தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் முப்பதா ? ஐம்பத்தொன்றா ? http://swamiindology.blogspot.in/2013/01/blog-post_24.html 51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர் , அருணகிரிநாதர் , பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது. 51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு. விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்: “ ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பத்தோர்விதமான லிபிகளும் வெகுரூப ” என்றும் இன்னுமோர் இடத்தில் “ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும் அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ” எ...