செல்லுபடி ஆகாதுகாஞ்சி பல்லவர்களுக்கும் குமரிமாவட்ட அப்போதைய அரசுகளுக்கும் இடையில் இணக்கமான உறவுகள் இருந்ததாகவும் தெரியவில்லைஎனவே போதிதர்மன் குமரியை சார்ந்தவன் என்பதை தயக்கமின்றி கூற முடியும்.
                  போதிதர்மன் குமரிமாவட்டத்தை சார்ந்தவராக, ஆசானுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் மட்டுமே களரி கற்க வாய்ப்பு கிடைத்திருக்கும்மட்டுமல்ல குமரியின் களரிகலையே ஜப்பானின்குங்பூகலையாக வளர்ந்துள்ளது என்ற வரலாற்று ஆய்வாளர் முனைவர்.பத்மநாபனின் கூற்றுகளை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.
                       போதிதர்மன் சீனா சென்ற பாதை கடல்வழிபாதை என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்போதிதர்மர் சீனா செல்லுமுன் இலங்கை சென்றுள்ளார்ஏன் அவர் இலங்கை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதற்கு உலக வரைபடம் (world map) விளக்கம் தருகிறதுபோதிதர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு இருந்தால் நேரடியாக அவர் சீனா சென்று சேர்ந்திருப்பார்ஆனால் அவர் குமரி மாவட்டத்திலிருந்து கடல்மார்க்கமாக சீனா சென்றதால்தான் அவர் இலங்கை தீவை அடையவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது 
                        ஏனெனில் குமரிமாவட்டத்து கடல்வழியாக சீனா செல்லவேண்டுமெனில் வழியில் தடையாக இலங்கைத் தீவு அமைந்திருக்கிறதுஇத்தீவை சுற்றி செல்வது மேலும் பயணதூரத்தை அதிகரிக்கும் எனவேதான் அவர் இலங்கையில் நங்கூரம் பாய்ச்சி சிலவருடம் தரைவழி பயணம் மேற்கொண்டு பின்பு  மறுபடியும் கடல்வழியாக சீனா சென்றடைந்தார்.
                        உலகின் மிகப்பழமையான இயற்கை துறைமுகங்களில் ஒன்று குளச்சல் துறைமுகம்இத்துறைமுகம் பல பழைமையான வரலாற்று நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடச்சுக்காரர்கள் கூட பிற்காலத்தில் குமரிமாவட்டத்திற்குள் இத்துறைமுகம் வழியாகத் தான் நுழைந்தனர்.  போதிதருமரும் இப்பழமையான துறைமுகம் வழியாகத்தான் இலங்கை சென்றிருக்க வேண்டும் என்பதே எனது திண்ணமானக் கருத்து.
                        போதிதர்மர் ஒரு புத்தமத துறவி, காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல குமரிமாவட்டத்திலும் பண்டைய காலத்தில் புத்தமதம் பரவி செழித்து காணப்பட்டிருக்கிறதுஇதற்கு சான்றாக பல உதாரணங்களைக் கூறலாம்மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முற்காலத்தில் பௌத்தவ சமய கோயிலாக இருந்திருக்கிறது. குமரி மாவட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையான இநது வழிபாட்டு தலங்கள் முற்காலத்தில் பௌத்தவ தலங்களே என பேராசிரியர் குமார செல்வா தெளிவுபட கூறுகிறார்மண்டைக்காடு கோயிலில்பகவதி அம்மே  சரணம் சரணம்என எழுப்பும் கோஷம் புத்தமரபோடு தொடர்புடையது என்பது அவரது கருத்து.
                        பண்டைய காலங்களில் சேரநாடு அதிலும் குறிப்பாக குமரிமாவட்டம் சிறப்புற்ற பல அறிஞர்களையும், பண்டிதர்களையும் பெற்றிருக்கிறதுதொல்காப்பியர், அவரது ஆசிரியரான அதங்கோட்டாசான், ஓளவையார், திருவள்ளுவார்  ஆகிய புகழ்பெற்ற தமிழ் பண்டிதர்கள் குமரிமாவட்டத்தை சார்ந்தவர்களே இதனை, முனைவர். பத்மநாபன் நிரூபித்தும் காட்டியுள்ளார்.
                        போதிதருமன் குமரிமாவட்டத்தை சார்ந்தவர் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லைமேலும் இது சம்மந்தமான தரவுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்அதற்கு ஆய்வுகள் சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதுநான் கூறிய கருத்துக்களை மையமாக கொண்டு ஆய்வுகள் மேறகொள்ள ஆய்வாளர்கள் முன்வரும் பட்சத்தில், தொல்காப்பியர், ஔவையார், திருவள்ளுவார் வரிசையில் போதிதருமரும் குமரிக்கு கிடைப்பார்.

No comments:

Post a Comment