வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

லெமூரியாக் கண்டம்


dinamalar-saravanan
    முதலாம் தமிழ்ச் சங்கம், இரண்டாம் தமிழ்ச்சங்கம் லெமூரியா கண்டத்தில் (குமரிக் கண்டத்தில்) செயல்பட்டது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் தற்போதைய தமிழகத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் செயல்பட்ட லெமூரியா என்ற குமரிக்கண்டம் தற்போது எங்கே?

1967-ல் தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
    1967-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவில் கடுமையான புயல் தாக்கியது. அதில் தனுஷ்கோடி  நகரம் முற்றிலும் அழிந்தது. தனுஷ்கோடியின் நிலப்பரப்பில் பெருமளவு பரப்பு கடலால் மூழ்கடிக்     சிந்து சமவெளியை ஆராய்வதற்கு முன்பு வரை திராவிட நாகரீகத்தின் தொன்மையை யாரும் அறியவில்லை. திராவிட நாகரீகம் 2000 ஆண்டுகளுக்கு பழமையானது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. நாம் லெமூரியாக் கண்டத்தை ஆராய்வதன் மூலம் அதைவிட எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்க முடியும். கப்பட்டுவிட்டது.
    அதற்கு முன்பு வரை தமிழறிஞர்கள், கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் லெமூரியாக் கண்டம் பற்றி சாத்தியமில்லாத மனநிலை நிலவியது.
    தனுஷ்கோடி பேரழிவிற்குப் பிறகு லெமூரியாக் கண்டம் கடலால் ஏன் அழிக்கப்பட்டிருக்கக் கூடாது? என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

தமிழகத்தைத் தாக்கிய சுனாமி
2005 டிசம்பர் 24-ல் சுனாமி என்ற ஆழிப் பேரலை தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களைத் தாக்கியது. அது இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நிகழ்ந்தது.

கண்ட ஆக்க நில நகர்வு:
    பூமியின் மேல் ஓட்டில் ஏற்படும் நில நகர்வின் போது கண்டப்பகுதி ஒரேயடியாக நிலத்தில் மூழ்குவதும், கடல்நீர் வழிந்து கண்டத்திற்குள் புகுந்து செல்வதும் ஆகும். இதில் ஏற்கனவே இருந்த கடற்பகுதி கண்டமாக மாறும்.

பான்சியா :
        உலகின் முதன்முதலில் இருந்த புவியலமைப்பு பான்சியா ஆகும். பான்சியா என்றால் ஒரே நிலப்பரப்பு. பான்சியாவைச் சுற்றி  மிகப்பெரிய பெருங்கடல் ஒன்று இருந்தது. அது பான்சலாசா ஆகும். லெமூரியாக் கண்டத்தின் வடக்கே இருந்த கடற்பகுதி டெக்கீஸ் ஆகும். அதுவே தற்போது இமயமலையாக மாறியுள்ளது. இது 10000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நில நகாவின் போது வடக்கு தெற்கு அழுத்தத்தின் காரணமாக இமயமலை பிதுங்கி உருவாகி இருக்கிறது. உதாரணம்: கடற்கரை, கடலினுள், சமவெளிப்பாலை நிலங்களில் பெட்ரோலியக் கிணறுகள் இருக்க சாத்தியமுண்டு. ஆனால் அஸ்ஸாம் போன்ற இமயமலைத் தொடர் பிரதேசத்தில் பெட்ரோலியக் கிணறு இருப்பது பழங்காலத்தில் அப்பகுதி கடலாக இருந்ததே காரணம்.
    இமயமலையின் மேல் பகுதியில் கிடைத்த சில படிமங்கள் ஆராய்வதன் மூலம் அவை கடல் வாழ் உயிரினங்களை ஒத்துள்ளது. இதனை நோக்கும் போது கண்ட ஆக்க நில நகர்வு லெமூரியாக் கண்டத்தில் நிகழ்ந்ததற்கு சாத்தியங்கள் உண்டு.

லெமூரியா நிலப்பரப்பு:
லெமூரியா நிலப்பரப்பு என்பது தற்போதைய இந்தியப் பெருங்கடலையே குறிக்கிறது. இலங்கை, அந்தமான் தீவுகள், இந்தோனேசியா தீவுகள், லட்சத் தீவுகள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலே லெமூரியாக் கண்டமாகும்.

