பெண்ணியம்
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2
’’மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய
குறிக்கோள்’’
பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை , பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள்.
அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.
பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது.
‘’ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது ; வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது.
ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும் , அதை நிறைவேற்றலும் அரிது’’
என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார்
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள் - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.
தொடக்க நிலையில் ‘பெண்ணுரிமை ‘ என்றும் , ‘பெண் விடுதலை’ என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண் நிலை வாதம்’ என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ’இதுதான் அது’ என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.
‘’அனைத்துப் பெண்களுக்கும் எக் காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது’’
என்கிறார் மொலீனா தேன்மொழி.
‘’இதன் விளக்கம் ..ஒரு சமுதாயத்தின் வரலாறு , பண்பாடு , இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் ‘’
என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச் சிதம்பரம்
இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும் , அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ , ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை.
சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும் , பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.
‘ இப்பவும் கூட
உந்தன் துணை இல்லாமல்
எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
உத்தேசமில்லை !..........
அதற்கு முன்
என் கரங்களின் மீது
உன் கால்கள் இருந்தால்-
கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்’’
என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ் விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் கவிஞர் சுபத்ரா.
.(பின் குறிப்பு;
இன்றைய நவீன, பின் நவீனப் பெண்ணிய எழுத்துக்கள் வரை பதிவுகள் தொடர்ந்து வெவ்வேறு போக்குகளை முன்வைக்கும்.எனவே அவசரம் கொள்ள வேண்டாம்) (

|
மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்
அனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..
பொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும் இன்னும் தொடர்ந்து ஏற்பட்டாக வேண்டிய சமூக மனநிலை மாற்றங்கள் பற்றிய சில கருத்துக்கள்..இந்நாளின் பகிர்வுக்கு!
(இவற்றை எதிர்மறைச் சிந்தனைகள் என்று கொள்ளாமல்,.
அடுத்தடுத்த வளர்ச்சி நோக்கிய படிநிலைகள் குறித்த கரிசனமான முன் வைப்புக்கள் என்றே கருதிக்கட்டுரையை அணுக வேண்டுமெனக் கோருகிறேன்)
இந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும்,.சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.
பொதுவான மக்கள் வழக்கில் ’அந்தஸ்து’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு ,
கீழ்க்காணும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு
( human status )
2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு(material status )
இவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.
இன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்தபோதும் , அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.
பழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும்,குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
கல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.
வெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக..மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்ந்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன.
பெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்
‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’
என்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார்.இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி ,உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில்
கொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும்,பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது.
இந்தியஆட்சிப்பணி(IAS)போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில்
அமர்ந்திருக்கும்பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக்
கீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி,காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு.பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில்முறைப்படுத்தப்படாத பணிகளில்..கட்டிடக்கூலிகளாகவும்,விவசாயக்கூலிகளாகவும்,வீட்டுப் பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்ற பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை; அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும்,அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான ) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.
இந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில் ( IFS )இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில்
‘’திருமணமான ஆணுக்குள்ள உரிமை ,திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது ‘’ என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
கலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும்,மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள் , பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன.குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது;அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.
‘’ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது’’
என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.
இலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் ‘பெண் எழுத்தாளர்’ எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்படுவதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.
இலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது.அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை,பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.
சமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் ‘சிவப்பு’ என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.
தந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.
ஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.
பெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு , நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.
ஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும்,அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.
‘’ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது’’
என்றார் பெரியார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும்,வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,
பால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும்,
பாலின சமத்துவம் மறுக்கப்படுவதையும்
விழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.
அந்த நாளின் விடியலிலேயே மகளிர் தினம் என்பது பூரணத்துவம் பெற்றுப் பொலியவும் கூடும்.
பார்வைக்கு;இத் தளத்திலுள்ள பெண்ணியக் கட்டுரைகள் சில..
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2
’’மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய
குறிக்கோள்’’
பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை , பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள்.
அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.
பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது.
‘’ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது ; வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது.
ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும் , அதை நிறைவேற்றலும் அரிது’’
என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார்
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள் - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.
தொடக்க நிலையில் ‘பெண்ணுரிமை ‘ என்றும் , ‘பெண் விடுதலை’ என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண் நிலை வாதம்’ என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ’இதுதான் அது’ என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.
‘’அனைத்துப் பெண்களுக்கும் எக் காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது’’
என்கிறார் மொலீனா தேன்மொழி.
‘’இதன் விளக்கம் ..ஒரு சமுதாயத்தின் வரலாறு , பண்பாடு , இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் ‘’
என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச் சிதம்பரம்
இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும் , அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ , ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை.
சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும் , பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.
‘ இப்பவும் கூட
உந்தன் துணை இல்லாமல்
எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
உத்தேசமில்லை !..........
அதற்கு முன்
என் கரங்களின் மீது
உன் கால்கள் இருந்தால்-
கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்’’
என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ் விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் கவிஞர் சுபத்ரா.
குறிக்கோள்’’
பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை , பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள்.
அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.
பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது.
‘’ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது ; வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது.
ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும் , அதை நிறைவேற்றலும் அரிது’’
என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார்
பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள் - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.
தொடக்க நிலையில் ‘பெண்ணுரிமை ‘ என்றும் , ‘பெண் விடுதலை’ என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண் நிலை வாதம்’ என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ’இதுதான் அது’ என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.
‘’அனைத்துப் பெண்களுக்கும் எக் காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது’’
என்கிறார் மொலீனா தேன்மொழி.
‘’இதன் விளக்கம் ..ஒரு சமுதாயத்தின் வரலாறு , பண்பாடு , இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் ‘’
என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச் சிதம்பரம்
இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும் , அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ , ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை.
சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும் , பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.
‘ இப்பவும் கூட
உந்தன் துணை இல்லாமல்
எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
உத்தேசமில்லை !..........
அதற்கு முன்
என் கரங்களின் மீது
உன் கால்கள் இருந்தால்-
கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்’’
என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ் விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் கவிஞர் சுபத்ரா.
பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3
’’சமூகத்திலும், வேலைத் தளத்திலும்,குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்கு முறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்ணின் உணர்வு நிலைகளும்,இந்நிலையை மாற்ற ஆண்களும் ,பெண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்நிலை வாதம்’’
(தென்னாசியப் பெண்கள் பயிலரங்கில் முன்மொழியப்பட்ட கருத்து)
காலந்தோறும் , சூழல்தோறும் பல்வேறு பரிமாணங்கள் பெற்றபடி விரிவும் அழுத்தமும் கூடியதாய் வளர்ந்து வருவது பெண்ணியம் என்னும் இக் கருத்தாக்கம் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் தளங்களுக்கும் பொருத்தமான - ஏற்புடையதான ஒரு விளக்கத்தைச் சற்று விரிவாகவே அமைத்துக் கொள்ளலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு , தந்தைவழிப்பட்டதாய் மாற்றமுற்றபின்குடும்பம்,பொருளாதாரம்,அரசியல்,மதம் என முதன்மையான சமூக நிறுவனங்கள் (social institutions)அனைத்தையும் ஆண்களே கையகப்படுத்திக் கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவும் தொடங்கினர்.

ஆண்களின் கண்ணோட்டத்தில்...அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் படிப்படியாக வேரூன்றத் தொடங்கிய ஆண் முதன்மை பெற்ற சமூக அமைப்பு , பெண்ணைத் தனிமைப் படுத்தி வீடே அவளது உலகம் என அவளது எல்லைகளைக் குறுக்கியது; அவளுக்கென்று குறிப்பாகச் சில பங்குநிலைகளை,கடமைகளை- மீறக் கூடாத மரபுக் கோடுகளாக வரையறுத்தது.
இதே அடித்தளத்தில் எழுப்பப்பட்ட மதம், சாத்திர சம்பிரதாயங்கள் என்ற பூச்சுக்களுடன் பண்பாட்டு ரீதியான பெண் ஒடுக்குமுறைகளுக்குத் தன் அங்கீகாரத்தை அளித்து ஆசீர்வதித்தது
.
‘வீடு’ , ‘வெளி’ஆகிய இரண்டு களங்களிலும் பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்பட்டுத் தன் மதிப்பையும்,சமத்துவத்தையும் இழந்தனர்.
பால் அடையாளமாக மட்டுமே உணரப்பட்டதால் வாரிசை ஈன்று தரும் தாய் என்பதற்காக ஆணின் மதிப்பைப் பெற்றனர்; ஆனால் அதே வேளையில் (- ஒரு முரண் நகை போல -irony )அந்தக் காரணத்திற்காகவே அவனால் பாலியல் சீண்டல்களுக்கும் , வன்முறைகளுக்கும் இலக்காகி - அவனது உடைமைப் பொருளாகவும் , அவனால் துய்க்கப்பெறும் போகப் பொருளாகவும் தரம் தாழ்ந்தனர்.
உடற்கூற்று அடிப்படையிலான இயற்கையான வேறுபாடுகள(biological discriminations ),சூழலடிப்படையில் திணிக்கப்படும் பாலின வேறுபாடுகள்(gender discriminations) என்ற இரண்டையும் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்குச் சமூகம் செய்து வைத்திருக்கும் மூளைச் சலவையால் குழப்பமுற்றுத் தாழ்வு மனப்பான்மையில் அழுந்திப் போயினர்.
தாங்கள் மென்மையானவர்களென்றும் ,
பாதுகாப்புக்கு உட்பட வேண்டியவர்களென்றும் ,
சார்புநிலைக்கு மட்டுமே உரியவர்களென்றும் முத்திரை குத்தப்பட்டு விட்டதால் தங்கள் வாழ்வும் ,தங்கள் உடலும். தங்கள் வாழ்க்கை முடிவுகளும் தங்கள் கைகளில் இல்லாமல் பிறரால் இயக்கப்படும் சூத்திரப் பாவைகளாயினர்.
தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் உரிய வடிகால்கள் இன்றித் தாங்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதையே ஒரு காலகட்டத்தில் மறந்து போயினர்.
மேற்குறித்த நிலைகளிலிருந்து பெண்ணுக்கு மீட்சி விளைய வேண்டுமென்பதும் பால்பேதமற்ற - மனித சமத்துவம் மலினப்படாத சமூகம் அப்போதுதான் உருவாக முடியுமென்பதுமே பெண்ணியத்தின் அடிப்படை இலக்குகள்.
காலங்காலமாய் ஏற்கப்பட்டும் நிலைத்தும் போய்விட்ட பெண் ஒடுக்கு முறைகளை அவற்றின் பின்புலத்தோடு இனம் காண்பதோடு மட்டுமே பெண்ணியத்தின் நோக்கம் நிறைவு கண்டு விடுவதில்லை.
பெண் இழந்திருக்கும் உரிமைகளைச் சமூகப் பின்னணியோடு இனங்காட்டல்-
அவற்றை மீட்டெடுத்துச் சமத்துவம் காணப் போராடல்
ஆகிய இரண்டுமே பெண்ணியத்தின் மிக அடிப்படையான - முதன்மையான இரு தத்துவங்கள் எனலாம்.
தனிமனித அடிப்படை உரிமைகள் கூடப் பெண்ணுக்கு மறுக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் பெண்ணியக் கோட்பாடு ஆணின் நுகர் பொருளாகப் பெண்ணைக் கருதும் மனப்பான்மை மாற வேண்டுமென்பதை வலியுறுத்தும்.
தனக்கென ஒரு தனிமதிப்புக் கொண்டவளாகவும் , சார்பு நிலையிலிருந்து விட்டு விடுதலையான தனித்ததொரு மனித ஜீவியாகவும் அவள் மதிக்கப்பட வேண்டுமென்பதை அழுத்தமாக முன்வைக்கும்.

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4
பெண்ணுரிமை இயக்க வரலாறு...சுருக்கமும்,விரைவுமான பார்வையில்..
பெண்ணுரிமை என்பது ஓர் இயக்கமாகவும்,கோட்பாடாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது.இக் காலகட்டத்தில் வாழ்ந்த காண்டார்செட்(Condorcet )என்னும் தத்துவ அறிஞர் , இக் கோட்பாட்டுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருப்பதைஅறியமுடிகிறது.
18,19 ஆம் நூற்றாண்டுகளில் ,
உலக அரங்கில் நிகழ்ந்த தொழிற்புரட்சி,பெண்ணுரிமைக்குச் சாதகமானதொரு சூழலைத் தோற்றுவித்தது.தொழிற்களங்களில் ஆண்களோடு இணைந்து பணியாற்றுகையில்,அவர்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் தேவை என்ற புரிதல் இயல்பாகவே ஏற்படத் தொடங்கியது.

பிரெஞ்சுப் புரட்சி 1789 ஆம் ஆண்டில் நிகழ்ந்தபிரெஞ்சுப் புரட்சியின்போது,சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் ஆகிய மனித உரிமைக்குரல்களோடு பெண்மைச்சமத்துவத்துக்கான கோரிக்கைகளும் ஒருங்கிணைந்து எழுச்சி பெற்றன. |
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேரி வுல்ஸ்டோன் க்ராஃப்ட் , பெண்ணுரிமையை அழுத்தமாகப் பறைசாற்றும் பிரகடனம் ஒன்றை(A VINDICATION OF THE RIGHTS OF WOMEN)1792 இல் வெளியிட்டார்.
இதே காலகட்டத்தில் ஸ்வீடன்,நார்வே,அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சிறு சிறு அளவில்பெண்ணுரிமை அமைப்புக்கள் உருப்பெற்றன.
1848 ஆம் ஆண்டில் நூறு அமெரிக்கப்பெண்கள் , செனகா ஃபால்ஸ் என்னும் இடத்தில் ஒன்றுகூடி நிகழ்த்திய மாநாடு,உலகப் பெண்ணுரிமை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தஒன்றாக அமைந்தது.

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 5
உலக அரங்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த பெண்ணியக் கருத்துக்களின் தாக்கங்களை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிலும் காண முடிந்தாலும்,இங்கு நிகழ்ந்த சமூக மாற்றங்கள் முழுவதுமே அயலகப் பாதிப்பினால் நேர்ந்தவை என்று கூறி விட முடியாது.உரிமை எழுச்சிக்கான தூண்டுதலை
மேலை நாட்டிலிருந்து பெற்றபோதும்,இங்குநிலவியஅரசியல்,சமூக,பண்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்பவும்,அவற்றால் பாதிக்கப்பட்டபெண்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டும் அந்த அடிப்படையிலேயே இவ்வியக்கம் இந்தியாவில் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது.
கீழை நாடுகளைப் பொறுத்தவரை பெண்ணுரிமைப் பிரச்சினைகளில் ஆண் சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்ததற்கும் காரணம்- ,கல்வி முதலியவற்றைப் பெறாது வீட்டுக் கைதியாகமட்டுமே பெண் இருந்த சூழல்தான் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டு விடமுடியும்.
சமய,சமூக.அரசியல் சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டிய ராஜாராம் மோகன்ராய்,ஈசுவர சந்திர வித்தியாசாகர்,மகரிஷி கார்வே,காந்தியடிகள் ஆகியோர் பெண் மறுமலர்ச்சியையும் இந்தியாவில் முன்னெடுத்துச் சென்றனர்.

தேசிய இயக்கத்தில் மிதவாதியாக விளங்கிய எம்.ஜி.ரானடே 1887ஆம் ஆண்டில் தோற்றுவித்த தேசிய சமூக மாநாடு(The National Social Conference) என்னும் அமைப்பு, மகளிர் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை விவாதிக்க ஓர் அரங்கினை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தியப் பெண்ணுரிமை இயக்கத்தின் உருவாக்கத்தில் ஐரிஷ்நாட்டுப் பெண்களான மார்க்கிரெட் கஸின்ஸ் ,அன்னி பெஸண்ட் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.
1917ஆம் ஆண்டில் இவர்களது முயற்சியால் உருப்பெற்ற இந்தியப் பெண்கள் கழகமும்(Women's Indian Association ),அனைத்திந்தியப் பெண்கள் மாநாடும்( All India Women's Conference )இளமை மண எதிர்ப்பு,சார்தா சட்ட உருவாக்கம்,சொத்துரிமை பேணல்,திருமணச் சட்டங்கள் முதலிய பல முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டின.
இந்தியப் பெண்கள் கழகத்தின் தலைவரான அன்னிபெஸண்ட் ,சென்னையைத் தன் தலைமை இடமாகக் கொண்டிருந்ததால் அக் கழகத்தின் செயல்பாடுகள் பலவும் சென்னையை மையமிட்டதாகவே அமைந்திருந்தன.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதிலும்,சட்ட மன்ற,பாராளுமன்ற உரிமைகள் வழங்குவதிலும் அப்போது சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகமே முன்னின்றது.
தேவதாசி முறை ஒழிப்பிற்குப் பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டியும்,விதவைப் பெண்களின் மறு வாழ்வுக்காக உழைத்த சகோதரி சுப்புலட்சுமியும் தமிழ்நாட்டிலேயே தங்கள் பணிகளை ஆற்றினர்.
தமிழின் இலக்கியப் படைப்பாளிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் விளங்கிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை,மாதவையா,பாரதி,பாரதிதாசன்,
திரு .வி .க,பெரியார்,ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகிய பலரும் பெண்விடுதலைக்கான பொறிகளை மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருந்தனர்.
இந்தியப் பெண்களின் நிலை எழுச்சியடைய இவ்வாறு பல்வேறு தரப்பினரும் பல்வேறு முனைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்தபோதும்,அந்த முயற்சிகள் அனைத்தும் அவளது அடிப்படை உரிமைகள் சிலவற்றை மீட்கவும்,ஓரளவு சமத்துவத்தைப் பெற்றுத் தரவும் மட்டுமே உதவியிருக்கின்றன.
மரபுவழிப்பட்ட இந்திய சமூகத்தில் பெண்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு இன்னும் கூட நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
வழி வழி வந்த பண்பாட்டு வேர்களிலிருந்தும் துண்டித்துக் கொள்ள முடியாமல் - அதே வேளையில் தன் தனித் தன்மையையும் காத்துக் கொள்ள இன்று வரை இந்தியப் பெண் பெரியதொரு போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள் என்பதே யதார்த்த நிஜம்.
’’அநாதைக்குத்தான் தெரியும்
அன்பின் தேவை
வறிஞனுக்குத்தான் இருக்கும்
செல்வத்தில் மோகம்
அடிமைக்குத்தான் இருக்கும்
சுதந்திரதாகம்
பெண்ணுக்குத்தான் புரியும்
விடுதலையின் அருமை’’ - திலகவதி
(அடுத்த பதிவில் மேலும்...)

(அடுத்த பதிவில் மே

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)
பெண்மொழியை உடல் மொழியாக்கும் கலகக் குரல்;
பெண்மொழி என்பது பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையது என்பதும்,’பெண் உடல்,பெண்ணின் பாலியல் உறவு,தாய்மை இவைகளை வெளிப்படுத்தும் மொழியே பெண்மொழி’என்பதுமே சமகாலப் பின் நவீனச் சிந்தனைப்போக்காக உள்ளது.
‘’ஒரு பெண் எழுத்தாளர்,தன் பேனாவில் வெள்ளை மை(தாய்ப்பால்)அடைத்துக் கொண்டு எழுத வேண்டும்.....எந்த விதமான தணிக்கை உணர்விற்கும் செவி சாய்க்காமல் தன் உடம்பின் அதிர்வுகளுக்கு உண்மையானவர்களாக இருந்து பெண்படைப்பாளிகள் செயல்பட வேண்டும்’’
என மேலைப் பெண்ணியத் திறனாய்வாளர்கள் குறிப்பிடும் போக்குகள் தமிழ்க் கவிதை வெளியிலும் பரவலாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
உடற்கூற்று அடிப்படையில் பெண்படும் அவதிகளையும்,அதை ஒட்டி அவளுக்குள் விளையும் உளவியல் தாக்கங்களையும் தயக்கமின்றி வெளிப்படையாகக் கூறப் பெண்கவிஞர்கள் முன் வந்திருப்பது இன்றைய சூழலின் மாறுதலான போக்காக அமைந்திருக்கிறது.
