சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்
2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்
இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை, அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில் தெளிவான வரையறைக்கு உட்படுத்தியிருப்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாகும், தமிழை செம்மொழித் தமிழ் என்று நடுவண் அரசு அரசாணையாக 2004-இல் அறிவித்தது. மேற்படி நிறுவனம் சங்க இலக்கிய நூல்கள் என்பவை கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை என்றும், அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் மற்றும் இறையனார் களவியல் என 41 நூல்களை சங்க இலக்கிய நூல்கள் என இனம் கண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சங்க இலக்கிய நூல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது. சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்ற பண்டைய தமிழர் பண்பாடு என்பது, அது எதோ தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்பதல்ல இவை வையக மாந்தர் யாவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற உலகமயமாதல் (Globalization) என்றக் குவலயக் குடும்பம் (Global Family) அணுகுமுறைகள் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழின்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
- என்ற மாபெரும் தத்துவத்தின் கீழ் உலக மக்கள் யாவரும் உறவினர்களே இதில் நாடு இனம் நிறம் என்ற பாகுபாட்டிற்கு இடமில்லாமல் யாவரும் உறவினர்களே, எல்லா நாடுகளும் பண்பட்ட ஊர்களே என்ற மிகப்பெரிய உயரிய வாழ்வியலை உணர்த்தும் அறநெறியாக உள்ளது.
வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்களஞ்சியம் குறிப்பிடும் பொருள் ETHICS என்பதாகும். ETHICS என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் அறநெறிகள், அறவியல், நன்நெறிக்கோட்பாடுகள், வாழ்வியல் ஒழுகளாறுகள், பண்புகள், ஒழுக்க முறைகள் முதலான சொற்கள் வழங்கி வருகின்றன. இவற்றுள் வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லே பரவலான ஏற்பினைப் பெற்றுள்ளது, வழக்கிலும் நிலைபெற்றுள்ளது.
சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக்கொள்ளவேண்டும். இந்தக் கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்புகளைத்தான் நாம் வாழ்வியல் நெறிகள் என்று கூறுகிறோம்.
வேறு வகையில் குறிப்பிடுவது என்றால், ஒரு தனிமனிதன் பிறரிடம் எந்த எந்தப் பண்புகளை எதிர்பார்க்கின்றானோ, அந்தப் பண்புகளைத் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணும்போது, அந்தப் பண்புகள் யாவும் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் அறிநெறிகளாக ஆகிவிடுகின்றன.
உலகச் சொற்களஞ்சியங்கள் வாழ்வியல் நெறிகளின் பல்வேறு வகைகளை அடையாளம் காட்டியுள்ளன. அவற்றை ஆங்கிலத்தில் ‘THE CODE OF ETHICS’ என்கின்றனர். வாழ்வியல் அறநெறிகள் என்றென்றும் மாறாதவை இவை உலகப் பொதுவானவை (Universal Ethics) இவை இரு பிரிவுகளாக உள்ளன. ஒன்று தனிமனித வாழ்வியல் நெறிகள் (Personal Ethics) இரண்டாவது சமூக வாழ்வியல் நெறிகள் (Social Ethics).
சமூக நெறிமுறைகளை அறம், பொருள், இன்பம் என மூன்றாக பகுத்துக் கூறுவது பண்டைத் தமிழ் மரபு.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு”
- என்பது தொல்காப்பிய நூற்பா.
சங்க இலக்கியமும் இங்ஙனமே குறிப்பிடும். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பத்தை தழுவி நிற்கும். இன்ப நுகர்ச்சிக்குத் தேவைப்படுவது பொருள் அப்பொருள் அறவழியில் வரவேண்டும் என்பதே பண்டைத் தமிழரின் வாழ்வியல் அறநெறியாகும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுடன் வீடு என்ற ஒன்றையும் சேர்த்து உறுதிப் பொருள்களை நான்கு என்றது பின்னை வழக்கு, இவ்விரிவாக்கம் பக்தி நெறிக் காலத்தில் உருவானது. முப்பாலில் நான்கு பகுப்பையும் அடக்கிக் கூறியிருப்பது திருவள்ளுவரின் தனித்தன்மை ஆகும். இதனையே பின் வரும் திருக்குறள் வாயிலாக உணர்த்துகின்றார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் எண். 50)
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் எண். 50)
சங்க இலக்கியத்தை வாழ்வியல் நெறிகள் நோக்கில் ஆராய்வதற்கு மிகுந்த இடமுள்ளது. அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், பொருள் சார்ந்த வாழ்வியல் நெறிகள், இன்பம் சார்ந்த வாழ்வியல் அறநெறிகள் என மூன்று நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை பற்றிய சிறப்புக் குறிப்புகள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் என்னும் நூலில் திருவள்ளுவர் சுட்டும் வாழ்வியல் அறநெறிகள் ஆகும்.
பொருளின் நிலையாமைப் பண்பைப் பற்றிப் பேசுவதுடன் நில்லாமல் பொருளின் அருமையையும் தேவையையும் முதன்மையையும் வலியுறுத்திக் கூறியிருப்பது சங்க இலக்கியத்தின் தனித்தன்மை ஆகும்.
“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (குறள் எண்.247)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (குறள் எண்.247)
இன்பம் சார்ந்த வாழ்வியல் அறநெறிகள் என்னும் நோக்கில் சங்க இலக்கியத்தை நுணுகி ஆராயும் போது கிடைக்கும் வாழ்வியல் உண்மைகள் திட்பமும், நுட்பமும் வாய்ந்தவை ஆகும். வெறும் உடல் இன்பம் பற்றி மட்டும் சங்க இலக்கியம் பேசவில்லை. அவற்றிற்கு மேலாகத் தலைவன் தலைவி உள்ளப் புணர்ச்சிக்குச் சங்க இலக்கியம் முதன்மை தந்துள்ளது. எ.கா.
“அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை-40)
அகத்திணைப் பாடல்களில் மட்டுமின்றி, புறத்திணைப் பாடல்களிலும் வாழ்வியல் நெறிகள் குறித்தான பற்பல அரிய கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எ.கா.
பண்டையச் சமூகத்தில் மக்களிடையே வாழ்வியல் அறநெறிகள் எங்ஙனம் ஓங்கியிருந்தன. அதில் அந்நாட்டு அரசர்களின் பங்கு எப்படியிருந்தன என்பதை சுட்டும் பாடலாக புறத்திணை பாடல் எண். 312-இல்
பண்டையச் சமூகத்தில் மக்களிடையே வாழ்வியல் அறநெறிகள் எங்ஙனம் ஓங்கியிருந்தன. அதில் அந்நாட்டு அரசர்களின் பங்கு எப்படியிருந்தன என்பதை சுட்டும் பாடலாக புறத்திணை பாடல் எண். 312-இல்
“நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே”
- என்றப் பாடல் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. “பானை சோற்றிற்கு ஒரு சோறே பதம்” என்ற பழமொழிக்கேற்ப பண்டையக் காலத்தில் அரசர்கள் மக்களின் வாழ்வியல் அறநெறிகளில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதை மேற்படி பாடலின் ஒரே ஒரு அடியாயினும் அது நெற்றி அடியாய் உணர்த்துகிறது. இதையேதான் தமிழ் மரபில் தொன்றுதொட்டு வரும்
“கோன் எவ்வழியோ குடியும் அவ்வழியே”
என்னும் பழமொழி வாயிலாக மக்களின் வாழ்வியல் அறநெறிகள் அச்சமூகத்தை வழிவழியாக தொன்றுதொட்டு வழிநடத்தி வரும் அரசர்களின் வாழ்வியல் நெறிகளை அடியொட்டி வருவன என்பதை வலியுறுத்தி கூறப்படுகிறது.
முடிவுரை
இந்த ஆய்வு கட்டுரையின் முடிபாக சொல்ல விழைகின்ற கருத்து யாதெனின் செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்றத் தலைப்பில் தமிழின் தொன்மையையும் இலக்கண, இலக்கியச் செல்வங்களை மட்டுமே தலையாய ஒன்றாக கருதி மற்ற உலகச் செம்மொழிகளுடன் ஒப்பு நோக்கிக் கொண்டுள்ளோம். உலகச் செம்மொழிகளாக கருதப்படுகின்ற கிரேக்கம், இலத்தீன், அரேபியம், சீனம், ஹீப்ரு, பாரசீகம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் வரிசையில் தமிழின் தொன்மை ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க வேண்டும் என்றக் கருத்தை ஐந்திரம் வாயிலாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதற்கான தக்க இலக்கிய வரலாற்று சான்றுகள் நம்மிடையே இல்லாத காரணத்தால் தமிழ் பின்னுக்கு தள்ளப்பட்டு உலகச் செம்மொழிகள் வரிசையில் கடைக்கோடியில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மையை ஒப்புக்கொள்கின்ற பரந்த மனப்பான்மையுடன், இனியாவது உயர்தனி செம்மொழி கிரேக்க மொழியையே விஞ்சுமளவிற்கு நம்முடைய செயற்கரிய செயல்கள் வாயிலாக முன்னிருக்க செய்யும் செயல்களை உடனே தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை இக்கட்டுரை வாயிலாக என் சிற்றறிவிற்கு எட்டிய கருத்தை முன்வைக்க விழைகின்றேன்.
“இதற்கான திட்டப்பணி மற்றும் செயல்திட்டம் (PROJECT PLAN & ACTION PLAN) உருவாக்கப்பட்டுள்ளது என்றச் செய்தியை இங்கு பதிவு செய்ய விழைகின்றேன், இதில் ‘தமிழ்’ மற்றும் ‘பொதுமக்கள் நலனில்’ அக்கறை கொண்ட ‘சாதி’, ‘மத’, ‘இன’ பாகுபாடு பாரா நல்லுள்ளம் கொண்ட ‘புரவலர்கள்’ யாரேனும் முன் வந்தால் இதனை செய்து முடிப்பது 100 க்கு 100 உறுதி”.
கிரேக்க மொழி உலகச் சொம்மொழிகள் தர வரிசையில் முதல் இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் நெறிகள் அரசியல், பொருளாதார கோட்பாடுகள், தத்துவங்கள், நீதி மொழியுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் செம்மொழித் தமிழ் பன்மடங்கு பெரியதென கருதப்படுகிறது. தமிழ் மற்றும் ஏனைய உலகச் செம்மொழிகளைக் காட்டிலும் கிரேக்க மொழி உலகச் செம்மொழிகளின் வரிசையில் எப்படி முதல் இடம் பெற்றன?!?! இதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. கிரேக்க மொழியின் சிறப்பிற்கு மற்றைய பின்னணிகள் எவை என்பதை சற்று ஆழ்ந்து நோக்குங்கால், ஆல்பாதி ஆடைபாதி என்றப் பழமொழிக்கு ஏற்ப பண்டைய கிரேக்க கலைகளுக்கு அணிகலன்களாய் கிரேக்கத்திற்கே உரிய 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் மற்றும் சிற்பக் கலைக்கு கட்டியம் கூறும் வகையில் இன்றைய உலக அதிசயங்களில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பிரமிடுகள் (Pyramids) என்பதே அதனுடைய தனிச்சிறப்பாகும். “உலகமே அதிசயிக்கும் நெடிதுயர்ந்த பண்டையக் கட்டடக் கலைகளையும் சிற்பக்கலைகளையும் படைத்த இவர்களின் மொழியும் கண்டிப்பாக செம்மொழியாக இருக்குமென்பதில் என்ன ஐயம் என பாமரமக்களும் நினைத்தால் அது தவறாகாது அல்லவா?”. அதுமட்டும் அல்லாது இன்றைய உலகச் செம்மொழிகள் அனைத்திற்கும் அம்மொழிகளை சார்ந்த பாரம்பரியம் மிக்க உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கச் செய்யும் நெடிது உயர்ந்த பண்டையக் கட்டடக் கலைகள் மற்றும் சிற்பக் கலைகள் அச்செம்மொழிகளுக்கு “வலுவான பின்னணி” (SOUND BACKGROUND) ஆக உள்ளன. அதுமட்டுமல்ல அண்மைக் காலத்தில் இயேசு கிருத்துவிற்கு (CHRIST THE REDEEMER) பிரேசில் நாட்டில் 130 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்ட சிலை இன்- றைய உலக 7அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற்று அந்நாட்டின் பெருமையை உலகறிய செய்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது போன்று உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழியின் தனிச் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கிரேக்க கலைகளுக்கு இணையாக பண்டையக் கட்டடக்கலைகள் மற்றும் சிற்பக் கலைகள் தமிழ் நாட்டில் இல்லாமல் போனது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முடிபாகும்.
உலகமே வியக்கும் ‘கருத்துப் படைப்புகள்’ அதாவது ‘இலக்கியப் படைப்புகள்’ படைத்த நம்முன்னோர்கள் ‘காட்சிப் பொருள்களான’ பண்டையக் கட்டடக் கலைகள் மற்றும் சிற்பக் கலைகளை படைக்கத் தவறிவிட்டனர் என்றால் அது ஏதோ ‘குறைகூறல்’ என்றாகாது. 4500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் பிரமிடுகளை படைத்தார்கள் என்றால் அதுப்போன்று நம் முன்னோர்களால் இயலாமற்போனது ஏனோ?... பிரமிடுகளுக்கு இணையாக நாமும் எதோ ஒரு வகையில் உலகம் வியக்கும்படியான ‘கலைப்படைப்புகளை’ படைத்திருந்தால் அது ‘உலகத்தின் பார்வையை’ தமிழ் நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இயற்கையாகவே ஈர்த்திருக்குமல்லவா? இதில் நாம் கோட்டைவிட்டுவிட்டு இன்று தமிழின் சிறப்பை வாய்மொழியாகவும், நூல்கள் வாயிலாகவும் கூறிக்கொண்ருந்தால் பரபரப்பான இத்துரித உலகத்தில் இதனை யார் கண்டுகொள்வார்கள்? செவிமடுத்துக் கேட்பார்கள்? என்ற என்னுடைய கருத்தை கேள்வியாக இங்கே பதிவு செய்ய விழைகின்றேன். இதில் ஏதேனும் மாறுபட்ட கருத்திற்கு இடமுண்டோ?
இனிவரும் காலங்களிலாவது உயர்தனி செம்மொழித் தமிழின் சிறப்பை உலகிறியச் செய்வதற்கான மிகப்பெரிய அளவிலான முயற்சி அதாவது இன்றைய உலக அதிசயங்களை எல்லாம் ‘விஞ்சி’ நின்று உலக அதிசயங்களின் முதன்மையான அதிசயம் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளன என்ற காட்சிப்பொருளின் (Corporeal Objects) வாயிலாக உலகப் பார்வையை தமிழின்பால் ஈர்க்கச் செய்து உலக மக்கள் யாவரும் தமிழ்நாட்டை நோக்கி வரச்செய்யும் அளவிலான மிகப்பெரிய, உலக முதன்மையான அதிசயத்தின் வாயிலாக இதை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தும், இதில் தமிழின்பால் பற்று கொண்ட யாவரும் ஒன்றுபட்ட நோக்குடன் சாதி, மத, இன பாகுபாடு அற்ற நிலையில் அணுகி இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற ‘வேண்டுகோளை’ முன் வைத்தும், உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியங்களை உலகமொழிகளில் நாம் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும், வெளிநாட்டவர் முன்வந்து அதனை மொழிபெயர்த்தால் அது தமிழுக்கும் பெருமை, நமக்கும் பெருமை. நம்முடைய மிகப்பெரிய செயற்கரிய செயல்கள் வாயிலாக உலக மக்களின் பார்வை முழுவதும் தமிழின்பால் ஈர்க்கச் செய்து உலக மக்கள் அவர்களாகவே முன் வந்து செம்மொழி இலக்கியங்களை அவரவர்களின் தாய் மொழியில் அவர்களாகவே மொழி பெயர்த்து கொள்கின்ற அளவிற்கு நாம் செயல்படவேண்டுமே தவிர; தமிழை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் பணி நமதல்ல. எடுத்துக்காட்டாக, இன்று உலகையே ஆளுமை செய்து கொண்டுள்ள ஆங்கில மொழியில் இடம் பெற்றுள்ள ஆங்கில இலக்கியங்களை ஆங்கிலேயர்கள் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர்கள் செய்தது யாதெனில் தங்களின் செயற்கரிய செயல்கள் வாயிலாக உலகையே தங்களுடைய ஆளுமையின் கீழ் கொணர்ந்து, தங்கள் இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்து அந்தந்த நாட்டினர் அவரவர் தாய் மொழியில் ஆங்கில இலக்கியங்களை மொழி பெயர்ப்பு செய்து கொள்ளும்படியாக செய்தனர் என்றால் அது மிகையாகாது.
வாழ்வியல் என்றால் என்னஃ வரையறுத்திரந்தால் சிறப்பாக அமையும்
பதிலளிநீக்குபி.இரத்தினசபாபதி
மிக்க நன்று.
பதிலளிநீக்கு