வியாழன், 22 நவம்பர், 2012

தமிழ் மொழி

http://www.santhan.com/index.php/kural177/kural192/8-tamil/tamil

தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டில் மேலும் அழிவு ஏற்படும் அயாய நிலையிலுள்ளது.
தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்

1. ஆங்கிலம்:-
சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட் போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே!

2. பிரெஞ்சு:-
கும்பினிய், லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான் மேலுமுள்ளன.

3. டச்சு
கக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன.

4. போர்க்சுகீசியம்:-
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி, கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன.

5. உருது:-
அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை, சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு, கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத், சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில் பாதிக்கு மேல் உருது உள்ளது.

6. துருக்கி:-
துப்பாக்கி, தோட்டா, வான்கோழி, மேலுமுள்ளன.

7. பெர்சியன் (பாரசீகம்):-
டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார் போன்றவைகள்.

8. அரபிய மொழி:-
வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா மேலுமுள்ளன.

9. மலாய் (மலேசியா):-
சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி, மலாக்கா, மணிலாக்கொட்டை இன்னும் பல உள்ளன.

10. கிரேக்கம்:-
மத்திகை, கருங்கை, கன்னல், குருஸ் போன்றவைகளை.

11. ஹீப்ரூ (எபிரோயம்):-
ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்

12. சீனம்:-
சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.

13. சிங்களம்:-
சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.

14. மலையாளம்:-
வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன், தளவாடம், சாயி, பிரதமர், வஞ்சிக்கொடி போன்றைகள் மேலுமுள்ளன.

15. கன்னடம்:-
அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு, குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள் மேலுமுள்ளன.

16. தெலுங்கு:-
தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில் புகுந்துள்ளன. அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம், உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம், தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி, தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல உள்ளன.

17. மராத்தி:-
சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி, அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன.

18. இந்தி:-
அரே, நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா போன்ற பல உள்ளன.

மொழி ஊருவல்கள்:
நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே எடுத்துக் காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள். தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லித் தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?

பிறமொழி வரிவடிங்களின் கலவைகள்
பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து, இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம். “அதாவது புறம்போக்கு நிலத்தில் எவரும் பயிர் செய்வதைப் போல ஏற்றுக் கொள்ளலாம்”. ஆனால் நமக்கே உரிய பட்டா நிலமாகியதமிழ் மொழியில் மாற்று மொழிகளுக்குப் பட்டா என்னும் வரிவடிவைக் கொடுக்கலாமா? மேலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு இணையாக உரிமையும் தகுதிதகளையும் கொடுக்கலாமா? தமிழ் வரிவடிங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து அட்டவணையில் இடம் கொடுக்கப்படலாமா? நன்கு சிந்தித்து விடை காணுங்கள். செயல்படவும் முனைந்திடுங்கள்.

பிறமொழி எழுத்துக்களின் சுமை
உலக மொழிகளோடு நம் தமிழ் மொழியை ஒப்பிட்டால் நம் மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது நன்கு புரியும். என் சிந்தனைக்கு நம் தமிழ் மொழியெழுத்துக்களில்” –அய்” “அக் போன்றவைகள் பிற மொழி வந்தவைகளே! அவைகள் நம் மொழியில் உட்புகுந்து, நம் மொழியை ஆட்கொள்கிறது. அத்தோடின்றி ஏதோ சற்றும் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவம் பெற்று எழுதப்பட்டவணையில் இடமும் பெற்றிருப்பது சாத்தியமில்லை. அப்புறப்படுத்துவது நலமே!
1. “மற்றும்” - பல்லவரின் - பிராமிலிபி என்ற மொழிவழி வந்தவைகள். காஞ்சிப் பல்லவரின் கைப்பொம்மைகள், தமிழுக்கு இழுக்கு ஏற்பட வைக்கிறது. “கைமுதல்னைவரையுள்ள 18 அய்காரத்தயும் நீக்கிவிட வேண்டும்.
2. “
இது சமஸ்கிருதம் என்னும் வடமொழி வழி வந்தது. இது முழுமையான எழுத்து வரிவடிவமல்ல. மூன்று புள்ளிகளே! வரி வடிவமே இல்லாத மும் முற்றுப் புள்ளிகளை ஆயுத எழுத்து என்று எவ்வாறு ஏற்பது?
3. “வுடன் புணர்ந்து ஔகார ஒலியெழுப்பும் உயிர்மெய் எழுத்துக்களாகிய, கௌ முதல் னௌ வரையுள்ள 18 வரிவடிவங்களையும் அடியோடு நீக்கிட வேண்டிய பிற மொழியெழுத்துக் கலவைகளே! மேற்காணும்” “மற்றம்என்ற உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களின் வடிவங்களை நீக்கிவிட வேண்டும். மேற்காணும் சீர்திருத்தங்களை நாம் செய்தால் தமிழ் மொழி செப்பனிடப் பட்டுவிடும். வரிவடிவை மட்டுமே நீக்குகிறேன். ஒலிவடிவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெருங்கனவு நனவாகிவிடும். தந்தை பெரியாரின் தமிழெழுத்துச் சீர்திருத்த நெறியினைப் பின்பற்றினால் வெகு சுலபமாக நம் தாய் மொழித் தமிழைச் செப்பனிட்டு விடலாம். , , , இந்த மூன்று எழுத்துக்களைப் பற்றி பின்வரும் பகுதிகளில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. அருமையான பதிவு.
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ நபபந

    பதிலளிநீக்கு