பெண்ணின் இயல்பான உடற்கூற்று மாற்றத்தைச் சமூக நபர்கள் அணுகும் வேறுபட்ட நோக்கு நிலைகளை,
‘’சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா’என
அம்மாவின் பதற்றம்
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்
மாமியாரின் ஆதங்கமோ
இன்னும் வருதா என
..................
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்’’
என்று ‘பூத்தல்’என்னும் தலைப்பிட்ட தன் கவிதையில் விவரிக்கும் உமாமஹேஸ்வரி,
‘’வா வலியே
வந்தென்னை ஆட்கொண்டு
அணைத்துப் பகிர்ந்து அம்மா என்றாக்கு’’
எனப் பிள்ளைப் பேற்றில் பெண் படும் துன்பங்களையும் நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்த தாய்,அலுவல் களத்தில் படும் உடல் ரீதியான துன்பம்
‘’ஆடைக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
கோப்புகளில் இறங்கும்
தாயின் வாசம்
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில்
பீச்சி விடப்படும்
பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்றலறும்
குழந்தையின் அழுகுரல்’’
என்று வெண்ணிலாவின் கவிதையில் வெளிப்பாடு கொள்கிறது.
அதிகாரத்தின் குறியீடாகிய ஆணுடலின் மீது கொள்ளும் அச்சம்,அதன் மீதான சலிப்பு,விரும்பாத தாம்பத்திய உறவில் நாட்டமற்ற போக்குஆகியவைகளும் நவீன பெண் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.
நள்ளிரவில் தன்னை விட்டு ஆணுடல் நீங்குகையில் அதனை இறப்புக்கு ஒப்பான அமைதியாகச் சித்தரிக்கிறது பெருந்தேவியின் கவிதை.கணவன் தன்னை விட்டு நீங்கிய பிறகும் அச்சமூட்டும் புலி ஒன்று தன் இரையைப் பார்த்துக் கொண்டிருந்ததான உணர்வு ஏற்படுவதாக,இதே கருத்தைத் தனது ‘இரண்டாம் ஜாமத்துக்கதை’என்ற கவிதையில் விவரிக்கும் சல்மா,
‘’பெரும்பாலும்
தனக்குள்ளாகவே வசிக்க
நேரும் நானும் என் மொழியும்
சற்று
கடுமையாகவே வெளிப்படக்கூடும்
என்றைக்கேனும்’’
என்று பிறிதொரு கவிதையில் எச்சரிக்கை விடுக்கிறார்.
தன் வாழ்வும் தன் உடலும் தனக்கே உரியவை..அவற்றின் மீதான ஆதிக்கமும்,அவை சார்ந்த முடிவுகளும் பிறர் வசம் இல்லை என்ற அளவில் மதிப்பிடுகையில்,சமகாலப் பெண் மொழியின் போக்கு வரவேற்கத்தக்கதே.
எனினும் படைப்பின் தேவைக்கும்,சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் தேவையற்ற பாலியல் வெளிப்பாடுகள் பெண் எழுத்துக்களில் மிகுதியாகக் கையாளப்படுகையில் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான நோக்கம் நீர்த்துப் போவதுடன் கவிதைகளில் இடம் பெறும் பிற செய்திகள் மட்டுமே மலிவான இரசனையுடன் - கொச்சையாக உள்வாங்கிக் கொள்ளப்படக் கூடிய அபாயம் இருந்து கொண்டே இருக்கிறது;
இது ஒரு கலகக் குரல் என்று சொல்லப்பட்டாலும் கூட,இந்தக்குரல் , சமூக மாற்றத்துக்குப் பயன்படாத வெற்று ஓசையாக-பெண்ணியத்தின் முதன்மையான நோக்கத்தையே திசை திருப்பி விடுவதாகத்தான் கட்டமைந்து கொண்டிருக்கிறது.

‘’பெண் பாலுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டும் பெண்மொழி உருவாகி விடாது’’-இது பெண்மொழி சார்ந்தே எழுதியும் பேசியும் வரும் மாலதி மைத்ரி என்னும் கவிஞரின் கூற்று.
