வெள்ளி, 15 ஜூன், 2012

அய்யனார்


பொதுவாக யானையை வாகனமாக உடைய தெய்வங்கள் மூன்று மட்டுமே. i) அய்யனார். ii) இந்திரன். iii) முருகன். அய்யனாருக்கு வாகனமாக வெள்ளை யானை இருக்கின்றது. இந்திரனின் வாகனமும் ஐராவதமான வெள்ளை யானை தான். முருகனுக்கு வாகனமான உள்ள யானைக்கு பிணிமுகம் என்பது பெயர். அது பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது. (திருத்தணி முருகனுக்கு வாகனம் யானை. அது போல போரூர், பிரான் மலை போன்ற ஆலயங்களிலும் முருகனுக்கு யானை வாகனமே உள்ளது.)
http://ramanans.files.wordpress.com/2011/06/karupan-sami.jpg?w=199&h=300
கருப்பண்ணசுவாமி
பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது.
புராணத்தில் வரும் சாஸ்தா, அய்யனார் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
கந்த புராணத்தில் தான் முதன் முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகா காளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
http://ramanans.files.wordpress.com/2011/06/purna-pushkala-sametha-ayyanar.jpg?w=300&h=207
பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார்
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!
என இந்திராணி, அஜமுகி தன்னை தாக்க வந்தபோது அரற்றியதாக கச்சியப்ப சிவாசாரியார் தெரிவிக்கின்றார்.
செண்டார் கையனே இவர் செண்டலங்காரர் என்றும் குறிப்பிடப்படுவார். இவரும் ஐயனார் தான். உ.வே.சா இவர் பற்றி எழுதியுள்ளார். ஐயனார் கையில் வைத்திருக்கும் நுனி வளைந்த அந்த ஆயுதம் தான் செண்டு.
மெய்யர் மெய்யனே பொய்யை விரும்பாதவர் ஐயனார். தவறு செய்பவரை தண்டிப்பவர். பொய்யா ஐயனார், மெய் வளர் ஐயனார் என பல பெயர்களில் ஐயனார் விளங்குகின்றார்.
தொல்சீர் வீரனே வீரம் மிக்கவர் ஐயனார். ஊரின் காவல் தெய்வம் இவர். அதற்காகவே தனது பரிவார தேவதைகள் 32 உடன் அவர் வீற்றிருக்கிறார்.
அடுத்து சிதம்பரம் தல புராணத்தில்
சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி
என்ற குறிப்பு வருகிறது.
http://ramanans.files.wordpress.com/2011/06/im20101211_sundarar1.jpg?w=202&h=300
சுந்தரர் - திருகைலாய யாத்திரை
சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் செல்கின்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். (இதை அறிந்த ஔவை தானும் விரைவாக கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேக வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூற, அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பிக்கிறார் என்பது ஒரு செவி வழி வரலாறு 
 http://ramanans.files.wordpress.com/2011/06/horse-vakanam1.jpg?w=300&h=247

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக