Monday, 5 November 2012

நன்னன்செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்
நன்னன் சேய் நன்னனை மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது. இம்மன்னன் பல்குன்றக் கோட்டம் என்ற நாட்டை ஆண்டான். இப்பல்குன்றக் கோட்டத்தை மலைபடுகடாம், ‘‘குன்று சூழ் இருக்கை நாடு’’ எனக் குறிப்பிடுகிறது. தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் பல்குன்றக் கோட்டம் என்பது ஒன்று. குன்றுகள் பல சூழ்ந்து இருப்பதால் அப்பெயர் பெற்றது. தமிழக எல்லையான வேங்கடமலையும் இப்பகுதியுள் அடங்கும்.
நன்னன் சேய் நன்னனின் தலைநகரம் செங்கண்மாஎன்பதாகும். இவன் வேளிர் குடியில் தோன்றியவன். ஆதலால் வேண்மான் எனப்படுகின்றான். இந்த நூலில் இயவன் வேள் என்றே குறிக்கப்படுகின்றான். செங்கண் மா என்ற நகரம் தற்போது திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ளது. இக்காலத்து செங்கண்மா எனவும் செங்கம் எனவும் வழங்கப் பெறுகின்றது. இவனுடைய தந்தை பெயரும் நன்னன் ஆதலால் நன்னன் சேய் நன்னன் என இம்மன்னன் அழைக்கப்படுகின்றான். மேலும் இவனுக்கு நன்னன் வேண்மான், வேள் நன்னன், சேய்நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன், சேய்நன்னன் என்ற பல பெயர்களாலும் இவன் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
நன்னன் சேய் நன்னனின் மலைநாட்டின் சிறப்பு
இம்மன்னனது மலைநாடான சவ்வாது மலைத்தொடரைச் சேர்ந்த அடிவாரப் பகுதியில் புன்செய் நிலங்கள் மிகுதியாக உள்ளன. இதனை நவிர மலை என்றும் திரசூல மலை, பர்வத மலை என்றும் குறிப்பிடுவர். அங்கு முசுண்டைக் கொடியில் கார்த்திகை விண்மீன்களைப் போன்று வெண்மையாக மலர்கள் மலரும். அதிகமாக எண்ணெய் மிகும் வண்ணம் எள்ளுச் செடியானது காய்களுடன் வளரும். யானைக் கன்றுகள் தமக்குள் துதிக்கைகளைப் பிணைத்து விளையாடுவதைப் போல் தினைக் கதிர்கள் பிணைந்து முற்றும். அவரைகள் முற்றிய தயிரினது பிதிர்ச்சி போல் பூக்களை உதிர்த்து அரிவாளைப் போன்று வளைந்த காய்களைக் கொள்ளும். வரகுகள் தர்க்கம் செய்பவன் கையில் இணைந்த விரல்களைப் போன்று இரட்டித்த கதிர்கள் முற்றும். மூங்கில் நெல் அவல் இடிக்கும் பருவத்தை அடையும். நிலத்தை உழாமல் களைக் கொட்டால் பண்படுத்தப்பட்ட நிலத்தில் வெண்சிறு கடுகு நெருங்கி விளையும். இஞ்சிகள் நன்கு முதிர்ந்து வளரும். உறைப்பை நன்கு கொள்ளும் கவலைக் கொடி பெண்யானையின் மடித்த முழந்தாளைப் போன்றுள்ள குழிகளில் செம்மையாய் வளரும் என நன்னன் சேய் நன்னனின் மலை நாட்டின் வளப்பம் மலைபடுகடாமில் சிறப்பிக்கப்பட்டுள்ளது (170-182).
நன்னன் சேய் நன்னனின் கொடைச் சிறப்பு
நன்னன் எப்போதும் கொடுத்துச் சிவந்த கையினை உடையவன். இவனது கொடைச்சிறப்பினை,
‘‘உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கையராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தம்சால் அருவிக்
கடுவரல் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடும் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு’’ (550-558)
- என்ற வரிகளில் புலவர் பெருங்கௌசிகனார் எடுத்துரைக்கின்றார்.
மலைபடுகடாமில் நன்னன், ‘‘மான விறல் வேள், செருசெய் முன்பின் குரிசில் திருந்து வேல் அண்ணல், செருமிக்குப் புகலும் திருவார் மார்பன், தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னன், வெம்போர்ச் சேய்ப் பெருவிறல், குன்ற நல்லிசைச் சென்றோர் உம்பல்’’ என்று பலவாறாகப் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
நன்னனின் வீரம்
நன்னன் மிகச் சிறந்த வீரன் ஆவான். புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தான். தன்னை இகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குவான். புகழ்வோருக்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுவான். அவனுடைய அவைக்களத்திலே சிறந்த கல்வியும் அறிவுமுடைய பலர் குழுமியிருந்தனர். இவ்வாறு நன்னனுடைய நற்பண்புகளை மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. இவனது வீரச்சிறப்பையும், ஒழுக்கச் சிறப்பையும்,
‘‘தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்
பலர் புறங்கண்டவர் அருங்கலந்தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரியும்,
இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றலும்புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமராநோக்கமொழு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாதுசுரக்கும் அவன்நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லாராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் (70-80)
என கௌசிகனார்நன்னனுடைய சிறப்பை விளக்குகின்றார். இவ்வரிகள் பழங்காலத்து நிலத்தலைவர்கள் பொதுமக்களிடம் எத்தகைய மதிப்புப் பெற்று வாழ்ந்தனர் என்பதை தெளிவுறுத்துகின்றன.
பத்துப்பாட்டில் இடம்பெறும் நூல்கள் அக்காலத்திய மக்களின் வாழ்க்கையை மட்டும் கூறாது அக்காலமன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், வீரம், அவர்களின் பண்பு நலன்கள், விருந்தோம்பும் திறம் ஆகியவற்றையும் எடுத்துரைத்து பழந்தமிழக வரலாற்றினைக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது. 
செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்

நாலூர்க் கோசர்
 
இவர்களைப் புற்றிய செய்தி குறுந்தொகையிலும் அகநானூற்றிலும் முழுமைபட கிடைக்கின்றன.  நாலூர்க் கோசர் என்பவர்கள் வீரக்குடியினர் ஆவர். இவர்கள் நான்கு ஊர்களில் வாழ்ந்து வந்துள்ளனர். மோகூர் பழையனின் அவையத்தில் இவர்கள் இடம் பெற்றிருந்ததாகக் கருதுவர். இவர்கள் தன் குலப் பெண்ணைக் கொன்ற நன்னனை வஞ்சம் தீர்த்தவர்கள் ஆவர்.
நன்னன்
 
வென்வேல்
இசை நல் ஈகைக் களிறு வீசு வண்மகிழ்
பாரத்துத் தலைவன்  ஆர நன்னன்
 
ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பில்
 
களிமயிற் கலாவத்தன்ன தோளே ( அகம் 152)
என்ற நிலையில் நன்னனின் கொடைவளமும் அவன் நாட்டில் உள்ள மயிலின் சிறப்பும் இவ்வகப்பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது. மயில் தோகை போன்ற வளைந்த சுருண்ட கூந்தலை உடையவள் தலைவி என்பதைப் பாராட்ட வந்த  பரணர் நன்னன் புற்றிய செய்தியையும் உடன் இயைத்துச் சொல்கிறார்.
 
இதே பரணர் குறுந்தொகைப் பாடலில் நன்னனின் செயல் ஒன்றில் குறை காணுகின்றார்.
 
மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
 
பனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்கு
 
ஒன்பதிற்று  ஒன்பது களிற்றொடு அவள் நிறை
 
பொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்
 
பெண்கொலை பரிந்த நன்னன் போல
 
வரையா நிலத்துச் செலீஇயரோ அன்னை!
ஒருநாள் நகை முக விருந்தினன் வந்தென
பகைமுக ஊரின் துஞ்சலோ இவள் (குறுந் 292) (குறிஞ்சி) (பரணர்)
என்ற இப்பாடலில் நன்னன் தீமை விவரிக்கப்படுகிறது. அவன் பெண்ணுக்குத் தீமை செய்ததுபோல தலைவியின் தாய் தலைவனைச் சந்திக்கவிடாது இரவும் பகலும் விழிப்படன் இருப்பதாக இப்பாடல் தாயைக் குறைகூறுகின்றது. தாயைக் குறை கூறினாலும் அவளின் நல்லுள்ளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல உலகம் நன்னனைப் பழி சொன்னாலும் நன்னன் தாயுள்ளம் கொண்டவன் என்பதால் இங்குத் தாய்க்கு அவன் உவமையாக்கப் பெற்றுள்ளான்.
 
இப்பெண் செய்த தவறு பின்வருமாறு. அவள் கோசர் குடியினள். அப்பெண் ஒருமுறை  ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நன்னன் வளர்த்து வைத்திருந்த நெடுநாள் வாழவைக்கும் மாமரத்தின் பிஞ்சொன்று எதிர்படுகிறது. அவளை அவள் எடுத்து உண்டுவிடுகிறாள். அதன் உண்மை வலிமை தெரியாது என்ற போதிலும் இவளின் இச்செய்கை நன்னனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாத்திரம் அவளைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்லுகின்றது.
 
இதனைக் கேள்விப்பட்ட கோசர்கள் அப்பெண்ணைக் காக்க எண்ணுகின்றனர். எண்பத்தொரு களிறுகளுடன் பொன்னால் செய்யப் nபுற்ற பாவை ஒன்றையும் அவர்கள் அளிக்கின்றனர். இருப்பினும் அவற்றை மறுத்து அந்நன்னன் அப்பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதுவே நன்னன் செய்த கொடுமையகின்றது.
 
இக்கொடுமைக்குத் தக்க  பதிலடியைக் கோசர்கள் தருகின்றனர்.  இவர்கள் பற்றிப் பல பாடல்களில் செய்திகள் காணப்படுகின்றன.
 
கோசர்கள் நியமம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள். அவ்வ+ர் கடல் போன்ற ஆராவாரத்தினை உடையது. புது வருவாயினையும் உடையது. இரும்பால் செய்யப்பட்ட படைக்கலன்கள் உண்டாக்கிய வடுக்களை உடைய முகத்தினைக் கொண்ட அஞ்சாமையையுடைய கோசர்கள் வாழ்வது. இத்தகைய ஊரினைத் தந்தாலும் அவளின் nபுற்றோர் தன்மகளைத் தாரார் என்ற  பொருள்பட ஒரு பாடல் அகநானூற்றில் உள்ளது.
 
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்
 
இரும்பு இடம் படுத்த வடுவடை முகத்தர்
 
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
 
உறும் எனக்கொள்குநர் அல்லர்
 
நறுநுதல் அரிவை பாசிழை விலையே (அகம் 90. மதுரை மருதன் இளநாகன் நெய்தல்)
 
இக்கோசர்கள் அஃதை என்ற மன்னனுக்குப் போரின்போது உதவி பரிந்துள்ளனர் என்பது கல்லாடனார் பாடிய மற்றொரு அகநானூற்றுப்பாடல் வழி தெரியவருகிறது.
 
மாவீசு வண்மகிழ் அஃதைப்போற்றி
 
காப்ப கை நிறுத்த பல் வேல் கோசர்
   (
பாலை கல்லாடனார் அகம் 113)
இவ்வகையில் கோசர் என்ற இனத்தார் வீரமிக்கவர்கள் என்பது அகப்பாடல்கள் வழி தெரியவருகிறது.
 
பரணர் பாடிய குறுந்தொகைப்பாடல் இதன் அடுத்த நிகழ்வு வளர்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது.
 
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
 
அழியல் வாழி தோழி நன்னன்
 
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
 
ஒன்று மொழிக் கோசர்போல
 
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
(
குறுந்தொகை 73 பரணர் குறிஞ்சி)
பெண் கொலை புரிந்த நன்னனைப் பழிவாங்கு ழ்ச்சி செய்தனர் கோசர்கள். இச்ழ்ச்சி வெற்றி nபுற்றதன் விளைவ நன்னன் இறந்து பட்டான். அவனின் இறப்ப பரணருக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. அதனால் இச்ழ்ச்சித் திறத்தைக் கேலி செய்யும் வண்ணம் தலைவி பாடுவதாக இப்பாடலை அவர் பாடியுள்ளார். 
 
கோசர்கள் தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச்செய்தனர். அந்தச் சூழ்ச்சி சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்பகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு nபுறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே போர் தொடுக்க அப்போரில் அவன் உயிர் விடுகின்றான்.

மாம்பிஞ்சு ஒன்றைத் தின்ற பெண்ணுக்குக் கொலை தண்டனை என்றால் மாமரத்தை அழித்த பெண்களுக்கு என்ன தண்டனை என்பதே கோசர்கள் ஏற்படுத்திய சூழ்ச்சியாகும்.
 
இக்கோசர்களைப் புற்றிய குறிப்ப புறநானூற்றில் ' வென்வேல் இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் இகலினர்  எறிந்த அகல் இலை முருக்கின் பெரு மரக்கம்பம் போல (புறம் 169) ' என்ற பாடல் வழி அறியமுடிகிறது. இப்பாடல் வழி கோசர்கள்  வேல் வீசி படைக்கலம் கற்பர் என்பது மட்டுமே தெரியவருகிறது. ஆனால் அகப்பாடல்கள் வழி அவர்களின் முழு நிலையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
 
இக்கோசர்களும் ஒரு பெண்ணால் அழிந்தனர். அது புற்றிய செய்தி அகநானூற்றில் கிடைக்கின்றது.  அன்னி மிஞிலி என்ற பெண் கோசர்களை வென்ற நிகழ்வு  உவமையாக அகப்பாடலில் இடம் nபுறகின்றது.  அன்னி மிஞிலிக்கு கோசர் மறைந்தது மகிழ்வைத் தந்ததைப் போல தலைவிக்குத் தலைவன் இன்பம் அளித்தான் எனப் பரணர் பாடுகிறார்.
 
பரணர் நன்னனின் அன்பை அறிந்தவர். அவன் அழிவின் போது அழுதவர். அவனை அழித்தவர்கள் சூதால் இறந்து பட்டபோது அவர் பெரிதும் மகிழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவ்வழிவை அவர் அகப்பாடலில் உவமையாக்கி மகிழ்ந்துள்ளார்.
 ''
பாசிலை அமனற் பயறு ஆ  புக்கென
 
வாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின்
 
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
 
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
 
மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன்
 
செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
 
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
 
அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து
 
ஆனா உவகையேம் ஆயினெம்'' ( அகம் குறிஞ்சி பரணர் 262)
இப்பாடலில் பசு ஒன்று கோசர்தம்  தட்டைப்பயிறு விளைந்த நிலத்தில் மேய்ந்துவிட அப்பசுவின் சொந்தக்காரனான அன்னிமிஞிலி என்ற பெண்ணின் தந்தையைக் கண்களைக் குத்திக் கோசர்கள் குருடாக்கி விடுகின்றனர். இக்கொடுமையைக் கண்ட அன்னி மிஞிலி திதியன் குறும்பியன் ஆகியோருக்குக் கூறி பகையை ஏற்படுத்தி கோசரை வெல்கிறாள். அதுவரை அவள் கலத்தில் உண்ணா நோன்பும் தூய ஆடை உடுக்கா நோன்பும் நோற்றுவந்தாள். அவளின் மகிழ்வு தலைவியின் மகிழ்விற்கு ஒப்பாக்கப்படுகிறது.
 
இவ்வாறு கோசர் நன்னன் அன்னிமிஞிலி திதியன் குறும்பியன் போன்ற மன்னர்களின் புறச் செயல்கள் இப்பாடல்களின் பின்னணியில் அகப்பாடல்களில் நின்று வரலாற்றுச் செய்திகளை அறிவிக்கின்றன என்பது எண்ணத்தக்கது.

No comments:

Post a Comment