புதன், 14 நவம்பர், 2012

பாரதியார்


பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்ட‍த்தில் ஈடுபட்டா ர். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்ல‍ம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார். அதற்கு பாரதியார் எழுதியகடிதம்என்ன‍ தெரி யுமா?
என் அருமைக்காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத் த‍து. நீ எனது காரியங்களில் பயப்படும் படி யாக கவலை ப்படும் படியாக நான் ஒன்றும் செய்ய‍வில்லை. நான் எப்போது ம் தவறான வழியில் நடப்ப‍வன் அல்ல‍ நீ இம்மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றா க படித்துவந்தாயானால், உனது கவலை தீரும். அவ்வாறு நீ செய்து வந்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்!
இவ்வாறு எழுதி கையெழுத்திட்டு அனுப்பி னார் அந்த மஹாகவி பாரதியார்!
- என். கார்த்திகேயன், தேனி (நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிற்காக)
வேற்றுமையில் ஒற்றுமை கண்டது நம் பாரத தேசம். அஹிம்சையா ல் எதையும் சாதிக்கமுடியும் என்று சாதித்துக் காட்டிய காந்தி மகான்வாழ்ந்த நம் நாட்டில் இன்று மனிதனி ன் ஒற்றுமை எனும் ஆணி வேரை வன்முறைக் கரையான்கள் அரிக்கத் தொட ங்கிவிட்டன.
தேசப்பற்றோ தெரிவிக்கப்பட வேண் டிய ஒன்றாகி விட்டது. நாட்டின் முது கெலும்பு எனும் மனித ஒற்றுமையி ல் இன்று கூன்விழுந்துவிட்டது. மனி தனை ஒன்றாக்க தோன்றிய மதங்க ள் அவனை துண்டு துண்டாக்கி விட் டன.
சமத்துவம், சகோதரத்துவம் என்று போதித்த நம்நாட்டில் இன்று ஒரு வரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கிறோம். நான், என்மதம், என் மொழிஎன் ஜாதி என் று குருகிய மனப் பான்மை யோடு வாழ்ந்து நம் வன் முறைக்கு நம் மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்ற மூன்ற காந்திகளை பலி கொடுத்துள் ளோம்.
எந்த ஒரு மதம் பசித்த ஒருவனு க்கு உணவளிக்கும் தன்மையை வளர்க்கிறதோ அதுதான் தலை சிறந்த மதம்என்றார் சுவாமி விவே கானந்தர். ஆனால் இன்றைய இந்தியாவில் மதத்தின் பெயரால் கொலை, கொள்ளை என்று அதர் மங்கள் நடந்து கொண்டிருக் கின்றன.
என் அமெரிக்க சகோதர சகோதரிகளே!என்று கூறி சகோதர உணர்வுகளை ஏற்படு த்தினார் சுவாமி விவேகானந்தர். இமயத் தில் ஒருவன் இரு மினான் என்றால், குமரி யில் உள்ளவன் மருந்து கொண் டோடுவான் என்றார் தேசியக்கவி பாரதியார். ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம்?? நீருக் காக கர்நாடகாவிடம் கேட்டுக்கெஞ்சினோ மே! சற்று யோசித் துப்பாருங்கள்! மனித ஒற்றுமைசகோதர உணர் வு எல்லாம் எங்கே போய்விட்டது???
ஒருநட்டின் தலையெழுத்து வகு ப்பில்தான் நிர்ண யிக்கப்படுகிற து. ஆனால் இன்றைய கல்வியோ தேசபக்தி, தொண்டு போன்றவற் றை போதிக்காமல் மதிப்பெண் பெறும் இயந்திர ங்களாக மட்டு மே மாணவர்களை உருவாக்கு கிறது. நம் கலாச்சாரம்மத ஒற் றுமை, தேசப் பற்று பாதுகாக்கப் பட வேண்டுமானால் பெற்றோர் உழவேண்டும்,
ஆசிரியர் விதைக்க வேண்டும், மாணவன் உழைக்க வேண்டும். இது நடந்தால் ஒற்றுமை எனும் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
மேலும் நாம் சுயவலிமை பெற்று மனித ர்களாக எழுந்து நிற்க நம் மிடையே ஒற்றுமை வேண்டும். மனித குலத்தின் சாபக்கேடான பயங்கரவாதம் களங்கம ற்ற உயிர்களையும் சிதைத்துவிடும். இத் தகைய பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடுவோம். நமது
நாட்டுமக்கள் உள்ளத்தில் ஒற்றுமையா க வாழ்வதற்கான எண்ணங்களையும் செயல்களையும் உருவாக்குவோம், மத மனித ஒற்றுமையை வேரூன்றச் செய் வோம்.
ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்ற வரிகளை என்றும் நினைவில் கொள்வோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே குறுகுறு வென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திர மாக மாற் றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின்மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண் டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பி ன் காரணமாக கொஞ்சம் கொஞ்ச மாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறை யை வைப்பா ர்கள்.நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக் கொள் ளும். இப்படிப் பாறைக ளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்தான் இந்த அணையைப் பற்றிப் பல காலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை தி கிராண்ட் அணைக்கட்என்றார் சர் ஆர்தர் காட்ட ன். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப் பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக