இணையத்தில் கொரியமொழி,தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு
இணையத்தில் கொரியமொழி,தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு
CHENNAI-CONFERNCE-2015-NOVEMBER-SIX
நாம் பேசும் மொழியானது, உள்ளிருக்கும் காற்றினை வெளியில் விடும்
பொழுது மிடறு, நாக்கு, பற்கள், வாயினது மேற்பகுதியாகிய அண்ணம், உதடுகள் ஆகிய
உறுப்புகளின் உதவியால் உருவாகிறது. இம்மொழியின் உதவியால் உலகத்தில் பல்வேறு
இடங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் இனம்,பண்பாடு,பழமை இவற்றைத் தெளிவுற அறிந்துகொள்ள ஏதுவாகிறது. அவ்வடிப்படையின்கீழ்
இணையத்தில் தமிழ்,கொரியா மொழிகளின் கற்றல் நிலைப்பாடுகள்
குறித்தும்,அம்மொழிகளின் சிறப்புகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரை
அமைகிறது.
கொரிய எழுத்துக்கள்
உலகில் ஆறாயிரத்து எண்ணூற்றுக்கும் (6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு
நாடுகளில் பேசப்படுவதாகவும், இதில் இரண்டாயிரத்து முன்னூறு (2300)மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதில் இரண்டாயிரத்து இருநூறு மொழிகள்
ஆசியாவிலும், இருநூற்று முப்பது
மொழிகள் ஐரோப்பாவிலும் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வரிசையில், உலகில் உரையாடப்படும் மொழிகளில் தமிழ் மொழி பதினைந்தாவது இடத்தில் உள்ளது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகள் பேசுவோர் 20 கோடியாகும். ஊரல் இன மொழிகளான அங்கேரியன் 1.40,
ஃபின்னிசு 0.50, எசுதோனியன் 0.10, மார்த்வின் 0.30 என சுமார் 2
கோடி முப்பது லட்சம் பேராவர். அல்டாய்க் மொழிகளைப் பேசுவோர் பட்டியலில் துருக்கி 4.50,
பிற துருக்கிய இன மொழிகள் 5.50, மங்கோலியன் 0.50,
எனச் சுமார் 10 கோடியே ஐம்பது இலட்சம்
பேருள்ளனர். சப்பானிய மொழி பேசுவோர் 12 கோடியும் கொரிய மொழி
பேசுவோர் 6 கோடியும் உள்ளனர். பெருநாட்டில் கொசுவா மொழி
பேசுவோர் 1.20 கோடியாவர். ஆக மிக நெருங்கிய ஒற்றுமை கொண்ட
ஒட்டுநிலை மொழிகளை (Agglutinative Languages) பேசுவோர் 50 கோடிக்கும் மேலாவர். (http://nillal.com)
ஒரு மொழியை கற்கின்றவர் மூன்று
கூறுகளைக் கற்க வேண்டும். அவை,
1. எழுத்தும் அதன்
ஒலியும்
2. சொல்லும் அதன்
உச்சரிப்பும்
3. சொல்லின் பொருள்.
இதன் அடிப்படையில் கொரியமொழி
உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது.
கொரிய மொழி எழுத்துக்கள் 14ஆம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. இவ்வெழுத்து முறை
பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945இல்
கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை அடைந்த பின்பு எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு
வருகின்றது. திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை
திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய
காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக
எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும்
குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர்.
“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்
இணையார் கழலிணை யீரைந்தாகும்
இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்
இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)
( பாடல் 925,942,944,904,
1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதைத் திருமூலர்
வலியுறுத்துகிறார்.) (http://tamilandvedas.com)
கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.
http://tamilandvedas.com
இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27
கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா‘
என்று அழைக்கின்றனர். எளிய எழுத்துக்களாகிய 24ல்
14 எழுத்துக்கள் 'சா‘ என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா
எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.
ஒரு மொழியின் அடிப்படை-ஒலிப்புநிலை
மொழி குறிப்பாலும்,குறியீடுகளாலும் எழுதப்பட்டும்,பேசப்பட்டும் காலங்காலமாக உணர்த்தப்பட்டநிலைகளை ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. அம்மொழி
எழுத்துநிலையில்
ஓவிய எழுத்து முறை - படத்தால்
ஆனது.
அசை எழுத்து முறை - இரண்டு
ஒலி இணைந்த எழுத்துமுறை
ஒலியன் எழுத்து முறை - ஓர்
ஒலிக்கு ஓர் எழுத்து எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மொழியிலும் பொருள்
வேறுபாட்டைத் தரும் அடிப்படை ஒலிகளை முதல் ஒலிகள் அல்லது ஒலியன்கள் (Phones) என்று கூறுவர்.
மொழியியலார் தமிழ் ஒலிகளைப் பகுத்துக்
காட்டியுள்ள பாங்கினைப் பின்வரும் அட்டவணைகளால் அறியலாம். இவ்வட்டவணைகளைத் தொல்காப்பியர் கூறும்
பிறப்பிலக்கணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
உயிர் ஒலிகளை வகைப்படுத்தும் போது
மூன்று அடிப்படைகளை மொழியியலார் கருத்தில் கொண்டுள்ளனர்.
1. நாக்கின் நீட்சி (Advancement
of the tongue)
2. நாக்கின் எழுச்சி (Height
of the tongue)
3. இதழின் நிலை (Position
of the lips)
மொழியியலாரின் அட்டவணையில் உலக
மொழிகள் அனைத்திலும் உள்ள ஒலிகள் யாவும் இடம் பெற்றிருக்கும். மேற்கண்ட அட்டவணையை உட்கொண்டு மொழியியல்
அடிப்படையில் உயிர் ஒலிகளைப் பின்வருமாறு விவரிக்கலாம். இ - மேல் இதழ்விரி முன்னுயிர் (High Front Unrounded Vowel) எ - இடை இதழ்விரி முன்னுயிர் (Mid
Front Unrounded Vowel) அ
- கீழ் இதழ்விரி நடுவுயிர் (Low Central Unrounded Vowel) ஒ - இடை இதழ்குவி பின்னுயிர் (Mid
Back Rounded Vowel) உ -
மேல் இதழ்குவி பின்னுயிர் (High Back Rounded Vowel) இங்குக் குறில்களுக்குக்
காட்டப்பட்ட வகைப்பாடே அவற்றின் நெடில்களுக்கும் பொருந்துவதாகும். மெய்யொலி அட்டவணை மெய்யொலிகளை வகைப்படுத்தும் போது பிறப்பிடம்,
பிறப்பு முறை (Manner of Articulation), ஒலிப்புடைமை
(Voiced) ஆகிய மூன்றனையும் அடிப்படையாகக் கொள்வர்.
மொழியியலாரின் அட்டவணையில் உலக
மொழிகள் அனைத்திலும் உள்ள ஒலிகள் யாவும் இடம் பெற்றிருக்கும். தெளிவு கருதித்
தமிழில் உள்ள ஒலிகளை மட்டும் இந்த அட்டவணையில் காணலாம்.
அட்டவணையில் ஐ,
ஒள ஆகிய தமிழ் எழுத்துகள் இல்லை. மொழியியலார் ஐ, ஒள ஆகியவற்றைத் தனி ஒலியாகக் கருதவில்லை. ஐ என்பதனை அ+ய் என்று இரண்டு
ஒலிகளாகவும், ஒள என்பதனை அ+வ் என்று இரண்டு ஒலிகளாகவுமே
கருதுகின்றனர். அதனாலேயே ஐ, ஒள இவற்றைக் கூட்டொலிகள் (diphthong)
என்பர். மெய்யொலிகளை
வகைப்படுத்தும் போது பிறப்பிடம், பிறப்பு முறை (Manner
of Articulation), ஒலிப்புடைமை (Voiced) ஆகிய
மூன்றனையும் அடிப்படையாகக் கொள்வர்.
