இணையத்தில் கொரியமொழி, தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு CHENNAI-CONFERNCE-2015-NOVEMBER-SIX நாம் பேசும் மொழியானது , உள்ளிருக்கும் காற்றினை வெளியில் விடும் பொழுது மிடறு , நாக்கு , பற்கள் , வாயினது மேற்பகுதியாகிய அண்ணம் , உதடுகள் ஆகிய உறுப்புகளின் உதவியால் உருவாகிறது. இம்மொழியின் உதவியால் உலகத்தில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் இனம் , பண்பாடு , பழமை இவற்றைத் தெளிவுற அறிந்துகொள்ள ஏதுவாகிறது. அவ்வடிப்படையின்கீழ் இணையத்தில் தமிழ் , கொரியா மொழிகளின் கற்றல் நிலைப்பாடுகள் குறித்தும் , அம்மொழிகளின் சிறப்புகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது. கொரிய எழுத்துக்கள் உலகில் ஆறாயிரத்து எண்ணூற்றுக்கும் ( 6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு நாடுகளில் பேசப்படுவதாகவும் , இதில் இரண்டாயிரத்து முன்னூறு ( 2300) மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் இரண்டாயிரத்து...