அலுவலர் பெயர்
அலுவலர் பெயர் அஞ்சகார-காடியின் அஞ்சல் அலுவலர் அட்டவனே-காடியின் வருவாய்க் கணக்கர் அமில்தார்-தற்போதைய வட்டாட்சியருக்கு இணையான பதவியை வகித்தவர் அரிகார்-செய்தி கொண்டு சேர்ப்பவர்(பிராமண வகுப்பினர்) இராகுத்தராயன்-குதிரை வீரர்களின் தலைவன் எக்கொட-கிராமத்தலைவன் ஒபாலிதார்-ஒபாலியின் ஆட்சித்தலைவர் கண்டசார்-சுதேசி கரித்தாக்கன்-மதுரைநாயக்க மன்னர்களைக் குறித்த பட்டப் பெயர் கிலாதார்-கோட்டை அதிகாரி சில்லாதார்-சொந்தமாக போர்க்குதிரையும்,ஆயுதமும் வைத்திருக்கும் வீரன் சுபேதார்-ஆட்சித் தலைவர் தேஸ்குல்கர்னி-மாவட்டக்கணக்கர் நீர்க்கண்டி-பாசனநீர் வீணாக்காமல் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட அலுவலர் பண்டாரம்,பண்டாரி-கருவூல அலுவலர் படேல்-தலைவன் பட்டணசெட்டி-நகர வணிகக் குழுவின் தலைவன் பட்டின சுவாமி-நகரத் தந்தை,மேயர் பவுஸ்தார்-மாவட்டங்களை ஒத்த பகுதியை -நிர்வகித்த ஆட்சித் தலைவரைக் குறித்தது பாரா,பலூடி-கிராமத்தலைவன்,கணக்கன்,சோதிடன்,கண்காணி,காவலன்,நீர்க்கண்டி,வண்ணான்,நாவிதன்,குயவன்,கொல்லன்“,தச்சன்,தட்டான்ஆகியோர் செய்யும் தொழில்களைக் குறித்தன. இவர்கள் அறுவடைக் காலங்களில் கிராம மக்களிடம் இருந்து ...