Monday, 22 February 2016

பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு

        பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு
                                          முனைவர்பி.ஆர்.இலட்சுமி
                                 பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,             எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி.,டிஎல்பி.,டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ.,
தமிழ்த்துறை வல்லுநர்,
சென்னை.
             தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம் திண்டிவனம். சென்னையிலிருந்து திண்டிவனத்திற்குச் செல்ல இரண்டரை மணி நேரமாகும். திண்டிருணிவனம் என அழைக்கப்படும் புளியங்காடு-திண்டிவனம் கிராமம் சார்ந்த பகுதியாகும்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் கிடங்கில் என்னும் ஊர் திண்டிவனத்தை அடுத்து இருப்பதாலும், இந்நகரத்தை அடுத்துள்ள பெரமண்டுர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் பழமையானதாக இருப்பதாலும் இக்கிராமத்தில் வாழும் மக்களின் நிலையினை இவ்வாய்வுக்கட்டுரை எடுத்துக்காட்டி விளக்குகிறது. பெரமண்டுரினை அடுத்த முட்டியூரில் வாழும் பெண் பதினெட்டு வருடங்களுக்கு முன் குரங்கு முகத்துடனும்,சிறிய வாலுடனும் பிறந்த குழந்தையைப் புதைத்ததாகக் குறிப்பிடும்போது அவரிடம் தினோசரின் படத்தினைக்காட்டி குழந்தை இதுபோலிருந்ததா எனக்கேட்டபோது தெரிவித்த இசைவுக்கருத்தினால் மேலும் இது குறித்த செய்திகள் கிடைக்கலாம் என்ற நோக்கிலும், இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கிராமத்தின் நிலை
      பசுமை நிறைந்த நிலையில் கிராமம் இருப்பினும், அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி, நூலக வசதி, இணைய வசதி,தொலைபேசி வசதி போன்றவை அளிக்கப்படவேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. குடிதண்ணீர் இருப்பினும் உப்புநீராகவே காணப்படுகிறது. பெரமண்டுர் ஏரி பெருமாள் கோவிலின் பின்புறம் காணப்படுகிறது.
 மக்களின் பொருளாதாரத் தரத்தினை உயர்த்தும் அளவிற்குத் திட்டங்கள் இக்கிராமத்திற்கு வழங்கப்படவேண்டும்.உழவர்களுக்கு மரியாதை அளித்து பல திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
தொழில்நிலை
        ஓட்டு எண்ணிக்கையில் சுமார் ஐயாயிரம் மக்கள் வாழ்ந்து வரும் பெரமண்டுரில் தொழில் பெரும்பாலும் விவசாயமே முதன்மையாகக் காணப்படுகிறது. நெல்,மணிலா,சம்பங்கி,கோழிக்கொண்டை, சவுக்கு போன்றவை பயிரிடப்படுகின்றன.
            இதைத்தவிர மாடு வளர்த்தல்,எருவிற்றல்,களை பறித்தல்,பொருள்விற்றல் போன்றவை நடைபெற்று வருகின்றன. இறைச்சி விற்கும் தொழிலை தாழ்த்தப்பட்டவர் மட்டுமே அங்கு செய்து வருகின்றனர். மிளகாய்நாற்று,வாழைக்கன்று  போன்ற பல நாற்றுகள் திண்டிவனப் பேருந்து நிலையத்தில் விற்கப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளைப் பெரும்பாலும் வாங்கிச் சமைக்கும் நிலையே காணப்பட்டது. மக்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் வாகன வசதிகளைப் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஹட்சன்நிறுவனம் பால்கொள்முதல் கடையினை அமைத்துள்ளது. லிட்டர் ஒன்றிற்கு 17Ð முதல் 20Ð வரை தருவதாகவும் செய்திகள் தரப்பட்டன.
இது தவிர, தங்கநகை முலாம் பூசிய நகை விற்பவர் வந்து செல்வதையும் காண நேர்ந்தது. விவசாயம் இல்லாத நாட்களில் கட்டிடப்பணிக்கு ஆண்களும்,பெண்களும் செல்கின்றனர். கரும்பு ஆட்டிப் பாகு காய்ச்சும் நிலை இருந்து வந்த நிலையினைப் பெருமாள் கோவில் முன் அமைந்திருந்த பாத்திரம் உறுதிப்படுத்துகிறது.
(இணைக்கப்பட்டுள்ளது)-பின்னிணைப்புப்படங்கள் பழைய இரும்புக்காலம் (கி.மு. 1300 முதல் கி.மு. 475 வரை)  எனக் கருதப்பட்டுவருகிறது. பெருங்கற்காலமாக கி.மு 1000-கி.பி.200 ஆம் ஆண்டாக ஆய்வுலகில் குறிக்கப்பெற்றுள்ளது. ஆதிச்சநல்லூர்,சானூர்,அமிர்தமங்கலம்,கொற்கை,திருக்காம்புலியூர்,
உறையூர்,அரிக்கமேடு,கொடுமணல்,வல்லம்,தேவாரம் எனப் பல பெருங்கற்காலத் தடயம் நிறைந்த பகுதிகள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இக்காலக்கட்டத்தவர்கள் தங்களுக்கான வாழ்விடங்களை அமைத்தல்,வண்ணக்கற்களைப் பயன்படுத்துதல்,அணிகலன்கள் செய்தல்,உலோகக் கலைப்பொருட்கள் செய்தல்,மட்பாண்டங்களைச் சமைத்தல்,இரும்பினை மிகுந்த அளவில் பயன்படுத்துதல் எனத் தொடக்கக்காலச் சமுதாயம் இருந்து வந்துள்ளது. http://paalveli-athirvagal.blogspot.in/
இதன் தொடர்ச்சியாக இக்காலக்கட்டத்தில் வாழ்ந்துவந்த மக்கள் இருந்திருக்கலாம்.


கல்வி நிலை
           பெண்கள் பெரும்பாலும் ஒன்பதாம் வகுப்பிற்குக் கீழ் படித்துள்ளனர். ஊரினை விட்டு வெளியே வந்து பணியாற்றும் மனத்திடனுடன் அவர்கள் செயல்படவேண்டிய நிலையில் வாழவேண்டிய நிலையில் உள்ளனர். 3 சத்துணவு பால்வாடி மையங்கள், 1 தொடக்கப்பள்ளி என அரசு கல்வி மையத்தினை அமைத்துள்ளது.எட்டாம்வகுப்புவரை மட்டுமே இப்பள்ளியில் அமைந்துள்ளது. நூலகவசதியற்ற இப்பள்ளி அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படவில்லை. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அவர்கள் பயன்படுத்திய குவளை,தட்டு இவற்றைக் கழுவி வைக்கும் பணியும் அளிக்கப்படுவதாகத் தகவலாளர் தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களே புத்தகங்களை எடைக்குப் போட்டு விற்கும் பழக்கம் இருப்பதாகவும் தகவலாளர் குறிப்பிட்டுள்ளார்.அரசு நடத்தும் பள்ளிகளை ஒட்டியே மக்கள் தங்களது வாழ்வுநிலையினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.விவசாயம் சார்ந்த மக்களாக இருப்பதனால் கல்வி கற்கத் திண்டிவனத்தில் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் இருந்தும் அங்கே பெரும்பான்மையாகச் சேர்க்கப்படவில்லை. ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனால் தந்தையின் பணி குறித்த வினாவிற்குப் புரிந்து கொள்ள இயலாத நிலை காணப்பட்டது. எனவே, அரசு ஆங்கிலவழிக்கல்வியினை இணைத்து அளித்தல் வேண்டும். அளிக்கப்படும் சத்துணவினை இறைவனைத் தொழுதபின் வரிசையாக அமர வைத்து உண்ண வைக்கும் பழக்கம் காணப்படவில்லை. இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்று படிக்கும்போக்கும் காணப்படுகிறது.

சாதி
                 மக்கள் சாதிவாரியாகக் காணப்பட்டாலும் மொத்தமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
காலனி மக்கள் எனத் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கியிருந்ததைக் காண முடிந்தது.
மேலும், அவர்கள் சிவன் கோவிலுக்குள் உள்ளே நுழையவும்  அனுமதிக்கப்படவில்லை. இடையன்,நாயக்கர்,செட்டியார்,முதலியார்,கவுண்டர்,வண்ணான்,
அம்பட்டன்,ஆசாரி,வீரக்குடிவேளாளர்-பிள்ளை,நயினார்,நாடார்,
ஆதிதிராவிடர் போன்ற சாதியினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாக நில அடிப்படையில் பிரிக்கப்பட்டு,தொழில் நடத்துவதன்வழி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.இக்காலத்தில் இந்நிலை மாறியுள்தைக் காண இயலுகிறது.
வழிபாட்டு நிலை
                  கிராமத்தில் புவனேஸ்வர சிவன்கோவில்,வராகப் பெருமாள்கோவில், திரௌபதிகோவில், நயினார் கோவில், ஐயனார் கோவில் போன்றவை அமைந்துள்ளன. இக்கிராமத்தில் அமைந்துள்ள வராகப் பெருமாள் கோவிலும்.புவனேஸ்வர் சிவன் கோவிலும் மிகவும் பழமை வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. சிவன்கோவில் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. முதலில் இருந்த லிங்கத்தை அகற்றிப் புது லிங்கத்தை வைத்துள்ளனர். பழைய லிங்கம் பிள்ளையார் சிலைக்கு அருகே மேற்தளமற்ற நந்திக்கருகில் காணப்பட்டது. மேற்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.பெருமாள் கோவில் கருவறைக்கு மேலே பாம்பு சிலையும் இருப்பதாக தகவலாளர் தெரிவித்துள்ளார். 3 பிள்ளையார், முருகன், அம்மன், பரிதி போன்றோரின் சிலைகள் அங்கு காணப்பட்டன. இவை அனைத்தும் கோவிலில் அங்கங்கு கிடந்தவற்றைக் கண்டெடுத்து வைத்தவையாகும்.
 குளம்,மண்டப வாசல் போன்றவை அனைத்தும் அழிந்து விட்டன. புது லிங்கத்திற்குப் பாம்புக் கவசம் போடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சந்தனம் கலந்த சதுரக் கற்களால் அமைக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட லிங்கத்திற்கு இடையே கருங்கல் சதுரமும் காணப்படுகிறது. இக்கல் பூசாத நிலையில் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் இக்கல் திருப்பும்படி வழியாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம். காரணம், மண்டபத்தின் ஓரத்தில் சுரங்கப்பாதை இருந்ததாகவும், அதன் அருகில் உள்ள கிணறும் அழிந்து விட்டதாகவும், அச்சுரங்கப்பாதையின் வழி பெருமாள் கோவில் அமைந்துள்ள ஆண்டாள் சிலையின் அருகே கொண்டு சேர்க்கும் என்றும் சொல்லப்பட்டது.
மண்டபத்தில் அமைந்துள்ள லிங்கத்தின் நீளம் 66.செ.மீ,சுற்றளவு-90 செ.மீ, நந்தியின் நீளம் 52 செ.மீ,சுற்றளவு-185 செ.மீ.
கோவிலின் உயரம் 4 அடி வைத்து யானைகளால் தாக்குதல் நேராதவண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக்க் கருத்துகள் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன.இருப்பினும், ஏற்கனவே காடு சார்ந்த பகுதியாக இருந்திருப்பதால் குறிஞ்சி நிலமாவோ அல்லது மருத நிலமாகவோ இருந்திருக்கலாம் எனக் கருதலாம்.
படங்கள் கட்டுரையின் பின்னிணைப்பாக அளிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர் முருகன், செல்லியம்மன்,மாதா போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.
பெருமாள் கோவிலின் அருகில் ஆதிநாதர்-நயினார் கோவில் அமைந்துள்ளது.
கல்வெட்டுகள்
       சிவன்கோவில்,பெருமாள்கோவில்,நயினார்கோவில் போன்ற இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. (இணைக்கப்பட்டுள்ளன).
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கி.பி 7ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி.12 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவையாக இருக்கலாம். கல்வெட்டுகள் கருங்கற்களில் காணப்படுகின்றன. இவ் எழுத்துகள் வட்டெழுத்துகளாக இருக்கலாம். இச்சிவன் கோவில் இராஜேந்திரசோழன் குந்தவைக்காகக் கட்டிய கோவில் என இங்கு வசிக்கும் மக்களின் கருத்தாக அறியப்படுகிறது.
உருவங்கள்
       பெருமாள் கோவிலில் உள்ள 6 சதுர தூண்களில் மட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெருமாள்கோவிலில் எருது,லிங்கம் போன்றவை  காணப்படுவதால் இக்கோவில் சிவத்தலமாக முன்னர் வழிபடப்பட்டு வந்திருக்கலாம். மீன் போன்ற சின்னம் காணப்படுவதால் இக்கோவிலின் காலம் முத்தரையர் காலமாகவோ,பாண்டியர் காலமாகவோ இருந்திருக்கலாம்.


நம்பிக்கைகள்
  அரசமரமும்,வேம்பும் புனிதமாகக் கருதப்பட்டன. நரிக்குறவர்கள் குலத்தைச் சார்ந்த வயதான பெண் தனது கையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் நடித்த அடிமைப்பெண் பட எம்.ஜிஆரைப் பச்சை குத்தியிருந்ததனைக் காண நேர்ந்தது. அவர் நரிக்குறவர் மொழியிலும்,தமிழ்மொழியிலும் பேசுவதில் வல்லவராகவே இருக்கிறார்.
காலங்காலமாகப் பச்சை குத்தும் பழக்கம் இருந்து வருவதை இதனால் அறிய இயலுகிறது.
மொழி நிலை
   சென்னைத் தமிழிலிருந்து சற்று மாறுபட்ட தமிழ்மொழி அங்கு காணப்படுகிறது. தூய தமிழ் மொழி பேசப்பட்டவில்லை. வட்டாரச் சொல்வழக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. துரிஞ்சல் என்று சிறிய வௌவாலை அழைக்கின்றனர்.
விளையாட்டுகள்
   சதுரக் கட்டங்களை வரைந்து தாயம் விளையாடி மகிழ்ந்துள்ளதைப் பெருமாள் கோவிலின் தரையில் காண முடிந்தது.
முடிவுரை
  திண்டிவனம் சார்ந்த பகுதி இலக்கியங்களில் ஓய்மா நாடென அழைக்கப்பட்டதாலும்,பெருமுக்கல்,கீழ்வாலை போன்ற பகுதிகளில் பண்டைக்கால எழுத்துகள் காணப்படுவதாலும் இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. அடிப்படை வசதிகளான சாலை வசதி,மருத்துவ வசதி,தெருவிளக்கு வசதி போன்றவை இன்னமும் மக்களுக்கு அளிக்கப்படவேண்டும். வானம் பார்த்த விவசாய மக்களாக இருப்பதால் மழை இல்லாத காலங்களில் வறுமையில் வாடாமல் இருக்க அரசு ஆவன செய்யவேண்டும் என்பதும், இப்பகுதியில் சிந்துவெளிக்கும் முற்பட்ட கால வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம், பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை உயர்த்தப்படவேண்டும் என்பதும் இவ்வாய்வின் முடிவாகிறது.
பின்னிணைப்புகள்
பழைய கிணறு,கல்வெட்டு,சிவலிங்கம்-பழையது,கரும்புப் பாகு எடுக்கும் பாத்திரம்,கொவிலின் முகப்புத் தோற்றம்
     

            

No comments:

Post a Comment