முப்புரம் எரித்த வரலாறு

வரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.comமுப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர். உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். “தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி. தத்துவம் - திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான் என்று பொருள். திருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி - “அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரோ” - திருமந்திரம். “ஐயன் நல்லதிசயன் அயன் விண்ணோர் தொழும் மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான் பையரவு அல்குளாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!” - சம்பந்தப் பெருமான்.

கருத்துகள்

  1. இந்த வரலாறு எந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளது. (சிவபுராணத்தில் தேடி கிடைக்கவில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடமொழி மகாபாரத்தின் அநுஷாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் இறைவன் திரிபுரம் எரித்த புராணம் விளக்கப் பட்டிருக்கிறது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சிவன் இருக்கும் எல்லையில் தேடுங்கள் கிடைக்கும்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

ஆண்டாளின் பக்திநிலை