ரிக் வேதம்
வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் கொண்டு வரப்பட்டது இந்த வேதத்தின் மூலமாகத்தான் அதாவது உலகின் முதல் நூல் ரிக் வேதம் தான்.
நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும். இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது அதாவது நான்கு வேதங்களில் முக்கால் பங்கு பாடல்கள் ரிக் வேதத்திற்கு சொந்தமாகும். இந்த வேதம் பத்து மண்டலங்களாக அதாவது பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்தகமும் தனிதனியான விஷயங்களை எடுத்து சிறப்பாக பேசுகிறது. ரிக் வேதம் தனிமனிதனாலோ குழுக்களாகலோ உருவாக்கப்பட்டது அல்ல. சிந்து நதி தொடங்கி கங்கை நதி வரையிலும் பரவி கிடந்த பல ஞான புருஷர்களால் கண்டறியப்பட்டு பல தலை முறைகளால் உருவாக்கப்பட்டதே ஆகும். ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும், நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும், ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும், எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது.
நான் தமிழில் ரிக் வேததை படிக்க கிடைக்குமா ?
பதிலளிநீக்கு