tamil months


தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம்.  அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள்.   இன்று  தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது.   இருப்பினும்  நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும்  நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது  திணித்துவிட்டனர். 

                 தமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்

1.     சைத்திரா --- ---   சித்திரை
2.     வைசாகி  ------    வைகாசி 
3.     மூலன்      --- ---   ஆனி
4.     உத்திராட ---- --- ஆடி
5.     அவிட்ட    --- ---   ஆவணி
6.     பூட்டாதி --- --- --  புரட்டாசி
7.     அசுவதி   --- ----     ஐப்பசி
8.     கிருத்திகா  ---- -   கார்த்திகை
9.     மிருகசீரிசா  -----  மார்கழி
10.                        புனர்தை      ---- -  தை
11.                        மகசி    --- --- --- --  மாசி
12.                        பல்குணா --- --- -  பங்குனி 

              ஆனால் நாம் ஆரிய மாற்றத்திற்கு முன்பு வரை தமிழர்கள் தமிழர்களாகவே  இருந்த காலகட்டத்தில்  பின்பற்றப்பட்ட தமிழ் மாதங்களை நோக்குக. 

                              தமிழரின் பன்னிரு மாதங்கள்
1.     சுறவம்   ( தை )
2.     கும்பம்   ( மாசி )
3.     மீனம்      ( பங்குனி )
4.     மேழம்     ( சித்திரை )
5.     விடை     ( வைகாசி )
6.     ஆடவை ( ஆனி )
7.     கடகம்      ( ஆடி )
8.     மடங்கல் ( ஆவணி )
9.     கன்னி       ( புரட்டாசி )
10.                        துலை       ( ஐப்பசி )
11.                        நளி            ( கார்த்திகை )
12.                        சிலை       ( மார்கழி )
               நாம் தற்போது தமிழ் மாதங்கள் என்று பின்பற்றப்படும் மாதங்களை அடைப்புக்குறிக்குள்  தந்திருக்கிறேன்.  நாம் தமிழர்கள்; தமிழர்களாகவே இருப்போம். தமிழ் மாதங்களையே பின்பற்றுவோம்.
thanks-www.eegarai.net

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை