வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி!

வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி! jayasree மதுர மொழி என்றழைக்கப்பட்ட தமிழ் மொழி , மனித பாஷை என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையிடம் , அனுமன் பேச முடிவு செய்த பொழுது , அவளுடன் மனித பாஷையில் பேசுவதுதான் சிறந்தது , அப்பொழுதுதான் அவள் தன்னைச் சந்தேகப்படமாட்டாள் என்று நினைத்து மனித பாஷையில் பேசினான் அந்தக் காலக்கட்டத்தில் , அதாவது ராமாயண காலத்தில் சாதாரண மக்கள் மனித பாஷயில் பேசினார்கள் என்றால் சீதையைச் சுற்றியிருந்த ராக்ஷசிகள் எந்த பாஷையில் பேசியிருப்பார்கள் ? அந்த ராக்ஷசிகள் சாமானிய மக்கள் என்ற குறியீட்டில் வருபவர்கள்தானே ? குணத்தால் ராக்ஷசிகள் எனப்பட்டாலும் , அவர்கள் ராவணனைப் போல சமஸ்க்ருத பண்டிதர்களாக இருந்திருக்க முடியாது. அவர்கள் சாமானியர்களாக இருந்திருக்கவேதான் , ஒரு வனத்தில் காவல் காக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நோக்கில் ஆராயும்போது , அந்த ராக்ஷசிகளும் தங்களுக்குள் மனித பாஷையில்தான் பேசியிருக்க வேண்டும் என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்க...