வெறும் உடல் மொழியாகக் கட்டமைப்பதனால் மட்டுமே பெண்மொழி உருவாகி விடாது
பெண்ணிய எழுத்தில் பாலியல் கூறுகள் எதற்காகப் பதிவாகின்றன என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல்,அவை ஏதோ ஒரு வகையில் தமக்குக் கிளுகிளுப்பூட்டுவதாக இருப்பதாலேயே அதற்கு முந்திக் கொண்டு முதன்மை தரச் சிலர் முற்படுகிறார்கள் என்பதை இன்றைய பெண்படைப்பாளிகள் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
(இதை இன்னும் சற்று வெளிப்படையாகவே கூறுவதானால்...இத்தனை நாளும் தான் வருணித்துக் கொண்டிருந்த பெண்ணுடலை இப்போது அவளே வருணிக்கத் தொடங்கியிருப்பது ஆணுக்கு ஒரு வகையான புதுமையை அளித்திருக்கிறது;சமூகச் சிக்கல்கள் சார்ந்த பெண் எழுத்துக்களை வெற்றுப் புலம்பல்கள் என ஒதுக்கித் தள்ளிய ஆண் அறிவு ஜீவிகள் உடல் சார் பெண்மொழி எழுத்துக்களை உயர்த்திப் பிடிப்பதன் சூட்சுமம்,சூழ்ச்சி இதன் அடிப்படையிலேதான்.) இதைச் சற்றுக் கருத்தில் கொண்டு - அதிர்ச்சி மதிப்பிற்காகவும்,வெற்று பிரமிப்பை விளைவிப்பதற்காகவும் மட்டுமே கையாளப்படும் பாலியல் படிமங்களைப் பெண் படைப்பாளிகள் த்ங்கள் எழுத்துக்களில் தவிர்க்க முயல்வதே பெண்ணியம் பற்றிய சரியான புரிதலையும்,சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த உதவி செய்வதாக இருக்க முடியும்;அதைச் செய்யத் தவறும்போதுதான் பெண்ணியம் என்ற பதமே பிறழ விளங்கிக் கொள்ளப்பட்டுக் கேவலமான விமரிசனங்களுக்கு உள்ளாகும் நிலை நேரிட்டு விடுகிறது.
அடிப்படை உரிமைகள் கூட மீட்கப்படாத நிலையில் அன்றாடம் தனித்தும்,குழுவாகவும்(gang rape) பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்கள் பற்றியும்,குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்கள் பற்றியுமான தகவல்கள் அன்றாடச் செய்தித் தாள்களின் பக்கங்களை மிகுதியாக நிரப்பிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,அந்தச்சமூகப் பார்வையிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு,உடல் மொழியைப் பிரதானப்படுத்தி அகச் சிக்கல்களுக்கு அதிக இடம் அளிக்கும் பெண் எழுத்துக்கள் எனக்குப் புளிச்சேப்பமாகவே படுகின்றன.
சக பெண்ணியர்கள் பிற்போக்குவாதம் பேசுவதாக என்னைச்’சாதிப்பிரஷ்ட’மே செய்தாலும் கூட நினைவு தெரிந்த நாள் முதல் பெண்ணுக்காக மட்டுமே அதிகம்பேசியும்,எழுதியும் வரும் என் உறுதியான நிலைப்பாடு இதுவே.
எந்தக் கருத்துருவாக்கமும் அடிமட்டம் வரை ஊடுருவிச் சென்று உதவவில்லையென்றால்,அது வெறும் போலியான வெளிப்பகட்டு மட்டுமே.
ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரி மனோபாவத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து-
......
பெண்ணியம் என்ற சொல்லைப் பகடி செய்து ஏளனம் புரிவதை ஆணும்,
ஆணைப் பகைவனாகமட்டுமே கருதும் எண்ணத்தைப் பெண்ணும் கைவிட்டு,
......
தன்னைத் தாழ்வாகக் கருதும்போக்கிலிருந்து பெண்ணே வெளிவந்து..
......
பெண்ணியம் என்பதன் சமூகத் தேவையை உணர்ந்து.
தனிமனித,சமூக மனப்போக்கிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு,
நிறுவனமாக்கப்பட்டு நிலைத்தும்போன சமூக அமைப்புக்களுக்கெதிரான குரலை ஒருமித்து முன் வைத்து-
அவற்றுக்கான சட்டப்பாதுகாப்புக்களிலும் முனைந்து..
அவை வெறும் காகிதச் சட்டங்களாகிவிடாமல் முறையே பயன் கொண்டு.
சமத்துவம் குன்றாத மானுடச் சமூகம் மலர வேண்டுமென்ற நோக்கில் செயல்படுவது மட்டுமே..
என்றென்றைக்கும் பயனளிக்கும்பெண்ணியக் கோட்பாடாக இருக்கமுடியும் என்பதும்,பிற அனைத்தும் ஆடிக் காற்றில் அடித்துச் செலப்படும் துரும்புகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதும்...
களத்தில் இறங்கியும்,எழுத்தில் முனைந்தும் செயலாற்றியிருக்கும் என் அனுபவத்தில் தெளிந்த திடமான முடிவு.

வாராத மாமணியாய் வந்து வாய்த்த பெண்விடுதலையைப் பிறர் பழிக்கப் பெண்களே இடமளித்து விடக் கூடாது .
பெண் பற்றிய சமூக நிலைப்பாடுகளுக்கும்,காலம் காலமாக ஊறிப்போயிருக்கும் கருத்து நிலைகளுக்கும் எதிரானதாகப் பெண்மொழி உருவெடுக்க வேண்டும்;
அப்போது மட்டும்தான் இந்தப் படத்திலுள்ள குழந்தையைப்போல் மானுடம் பற்றி...மானுடச் சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பவர்களாகப் பெண்கள் உருவாகி வர முடியும்.
இதுவே பெண்ணிய நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு...
என் மதிப்பீடுகளை ,நிலைப்பாட்டை இத் தொடரின் இறுதிப் பகுதியாகிய இப் பதிவில் அழுத்தமாகவே வெளியிட்டிருக்கிறேன்.
இது சார்ந்த தொடர்ந்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன......
பெண்ணிய வகைகள்;
பெண்ணியக் கோட்பாட்டின் காலப்போக்கிலான வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு
மிதவாதம்,
சமத்துவம்/மார்க்ஸியம்,
தீவிரம்
ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக (இன்னும் சில உட்பிரிவுகளாகவும் கூட)
பெண்ணியத் திறனாய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
இப் பாகுபாடுகள் அனைத்துமே பெண் எழுச்சியையும்,மறுமலர்ச்சியையும் இலக்காய்க் கொண்டவை என்றபோதும் அவற்றின் அணுகுமுறைகளில் சில மாறுபாடுகள் உண்டு.
மிதவாதப்பெண்ணியம்..
உலக அளவிலும்,இந்தியச் சூழலிலும் பெண்ணியச் சிந்தனை முகம் கொண்ட
தொடக்க காலகட்டத்தில் அது மிதவாதப் போக்குடையதாகவே இருந்தது.
சமூகத்தில் காலங்காலமாக நிலைத்துப்போன மரபுவழி நிறுவனங்களையும்,மதிப்பீடுகளையும் பெரிய மாறுதல்களுக்கு உட்படுத்தாமல் - அதே வேளையில் பெண்ணின் நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டது மிதவாதப்பெண்ணியம்.
பெண்ணைப் பிணித்திருந்த மூடத் தளைகளிலிருந்து அவளுக்கு விடுதலை தருவதையும்,அவள் இழந்திருந்த அடிப்படை உரிமைகளை அவளுக்கு மீட்டுத் தருவதையும் அது பெரிதும் வலியுறுத்தியது.
இளமை மணம்,பொருந்தாமணம்,கைம்மைக் கொடுமை,கல்வி மறுப்பு ஆகிய சிக்கல்களிலிருந்து பெண்ணுக்கு விடுபாடு வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டிய அளவுக்கு ஒட்டு மொத்த சமூக அமைப்பிலேயே மாற்றம் வேண்டுமென்பதற்கு மிதவாதப்பெண்ணியம் போதிய அழுத்தம் தரவில்லை.நிறுவனங்களாகி நிலைத்துப்போன கருத்து நிலைகளுக்கு ஆதரவாகவும்,மரபின் அடிப்படையிலான பழைய மதிப்பீடுகளை முன் மொழிவதாகவுமே மிதவாதப் பெண்ணியம் அமைந்தாலும்,பெண் சார்ந்த சிக்கல்களைப் பரிவோடு அணுக வேண்டும் என்ற மிதவாதப் பெண்ணியத்தின் குரலே பெண்ணியத்தின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது என்பதால் அதன் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட இயலாது.
சமத்துவப்பெண்ணியம்;
கல்வி போன்ற ஆதாரமான உரிமைகள் மீட்கப்படுவதனாலேயே பெண்ணின் பிரச்சினை முடிந்து விடுவதில்லை என்பதையும்,இளமை மணம்,விதவை நிலை ஆகிய கொடுமைகள் குறைந்தாலும் பாலின அடிப்படையில் நிலவும் சமத்துவமற்ற போக்கு மாற்றம்பெறும் வரை பெண் ஒரு ‘மனிதப்பிறவி’யாக ஏற்கப்படுதல் கடினம் என்பதையும் சுட்டிக் காட்டியது சமத்துவப்பெண்ணியம்.
பொருளாதார உற்பத்தி மதிப்பின் அடிப்படையிலும் பெண் சம மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்பது இவ்வகைப்பாட்டின் சாரமாக அமைந்தது.
திருமண-குடும்பஉறவுகள்,பரஸ்பரநட்பு,மரியாதை,,புரிதல்,விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல்,ஆண் செலுத்தும் மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமையும்போது குடும்ப நிறுவனத்தில் சமத்துவமின்மை ஏற்படுகிறது.குடும்பத்திற்குள் பெண்ணின் உழைப்பு மிகுதியாகச் சுரண்டப்பட்டு அளவுக்கு அதிகமான பணிக்குவிப்பு அவள் மீது சுமத்தப்பட்டாலும் வீட்டிற்குள் அவள் செய்யும் வேலைகளுக்கான பொருளாதார மதிப்பு,வெளி வேலையில் ஈடுபடும் கணவனுக்கு நிகரானதாகப் பொதுவாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.குடும்ப சமூகக் களங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் உரிமைகள் பெரும்பாலும் ஆணுக்குரியனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.(இந்நிலைப்பாட்டில் சில விதி விலக்குகள் இருக்கலாம்.அவற்றின் விழுக்காடு மிகக் குறைவானதே).
இதற்கு நேர் மாறாகக் குடும்ப நன்மைக்காகப் பெண் தன் விருப்பங்களையும்,ஆர்வங்களையும் கள பலியாக்க வேண்டும் என்பதே சமூக எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆண்-பெண் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப உறவில், பாலுறவை விரும்பாதபோது நிராகரிப்பதற்கும்,குழந்தைப் பேறு எப்பொழுது வேண்டும் என்று முடிவெடுப்பதற்கும் கூடச் சில சூழல்களில் பெண்ணுக்குச் சமபங்கு இருப்பதில்லை.
