இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலப்பதிகாரம்

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம் . கண்ணகியும் கால் சிலம்பும் கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம் . தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பார் திருவள்ளுவர் . நண்பர்களே , நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் , தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான் . ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது , முயற்சிக்கும் காலமும் சிறியது . தஞ்சாவூர் , கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் , கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய   பேராசிரியர் சி . கோவிந்தராசனார் அவர்கள் , இலங்கையைச் சார்ந்த பேரறிஞர் ,  யாழ் நூல்   என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர் ,  சுவாமி விபுலானந்த அடிகளாரிடம் , சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர் . சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர் . அவரது மனதில் நீண்ட நாட்களாகவே , ஓர் ஆசை , ஏக்கம் , கனவு . சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த , பாதை வழியாகவே , ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம் . பேராசிரியர...