ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இணையத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?



இணையத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
                 “அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
                ஆயிரம் தொழில்கள் செய்திடுவீரே!               
                                                 -பாரதி
இன்றைய அறிவியல் உலகில் தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வரும் கண்டுபிடிப்புகள் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன.அறிவியல் தொழில்நுட்பத்தை நாம் வரவேற்கும்போது சில வேண்டாத இடர்பாடுகளும் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததாகும்.இத்தகைய இடர்பாடு மிகுந்த இணையத்தினால் இன்று பண்பாட்டுச் சீரழிவு பெருமளவு நிகழ்ந்து வருவது கண்கூடு.
இணையத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, இணையத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? என்பது நம் முன் நிறைந்துள்ள சவாலாகும்.
வேலைவாய்ப்பிற்காகவும்,ஆய்வுக்காகவும்,தகவல் தொடர்பிற்காகவும் இணையத்தினை நாடிச் செல்லும் மக்களின் மனதில் கல்வி கற்பதற்காகவும் இணையம் சிறப்பாகப் பயன்படுகிறது என்பதைத் தெளிவாக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
இணை-இணைத்தல்            அழகாக இணைத்தல்
அம்-அழகு
எனப் பொருள் கொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து மக்களுடனும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஊடகமாக இணையம் விளங்குகிறது.
இன்றைய மாணவர்கள் நாளைய உலகத்தை உருவாக்கும் அழகிய சிற்பிகள். அத்தகைய சிற்பிகளிடம் இணையம் குறித்தத் தெளிவான சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
‘அடிப்படை ஆட்டங் கண்டால் அணிமாடமே அழிவுறும்‘ என்பதை உணர்ந்து, இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களிடம் இணையத்தின் சிறப்பினை விளக்க வேண்டும்.
இணையம் கற்றல் கற்பித்தலுக்குரிய அருமையான துணைக்கருவியாக விளங்குகிறது. அவற்றைச் சிறப்பான முறையில் பயன்படுத்தினால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும். கற்றல் கற்பித்தலுக்குரிய மென் பொருட்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் வேண்டும்.
v  BRAVO,POTATO-விளையாட்டுமுறை
v  www.aboutnewsmaker.com-படைப்பாற்றல் திறன்
v  Lectora professional publishing suite -பல்லூடகக் கணினிப்பாடம்
v  VGLF-(இணைய உரையாடல்,வீடியோவழிப்பாடங்கள்) போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொள்வதன் மூலமாகப் படைப்பாற்றல் திறன் வளரும்.
கணினி,கணிதம், அறிவியல்,மருத்துவம்,வானியல் போன்ற பல பாடங்களுக்கு வழிகாட்டியாக இணையம் பல வலைத்தளங்களை அமைத்துள்ளது.
இவற்றைப்பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
www.tamilanitham.com –இல் தமிழ் கற்றலுக்குத் தேவையான பல கற்பித்தல் முறைகள் நிறைந்துள்ளன.


www.tamil virtualacademy.com-இல்

v  அடிப்படைநிலை - Basic Level.இடைநிலை - Intermediate Level மேல்நிலை - Advanced Level என தமிழ்க்கல்வி-சிறப்புடன் இணையவழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
www.kidsone.com –இல் எழுதும்முறை,கதைகள்,பாடல்கள்,பயிற்சித்தாள்கள் என மூன்று மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக உள்ளது.
www.kidspark.com -இல்தமிழ்மொழிக்கென்று பலவிதங்களில் ஆசிரியர்களே பாராட்டும்விதத்தில் பல பயிற்சித்தாள்கள் இன்றைய சமச்சீர் கல்வித்திட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளது






www.kids.noolagam.com/test tools/pdf files-http://www.balmitra.com/languagebook/Tamil/tamilflashcards.pdfwww.balmitra.com/languagebook/Tamil/learn_Tamil.asp இல் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்குப் வித்த்தில் பாடங்கள் அமைந்துள்ளன.
மொழிக்கற்றலின் அடிப்படைத்திறன்களான கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் போன்றவற்றை வலையொலி,வலைப்பூக்கள்,யுட்யூப் கதைகள்,பாட்டுகள், போன்ற ஒளிப்படங்களைப் புகுத்தி விளக்கலாம். இன்னமும் ஆசிரியர்கள் வலைத்தளத்தில் காணப்படும் பல மென்பொருட்களைப் பயன்படுத்திக் கற்பித்தால் வருங்கால மாணவர்சமுதாயம் பயனடையும். .‘புலன்காட்சியின் வழியே பெறப்படும் அனுபவங்களே கல்வியின் அடிப்படை‘ என்ற அறிஞர் காமினியஸின் கருத்தின்படி இணையத்தின் வாயிலாகச் சிறப்பாகக் கற்றல்,கற்பித்தல் நிகழும் என்பது இக்கட்டுரையின் மூலம் தெளிவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக