இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொல்லிமலை

படம்
இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை" > கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் , வரலாற்று சிறப்பும் உடையது. கொல்லிமலைப் பயணம் மறக்க முடியாத நினைவுகள் … அப்போது தான் ஷோரூமிலிருந்து கார் எடுத்த புதிது. அதன் டிக்கி நிறைந்த அளவு பெரிய வெள்ளிப் பூண் போட்ட வலம்புரிச்சங்கு பொக்கிஷமாய் பெரியவர் ஒருவர் எடுத்து வந்திருந்தார். கோவிலுக்கு அருகில் ஓடும் ஆற்றில் குளித்துவிட்டு அந்த சங்கில் எல்லோரும் தண்ணீர் முகந்து தலையில் ஊற்றிக்கொண்டோம். அந்த சங்கில் நீர் நிரப்பி அறப்பளீஸ்வரருக்கு அபிஷேகமும் செய்து நிறைவாக அருமையாக அர்ச்சனையும் செய்தோம். என்றும் மறக்காத இனிய புனித உணர்வு நிரம்பிய தருணங்கள் அவை. காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர். கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும் , சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன...