Monday, 3 October 2011

பூம்புகாரின் தொன்மை


பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.
மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476  ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினை உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் போகிறது அதன் தொடர்பாக நம் தமிழ் மண்ணிலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் முக்கிய ஆதாரம் பூம்புகார்!

இந்தத் தொடரில் இந்திரன் சம்பந்தப்பட்ட விவரங்களில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். இந்திரன் சம்பந்தப்பட்ட இடம் புகார் நகரமாகும். அங்கு நடந்து வந்த இந்திர விழா குறித்த தமிழ் ஆதாரங்களைப் பார்க்கும்போது, போனஸாக பல விவரங்களும் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்ததுதான், முசுகுந்தனும், மனுவில் ஆரம்பித்த சோழ பரம்பரையும், சோழர்கள் கொண்டாடிய சிபியின் உறவு முறையில் வரும் ராமனும்.

அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்க்கும் போது, அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்தன. அதை ஆராய்ந்தபோது யுகங்களைப் பற்றியும், ராமன் வாழ்ந்திருக்ககூடிய காலத்தைப் பற்றியும் அறியலாம்.
பனியுகம் (Ice Age) என்றால் என்ன என்பதைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டால், மேற்கொண்டு சில விவரங்களைப் பார்க்க நமக்கு உதவியாக இருக்கும். 

பூமி தன் அச்சில் தற்சமயம் 23-1/2 டிகிரி சாய்ந்துள்ளது. இப்படி சாய்ந்து இருக்கவேதான் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. பூமியின் சுழற்சியின் காரணமாகவும், சுற்றியிருக்கும் கிரகங்களது இழுப்பு சக்தியின் காரணமாகவும் இந்த சாய்வு மெதுவாக வேறுபடுகிறது. இந்த வேறுபாடு 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை ஆகிறது என்று அறிவியலார் கூறுகின்றார்கள். இந்த இரு நிலைகளும் இடையே சுமார் 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார்கள், இதனுடன், சூரியனின் பின்னோக்கு இடப்பெயர்வும் (Precession ), சூரியனைச் சுற்றி பூமி செல்லும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் குறிப்பிட்ட அட்ச ரேகைப் பகுதிகளில் படிப்படியாக குளிர் அதிகமாகி பனி படிய ஆரம்பிக்கிறது.

பனிப்பாறைகளாக இருக்கும்  இப்படிப்பட்ட நிலை  பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கும் . அப்படி பனி நீடிக்கும் காலத்தைப்  பனி யுகம் என்கிறார்கள். ஆனால் பனி யுகம் என்றுமே இருந்து விடாது. பூமியின் சாய்மானம், சுழற்சி என்று முன் சொன்ன காரணங்கள் மாறி மாறி வருவதால், சூரிய ஒளி  அதிகம் பட ஆரம்பித்து, பனி உருக ஆரம்பிக்கும். இப்படிப் பனி உருக ஆரம்பித்தது, 17,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது என்று கணித்துள்ளனர். இனி வரப்போகும் காலத்தில், இன்றைக்கு 50,000 வருடங்களில், மீண்டும் பனியுகம்  ஆரம்பிக்கும் என்கிறார்கள். 

சூரிய  வெப்பம்  பூமியின் மீது விழ விழ, பனி உருக ஆரம்பிக்கிறது. அதனால், அதுவரை வெளியில் தெரியாத நிலப்பகுதிகள் தெரிய வரும். புது நதிகளும் தோன்றலாம். அப்படித் தோன்றிய ஒரு நதி, கங்கை ஆகும். கங்கோத்ரி என்னும் பனிக் கருவிலிருந்து, பனி யுகம் முடிந்த பின் கங்கை உருகி வர ஆரம்பித்தது.

இவ்வாறு பல ஆறுகள் பெருக்கெடுக்கவே, அவை சேரும் கடல் மட்டமும் அதிகரிக்கிறது. பனி யுகம் முடிந்த காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதும், இன்றைக்கு 17,000 ஆண்டுகளிலிருந்து   7,000 ஆண்டுகளுக்குள், உலகெங்கும் பல இடங்களில் கடலோரப் பகுதிகள் கடலுக்குள் முழுகி விட்டன.
இன்றைக்கு இருக்கும் அமெரிக்காவின் அளவுக்கு ஆங்காங்கே நிலப்பகுதிகளைக்  கடல் கொண்டு விட்டது என்று க்ரஹாம் ஹான்காக் (Graham Hancok) என்னும் ஆழ் கடல் ஆராய்சியாளர் கருதுகிறார்.
Hancock 
க்ரஹாம் ஹான்காக்

இப்படி கடல் மட்டம் ஏறின விவரங்களை ஆராய்ச்சி செய்துள்ளார் க்லென் மில்னே (Glenn MIlne) என்னும் ஆராய்ச்சியாளர்.
அவர்கள் கூறும் விவரப்படி, இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமான அளவு ஆஸ்திரேலியப் பகுதியில் நிலப்பரப்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. 
அது போல தென் கிழக்கு ஆசியா - அதாவது இந்தோனேசியா, இந்தியாவின் தெற்கில் உள்ள இந்தியப் பெரும்கடல் பகுதியிலும், இந்தியாவின் பரப்பளவு அளவுக்கு நிலப்பகுதி கடலுள் மறைந்து விட்டது என்கிறார்கள்.
இதை ஒரு ஹேஷ்யமாக அவர்கள் சொல்லவில்லை.
கடலின் ஆழம், பனி யுகம்  முடிந்து கடல் மட்டம் உயர்ந்த விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகெங்கும் கடல் பகுதி, கடலோரப்பகுதில் உள்ள கடலின் ஆழம் ஆகியவற்றை அளந்து கொண்டு வருகிறார்கள்.
அதில் நம் இந்தியப் பகுதியைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன இடங்களும், துவாரகை இருக்கும் குஜராத் பகுதியும் அடங்கும்.


அப்படி அவர்கள் காட்டும் ஒரு இந்தியப் பகுதி பூம்புகாரை ஒட்டியுள்ள கடல் பகுதி ஆகும். இன்றைக்கு இருக்கும் பூம்புகார் நிலப்பகுதியிலிருந்து கடலுக்குள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், 70 அடி ஆழத்தில் U - வடிவில் குதிரையின் லாடம் போன்ற அமைப்பைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

அதன் மொத்த நீளம் 85 மீட்டர்.
'U'
அமைப்பின் கை போன்ற இரு அமைப்புகளின் இடையே உள்ள தூரம் 13 மீட்டர். இந்த அமைப்பின் உயரம் 2 மீட்டர்.
கை போன்ற அமைப்புப் பகுதி துண்டு துண்டான கற்களால் ஆனது போல இருக்கிறது. இயற்கையில் இந்தஅமைப்பு தானாகவே இருக்க முடியாது.
இதை ஆராய்ச்சி செய்தவர்கள் இப்படி வரைபடமாகக் காட்டியுள்ளார்கள்.
pumpukar


இதைப் படம் பிடித்து 2001 - ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

ஆழ்கடலில் இதன் பகுதிகள் இப்படி இருக்கின்றன:-

Poompukar-U-2
Poompukar-U-3

poompukar-U-1

இந்த அமைப்பு  ஒரு கோவிலின் சுவராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கட்டுமானத்தின் அடித் தளமாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த அமைப்பு இருக்கும் இடம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும்.
க்லென் மில்னே அவர்களது கடல் மட்டக் கோட்பாட்டின் படி அந்த இடம்  11,500  ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும். 
அதாவது 11,500  ஆண்டுகளுக்கு  முன் அதைக்  கடல் கொண்டிருக்க வேண்டும்.


எந்த ஆங்கிலேயர்கள் ஜெர்மானிய மாக்ஸ் முல்லர் துணையுடன், இந்தியாவின் தொன்மையை அழிக்க முற்பட்டார்களோ, தங்கள் மூதாதையரான ஆரியர்களே இந்தியாவில் 3,500 ஆண்டுகளுக்கு முன் புகுந்து, இன்றைக்கு இந்தியா எங்கும் பரவி விட்டனர் என்றார்களோ, அந்த ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்தவர்களான இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்று உலகெங்கிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித நாகரீகத்திலேயே, மிகவும் தொன்மை வாய்ந்தது, இங்கே தென்னிந்தியாவில் இருக்கும் பூம்புகாரில்தான் என்கிறார்கள். 
. அவர்களது இந்த  ஆராய்ச்சியை நமது நாட்டு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் (NIO ) முன்னிலையில் சொல்லி உள்ளார்கள். ஆனால் அப்போதைய அதன் தலைவர் (Dr A.S. Gaur) இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லி விட்டார்.
லாட வடிவிலான அந்த அமைப்பைச் செய்ய உயர்ந்த டெக்னாலஜி தேவை.No comments:

Post a Comment