கருப்பை பெண்ணின் வயிற்றில் இருந்தாலும் அது அவள் வசத்தில் இல்லை என்பது வேதனையோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மையாகும்.
பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்ணுக்கு ஆணுக்கு நிகரான மதிப்பும்,மரியாதையும் தருவதில் தயக்கங்கள் நீடிப்பதையும்,அவள் இரண்டாந்தரப்பிரஜையாகவே நடத்தப்படுவதையும் இன்றைய கால கட்டத்திலும் கூட காண முடிகிறது.
இக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் சமத்துவப் பெண்ணியம் பாலின அடிப்படையில் நிலவும் அசமத்துவப் போக்கு சமூகத்திலிருந்து அகற்றப்பட்டாக வேண்டும் என்பதையும்,வெளி வேலைகளில் பெண்களும் பங்கு பெறத் தொடங்கி விட்டதால் இல்லறக் கடமைகளைப் பகிர்ந்து கொள்ள ஆண்களும் முன்வர வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தீவிரப் பெண்ணியம்;
பாலினச் சமத்துவம் என்பது அரசியல் அமைப்புச் சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தபோதும் நடைமுறையில் அது சரிவரச் செயலாக்கம் பெறாததால் அதனைக் 'காகிதச் சமத்துவம்'என்று பழிக்கும் தீவிரப் பெண்ணியம் தீவிரமான ஆண் எதிர்ப்பு நோக்குடையது.
பெண் என்பவள் ஓர் உடலாக மட்டுமே பார்க்கப்படுவதை எதிர்க்கும் இக் கோட்பாடு பால் அடிப்படையில் பெண்ணை ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் எதிராகத் தன் கருத்தை வைக்கிறது.
தேவை ஏற்பட்டால் குடும்ப அமைப்பு இன்றியும்,ஆணின் சார்பு இன்றியும் ஒரு பெண்ணால் தனித்த சுதந்திரத்துடன் வாழ முடியுமெனக் கூறும் தீவிரப் பெண்ணியம்,பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாதபோது மரபு வழி நிறுவனங்கள் உடைக்கப்படுவதில் தவறில்லை என்ற கருத்தோட்டத்தையும் கொண்டிருக்கிறது.உடலியற்கூற்றின் அடிப்படையில் பெண்ணுக்குத் தனி முத்திரை குத்துகிற அனைத்தையும் எதிர்ப்பது தீவிரப் பெண்ணியம்.
இயற்கைக்கு மாறான கருத்துக்களை இவ்வகைப் பெண்ணியம் பேசுகிறது என்ற கண்டனம் ஒருபுறம் எழுந்தாலும் பாலினச் சமன்பாடற்ற நிலையே பெண்ணை இத்தகைய தீவிர நிலைக்கு இட்டுச் செல்கிறது என்ற புரிதல்
பிறந்தால் சமூகக் கோளாறுகளைச் சரி செய்ய இயலும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை பாரதி,வ.ரா.,மாதவையா ஆகியோர் மிதவாத மற்றும் சமத்துவப் பெண்ணியக் கருத்துக்களைத் தங்கள் படைப்புக்களில் முன் மொழிந்தவர்களில் சிறப்பானவர்கள்.
''நவீன காலத் தனிக் குடும்பம் என்பது பகிரங்கமாகவோ,மறைமுகமாகவோ உள்ள வீட்டடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது'''
என்ற எங்கல்ஸின் கூற்றுக்கு மிகப் பொருத்தமான ஒரு தமிழ்க் குடும்பச் சூழலைத் தன் ,வீடு'நாவலில் சித்தரித்துச் சமத்துவப் பெண்ணியத்தை உயர்த்திப் பிடித்த ராஜம் கிருஷ்ணன் பெண்ணின் மன அழுத்தங்கள் எல்லை மீறுகையில் அது அவளைத் தீவிர நிலைக்கு இட்டுச் சென்று விடலாம் என்றும் தன் படைப்பின் வழி எச்சரிக்கை விடுக்கிறார்.
ஈ.வே.ரா.பெரியார்,வ.ரா.,ஆகியோர் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தீவிரப் பெண்ணியப் பொறிகளைப் பற்ற வைத்தபோதும் ,90களுக்குப் பின் தமிழ்ப் புனைவில் அம்பையின் வருகைக்குப் பின் அது புதிய வீச்சுக்களுடனும் பலவகைப் பரிமாணங்களுடனும் வெளிப்படத் தொடங்கி,இன்றைய பெண் கவிஞர்களாலும்,கதைப் படைப்பாளிகளாலும் 'பெண் மொழி'யாகப் பரிணாமம் பெற்றுள்ளது.
பி.கு;கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வகைக்கும் பல படைப்பாளிகளையும்,சிந்தனையாளர்களையும் இனம் காட்ட முடியும்;இக் கட்டுரை,கோட்பாட்டையே பெரிதும் முன்னிலைப்படுத்துவதால் சான்றுக்கு ஒரு சிலர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.மூன்று வகைமைகளும் சார்ந்த படைப்பாளிகள் குறித்த விரிவான பார்வை,தனிப்பதிவிற்கு உரியது.
thanks-tamilmanam
கருத்துகள்
கருத்துரையிடுக