லெமூரியா மக்களின் இடம் பெயர்வு:
    லெமூரியாவை கடல் சூழ்ந்து தாக்கும்போது அதில் வாழ்ந்த லெமூர் இன மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இடம்பெயர்வு அடைந்து, சிந்து சமவெளியை அடைந்துள்ளனர். பிறகு சிந்து சமவெளியில் அவர்களே நாகரீகத்தை தோற்றுவித்துள்ளனர்.
லெமூரியாவின் மக்கள்:
    லெமூர் என்றால் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட தன்மையை உடையவன் என்று பொருள். ஆகவே இம் மனிதனே உலகில் தோன்றிய முதல் மனிதன் எனலாம்.
மனித குல பரிணாம வளர்ச்சி:
    ஆதிகாலம், கற்காலம், தாமிர காலம், இரும்புக் காலம் என்று வகுக்கும் போது லெமூர் மனிதன் ஆதிகாலத்திற்கும் முற்பட்டவன் என்று கருத வேண்டும். அதாவது மனிதக் குரங்கை விட நாகரீகம் அடைந்த மேம்பட்ட நிலை எனலாம்.
    இவர்களை ராமாயண இதிகாசப் பாத்திரங்களில் வரும் "வாரணங்கள் சேனை' மற்றும் "அனுமன்' போன்ற தோற்றத்தையும் நோக்கலாம். இவர்களை உருவகமாக கூறலாமேயொழிய, இவர்கள் தான் அவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.
பகுற்ளி ஆறும், லெமூரியாவும்:
    ஆற்றங்கரைதான் நாகரீகத்தின் தொட்டிலாகும். லெமூரியாவிலும் பகுற்ளி என்ற வற்றாத ஜீவ நதி ஓடியிருக்கிறது. அது ஓடிய வழித்தடங்களை கடல் நீருக்கடியில் தேடக்கூடிய அறிவியல் தொழில் நுட்பங்களை ஆராய வேண்டும்.
    கடல் நீருக்கு அடியில் அகழாய்வு செய்யும் போது நன்னீர் வாழ் உயிரினங்களின் படிமங்கள் அல்லது DNA க்கள் அது தொடர்புடைய பொருட்கள் அனைத்தையும் அணு இயற்பியல் துறை மூலம் கால வயதைக் கணக்கிட வேண்டும். அவை சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னீர் உயிரினம் என்று தெரிந்தால் அப்பகுதியை தொடர்ந்து அகழாய்வு செய்யலாம். அப்பகுதியை பகுற்ளி ஆற்றுப் படுகை எனவும் கூறலாம். பகுற்ளி ஆற்றுப் படுகையை நாம் கண்டுபிடித்துவிட்டால் லெமூரிய திராவிட நாகரீகத்தை நெருங்கிவிட்டதற்குச் சமம்.
    நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்த நமக்கு கடலின் அடியில் பகுற்ளி ஆற்றுப்படுகை இருப்பதை கண்டுபிடிப்பது ஒரு மைல் கல். அது திராவிட நாகரீகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.
ருசியாவில் இருந்து தொடங்கினாலும் திராவிடத்தின் தலைமைக் குழுவாகிய தமிழ் இனத்தின் எல்லைக்குள்ளேயே வந்து சேருகிறது. தமிழி அன்றைய தமிழ் பேசிய மக்கள் தமிழி மற்றும் வட்ட எழுத்து என்ற இரண்டு வகையான எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். 1 தமிழி எனபது ஒலி எழுத்து. அது உயிர் மெய் வகையை சார்ந்தது. 2. தொன்மையான எழுத்து முறை. (தற்கால தொல் எழுத்து வல்லுனர்களின் கருத்துப்படி ஒலி எனபது உருவை குறிக்கும். 3 . தமிழ்நாட்டில் வழங்கிய எழுத்து எனவே வாடா நாட்டினர் இதை தமிழி என்று அழைத்தனர். 4 பிரம்மி எழுத்திலிருந்து வந்தமையால் இதனை தமிழ் பிரம்மி என்றே அழைத்தனர். 5 பிரம்மி எபோது வழங்கப்பட்டதோ அப்போதே தமிழியும் வழக்கில் இருந்தது. இவ்வெழுத்துக்கள் நன்கு வளர்ச்சி பெற்று கி.பி. 3 ம் ஆண்டிலிருந்து சில உருவ மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த மாற்றங்கள் எழுத்து முறையில் இரண்டு பிரிவுகளை உருவாக்கியது. 1. தமிழி 2.வட்டெழுத்து. தமிழகத்தில் தமிழ் மொழியை எழுதுவதற்கு வழங்கிய வட்ட வடிவமான ஒருவகையான எழுத்தே வட்டெழுத்து என்று சொல்லப்பட்டது.
கல்வெட்டுக்கள்:
ஆய்வாளர் கோபிநாத ராவ் வட்டெழுத்து பிரம்மி எழுத்தின் வளர்ச்சி பிரம்மி எனபது தமிழகத்தில் உள்ள குகைகளில் காணப்படும் தமிழி எழுத்தாகும். Dr .பர்னால் என்பவர் பிநிசியன் எழுத்திலிருந்து வட்டெழுத்து வந்திருக்கவேண்டும், இது அசோகனின் கல்வெட்டுகளிலிருந்து வேறுபடுகிறது என்கிறார். Dr .பூலார் என்பவரோ வடமொழி தமிழகத்தில் பரவுவதற்கு முன்னேரே வட்டெழுத்து வழக்கில் இருந்ததால் பிரம்மியில் இருந்து வளர்ந்தது எனபது ஏற்றுக்கொள்ளமுடியாத ஓன்று என்கிறார். கி.பி. 6 -8 ம் நூற்றாண்டில் பல்லவர்களின் கல்வெட்டுகளில் வட்டெழுத்து காணப்படுகிறது. கி.பி.7 முதல் 9 நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்களின் கல் வெட்டுகளில் தமிழியும் கிரந்த எழுதுதுகளும் உள்ளன. செப்பேடுகள் வட்டெழுத்துகளில் காணப்படுகிறது. பாண்டியர்களின் காலத்தில் வட்டெழுத்து அதிக மதிப்பை பெற்றிருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தென் பகுதியில் ஆய மன்னர் காலத்து வேணாடு பகுதியில் கிடைத்த செப்பேடுகள் தமிழி எழுத்துகளை கொண்டதாக இருக்கிறது இவிதமாக தமிழியும், வட்டெழுத்துகளும் படிப்படியாக வளர்ந்து தற்போதைய நிலையை பெற்றிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக