போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?
முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட Animated GIF என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உடனே இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு குறிப்பிட்டதுபோல் Desktop செலெக்ட் செய்து நீங்கள் அனிமேசன் செய்யப்போகும் போட்டோக்கள் உள்ள போல்டரை (நம்பர் 1) செலெக்ட் செய்துகொள்ளுங்கள். உடனே உங்கள் போல்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கீழே நம்பர் 2 குறிப்பிட்டதுபோல் வந்துவிடும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் உங்கள் மவுஸ் மூலம் செலெக்ட் செய்துகொண்டு நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் தூக்கி போடுங்கள்.
நீங்கள் மவுஸ் மூலம் தூக்கிப்போட்டவுடன் கீழே காண்பதுபோல் நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் போட்டோக்கள் அனைத்தும் வந்துவிடும். பிறகு நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் அனிமேசன் எந்த வடிவத்தில் உருவாக வேண்டும் என்பதை காட்டும். நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் சேர்த்துள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மாறும் அனிமேசன் வேகத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த போட்டோக்கள் அனைத்தும் 10 செகெண்டுக்கு ஒரு முறை மாறும் வகையில் டைம் செட்டப் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் போட்டோக்கள் அனிமேசனில் மாறும் வேகத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேண்டும் என்றால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் 10 செகெண்டுக்கு பதிலாக 5 அல்லது 15 அல்லது 20 செகெண்ட் என எத்தனை செகெண்ட் தேவையோ அதனை டைப் செய்து நம்பர் 3 ஐ கிளிக் செய்து OK செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் இணைத்த போட்டோக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சிறிய அளவில் அனிமேசன் சிலேடு உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.
பிறகு இங்கு குறிப்பிட நம்பர் 1 என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவை Width X Height டைப் செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளுங்கள்.
உங்கள் அனிமேசன் சிலேடுக்கு வேறு விதமான அனிமேசன் வடிவங்கள் தேவைப்பட்டால் இங்கு கீழே குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து வேறு விதமான அனிமேசன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.
இறுதியாக இங்கு கீழே காணும் நம்பர் 1 என்ற இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 என்ற இடத்தில் உங்கள் அனிமேசன் சிலேடுக்கு பெயர் கொடுத்து நம்பர் 3 என்ற இடத்தை கிளிக் செய்து உங்கள் அனிமேசன் சிலேடை சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் போட்டோஸ்கேப் மூலம் உருவாக்கிய ஒரு அனிமேசன் தயாராகிவிட்டது.
இந்த முறையில் நான் உருவாக்கிய அனிமேசனை கீழ் காணும் லிங்கில் பார்க்கலாம்..
இரண்டு போட்டோக்கள் மட்டுமே பயன்படுத்தி உருவாக்கிய அனிமேசன்கள் இவை
http://tamilpctraining.blogspot.com/2011/01/50.html
ost a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : கான்
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : கான்
கருத்துகள்
கருத்துரையிடுக