இனியவை கூறல்: மின் புத்தகங்கள்: கீழ்காணும் மின்புத்தகங்களை தரவிறக்கி படிக்கலாம். தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ...
வரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர். உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக ...
செம்மொழிகளில் தமிழ் - முனைவர் மு. பழனியப்பன். உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் பெருமை தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தி. உலக அரங்கில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் தன்னிகரற்ற பெருமை இதுவாகும். இந்தப் பெருமை பல நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டும். தற்போது கிடைத்திருப்பது ஓரளவிற்கு மனநிறைவை தமிழ் மக்களிடமும் , தமிழ் அறிஞர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம் , சமஸ்கிருதம் , இலத்தீன் , பாரசீகம் , அரபு , எபிரேயம் , சீனம் , தமிழ் ஆகிய எட்டு மொழிகள் கொள்ளப்படுகின்றன. கிரேக்க மொழி பாரம்பரியம் மிக்க மொழியாகும். இந்தமொழியின் வரிவடிவம் கி. மு. 700 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இம்மொழியில் உள்ள இலக்கிய வளங்கள் அதிகம். ஹோமர் எழுதிய இலியது , ஒடிசி ஆகிய மாகாப்பியங்களும் , பிளாட்டோ , அரிஸ்டாட்டில் போன்றோரின் தத்துவ நூல்களும் இம்மொழியின் பெருமையை உலக அளவில் நிலைநிறுத்தி வருகின்றன. சமஸ்கிருதம் இந்தியவின் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். இந்த மொழியில் கி. மு. 1...
ஆண்டாளின் பக்திநிலை பி.ஆர்.இலட்சுமி முனைவர்பட்ட ஆய்வாளர் அன்னைதெரசாமகளிர்பல்கலைக்கழகம் கொடைக்கானல் . ஆண்டாள் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார் . ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களின் ...
கருத்துகள்
கருத்துரையிடுக