செவ்வாய், 2 அக்டோபர், 2012

அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! .



அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!
. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwpti3dGBN8kPV1crioRkKOIaZ1I7qySNb6VNfPaMXMw8ym5qTeg9zF5dMRNkQ6r9eWtjI7sMkRtzy8C0ujt5UqhPwV7sHZpMCpmTlK9xImwByHddFCbesHuuLpOEH48WDgXZlyJvajOYe/s320/tamil+game.JPG
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  
தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகள்  உலக அழிவைப் பற்றிப் பேசுகின்றன. 

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்கக் கண்டத்தை சேர்ந்த மக்கள்இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரைப் பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியேறினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். செவ்விந்தியர்களுக்கும்தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதைப் படிப்பவர்களுக்குஇது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம்வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம்உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையைக் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_QOe9Fu0rble7FDa1VogQwHJD_Xelp3eM_aCql6qAe-Jz9JDZ-q45WrIJFe0ZDEUBgvFZd2mhyphenhyphenf-DBZK_DKhR9mnHu6mZX2CwJFpah46loQ5rH8I_hZa_cCCh5W09YpcMfOKNK_QD5TUy/s400/tamil+language.jpg


  The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களைமெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்துக் கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

  ‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள் என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில்யாரும் திரும்பிப் பார்க்கக் கூட யோசிக்கும் புத்தக அடுக்கில்தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அருமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படித்தான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

  செவ்விந்தியர்களின் கலாச்சாரக் கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல்செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாக இத்தகைய நுட்பங்களைப் பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியாஎகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

  செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைநிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலாச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும்கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும்வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில்செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy8tvPsP8HvpmcUr2VOquXTHDrF0KFGYf_zUW5EZSFlYdnQ3dM0LfouH5GiCFUwborgq0Sctbm8-xMfd9UMBMvLYsaUlt9AxBi092y709pCa34l3snJoYYnihqLMHd42CAo7Gexw8WHAYJ/s320/calendar+maya.jpg
மாயன் காலண்டர்

  ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனைக் கதை போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்தக் கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

  ஆராய்ச்சியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்குக் கப்பல்களோடு பொருந்திப்போகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்துச் செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

  கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளைக் கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுக்கடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிப்படையில் அமைந்த பெயர்களைப் பற்றிக் கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிகக் கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும்அமெரிக்கக் கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றைப் பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுக்கடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன்தன்னுடைய சிறப்புகள் பற்றிப் பதியத் தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

  நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தைத் தடை செய்திருக்கின்றன. 

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 
நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKjN5ZTmQPRztNb2WZ6VX_sIFXgNlxhPvs0TrhG44XtfYAYSoCZVqqseetlR4Car9UA3nyD-JWcp_yxsbt-Y6vb4gLdm3YqH8D-_PEzvFEe2kDHICnvVaGdeFhtnh3RcwzgSjS68M56Bnk/s320/tamilians.jpg


  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது. 
நன்றி:  தேடல்

இவற்றையெல்லாம் நம்பாதவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள்:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7wo00RYShHZ2CLRMXelN70FEDvtVrzx0qJDlNxQx49Id3f-9qm3N70y1bhKO1gmMcNlK23a-V-In7jVTo8G2j1xtd4X-6PvOOXEPD9Zs_8ZN_QiT4eO9XG_63QLa_IbGoOcR-kfmg6-AM/s1600/new_zealand_tamil_bell.jpg
நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துடைய மணி  - காலம்  AD 1200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக