ஏழிலை
கப்பக்கிழங்கு என்று வழக்குமொழியில் வழங்கப்படும் ஏழிலைக் கிழங்கு பல சத்துகள் அடங்கிய கிழங்கு வகையாகும். அவித்துப் பொறித்து குழந்தைகளுக்கு வழங்கினால் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவு வகைகளில் இந்த கிழங்கும் ஒன்று. இந்த வாரம் ஏழிலைக் கிழங்கில் உள்ள சத்துகளை அறிவோம்... ஏழிலைக் கிழங்கின் அறிவியல் பெயர் மனிகாட் எஸ்கலன்டா என்பதாகும். உருமாறிய வேரே ஏழிலைக் கிழங்காகும். தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட ஏழிலைக் கிழங்கு தற்போது ஆசியா , ஆப்பிரிக்கா , தென்அமெரிக்கா கண்டங்களில் பரவலாக உண்ணப்படும் உணவுப் பொருளில் ஒன்றாக உள்ளது. மனிகாட் , டாபியோகா , யுகா , கஸ்ஸவா என பல பெயர்களில் இது வழங்கப்படுகிறது. கிழங்கு வகைகளில் மாவுச்சத்து நிறைந்தது ஏழிலைக் கிழங்குதான். 100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் சுக்ரோஸ் எனும் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அமைலேஸ் என்ற கூட்டுச்சர்க்கரையும் கணிசமான அளவில் உள்ளது. மிகக்குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. மற்ற கிழங்குகளைவிட அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. ஏழிலைக்கிழங்கில் குளுட்டன் இல்லாத புரதச்சத்து கிடைப்பது குற...