உலகுக்கு குமரிக்கண்டம்

உலகுக்கு குமரிக்கண்டம் http://tamilresearch.wordpress. - நந்திவர்மன் கடவுளின் கைரேகைத் தடங்கள் என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று. உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார். உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! கிரகாம் ஹான்காக் 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார். ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடியிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார். அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன. தமிழர்களின் சங்க இலக்கியம் வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவாவின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்க...