சான்றாகக் ‘க’ ஒரே என்ற
எழுத்தைக் கப்பல், அகம், தங்கம் ஆகிய
மூன்று சொற்களிலும் பயன்படுத்தும் போது வெவ்வேறு விதமாக உச்சரிக்கின்றோம். முதற்
சொல்லில் [k] என்ற உச்சரிப்பையும், இரண்டாம்
சொல்லில் [h] என்ற உச்சரிப்பையும், மூன்றாம்
சொல்லில் [g] என்ற உச்சரிப்பையும் தாய்மொழியாளர்கள் நம்மை
அறியாமலே பயன்படுத்துகின்றோம். பிறமொழியாளருக்கு இது புரியாத புதிராக இருக்கும்.
எந்த இடத்தில் க - k ஆகிறது, எந்த
இடத்தில் க - g ஆகிறது, எந்த இடத்தில்
க - h ஆகிறது என்பது புரியாது. இதனை மொழியியலார்
விளக்குகிறார்கள் மொழி முதலிலும், மொழியிடையில்
இரட்டிக்கும்போதும் க - K ஆகவே இருக்கும். இதனை ஒலிப்பிலாத்
தடையொலி (Voiceless Stop) என்பர். அதாவது இவ்வொலி பிறக்கும்
போது குரல் நாண்களில் எவ்வித அதிர்வும் ஏற்படுத்தாமல் பிறக்கும். மொழியிடையில்
மூக்கொலியை அடுத்துவரும் க - g என்று மாறுகிறது. இதனை
ஒலிப்புடைத் தடையொலி (Voiced Stop) என்பர். இவ்வொலி குரல்
நாண்களில் அதிர்வை ஏற்படுத்திப் பிறக்கும். மொழியிடையில் இரண்டு உயிர்களுக்கு இடையில் வரும் க - h என்று மாறுகிறது. இதனை உரசொலி (Fricative) என்பர்.
இந்த மூன்று ஒலிகளையும் க என்ற ஒலியனின் மாற்றொலிகள் என்பர்.
ல, ள பிறப்பிடம்
நுனி நாக்கினால் நுனி அண்ணத்தை தொடும்
பொழுது ‘ல’கரம் பிறக்கும்.
நாவின் நுனி சற்று வளைந்து நுனி
அண்ணத்திற்கும், இடை அண்ணத்திற்கும்
இடைப்பட்ட பகுதியில் தொடும் போது ‘ள’கரம்
பிறக்கின்றது.
இவற்றினை ‘மருங்கொலி’ என்பர்.
“ நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் “ ( தொல்
- 96 )
என்கிறார் தொல்காப்பியர்.
ழ, ர பிறப்பிடம்
நாக்கின் நுனியானது, நன்கு வளைந்து இடை அண்ணத்தில் உரசுவதால் ‘ழ’காரம் பிறக்கிறது. இதனை‘உரசொலி’
என்பர்.
நுனிநா நுனியண்ணத்தை வருடுவதால் ‘ர’காரம் பிறக்கிறது. இதை ‘வருடொலி’ என்பர்.
“ நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் “ ( தொல்
- 95 )
ற பிறப்பிடம்
நுனி நாக்கினை நுனி அண்ணத்தில்
ஆட்டுவதால் பிறப்பது ‘ற’காரம் ஆகும். இதனை ‘ஆடொலி’என்பர்.
“அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் ……. பிறக்கும் “ ( தொல்
- 94 )
தமிழ் உயிரெழுத்துகள்
12,மெய்யெழுத்துகள் 18. இவ்வெழுத்துகளுடன் கொரிய
எழுத்துகளும் ஒலியியன் முறையில் இணைந்து வருகின்றன.
(http://www.indiana.edu/~koreanrs/hangul.html)
என்ற வலைத்தளத்தில் கொரியமொழி
ஒலியமைப்புடன் தெளிவுடன் கற்பதற்கு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

My languages.org தளத்தில் கொரியமொழியினை
முழுமையாகக் கற்பதற்கான தரவுகள் அனைத்தும் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் தமிழ்மொழியுடன் பொருந்தி வருகிறது
என்ற கூற்றிற்கு முற்றிலும் மாறானதாகக் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
தந்தை(அப்பா)-அப்பச்சி
தாய்(அம்மா)-அம்மானி
அத்தை(மாமி)-இமோ(கூகுள்
மொழிபெயர்ப்பு) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கு உரித்தான
பேச்சுவழக்குமொழி கொரியமொழியிலும் இருக்கலாம் என்ற கருத்து இவ்வாய்வின்வழி
பெறப்படுகிறது.
ஏனெனில், கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமான ‘ஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப்
பதிவு செய்து வருகிறார். அவரது
பதிவுகளின்படி, இன்றும் கொரியாவில் பெற்றோரை அம்மா, அப்பா, என்றே அழைக்கிறார்கள். ‘புதியது’ என்பதை ‘புது’
என்கிறார்கள். ‘நீ திரும்ப வா’ என்பதை ‘நீ இங்கே பா’ என்கிறார்கள்.
உயரம் அங்கே ‘உரம்’. புல்லை வெட்டு
அங்கே ‘புல் வேடா’. அச்சச்சோவும்,
அப்பாடாவும் அங்கே சகஜம். இப்படி அங்கே நிறைய தமிழ்ச் சொற்கள்
புழக்கத்தில் இருக்கின்றன.(நன்றி-கூகுள்-மடலாடற்குழு)
Lazer printer, Television, Pen,Waiter,
Compute,rSeat, Coffee, Taxi, Tennis, Pineapple, Sofa, Camera, Banana, Sunglass,
robot போன்ற ஆங்கிலச்சொற்கள் கொரிய மொழிச் சொற்கள் இல்லாமல் ஆங்கில
ஒலிப்புமுறையிலேயே அமைந்துள்ளன. http://www.indiana.edu/~கொரிய
மொழி 12,177 இடங்களை
ஒருங்குறியீட்டிலும் பெற்றுள்ளது.
தமிழ் மொழியினைக் கடல் கடந்து வணிகம்
செய்த பல நாட்டினரும் பேசி வந்துள்ளனர்.கொரியமொழி சித்திர எழுத்துகளான
ஜப்பான்,சீனம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இவ்வெழுத்துகளில்
சில சிந்துவெளிச் சின்னங்களில் காணப்படும் குறியீடுகளை ஒத்து வருகிறது. சிந்து வெளிச் சின்னமுத்திரைகள் தமிழ்
சார்ந்து காணப்படுவது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகிறது.
எனவே, இது இந்தோ-ஆரியன் காலகட்டத்தைச் சார்ந்ததாகவும் கருதப்படலாம், இன்னமும்
கண்டறியப்படாத மொழிக் குடும்பச் சிக்கல்களில் ஒன்றான ப்ரோ எலமைட் குறித்து
ஆய்வுகள் வெளிவரும்போது கொரியமொழியின் பண்பாட்டு வேர்கள் உறுதிப்படும். ஜெர்மனியிலுள்ள பெர்ன் நூலகத்தில் மட்டும் 1000 தமிழ்
ஓலைச் சுவடிகள் இருக்கிறது. இதைப்போல பிரிட்டிஷ் மற்றும் ஆம்ஸ்டர்டாம்
நூலகங்களிலுள்ள தமிழ் ஓலைச் சுவடிகள் பலவற்றிலும் தமிழ் மற்றும் பிற மொழிகள்
தொடர்பான ஆய்வுச்செய்திகள் கிடைக்கலாம். இதனால் இன்னமும் பலதரப்பட்ட ஆய்வுச்
செய்திகள் கிடைக்கலாம் என்பது இவ்வாய்வுக் கட்டுரையின் முடிவாகிறது.
ஆய்வுக்குப் பயன்பட்ட வலைத்தளங்கள்
- Tamil
virtual academy.org
- www.srm.org
- My languages.org
குறிப்பு-மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் தெளிவாகக் கீழே கொணரப்பட்டுள்ளன.
very usful,thanks a lot for sharing this useful post with us, keep it up
பதிலளிநீக்குlatha
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமொழி பற்றிய தங்களின் அருமையான, பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குJoshva