இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராசேந்திர சோழன்-கல்வெட்டு

தன் குருவாகிய சர்வசிவ பண்டிதர்க்கும் , அவரது சிஷ்யர்களாய் ஆர்யதேசம் , மத்யதேசம் , கௌடதேசம் ஆகிய இவ்விடங்களில் இருந்தவர்களுக்கும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டுதோறும் நிறைந்த அளவாக ஆடவல்லான் சுமித்ராத் தீவிலுள்ள விசயம் , பண்ணை , மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம் , இலங்கா சோகம் , மாபப்பாளம் , இலிம்பிங்கம் , வளைப்பந்தூறு , தக்கோலம் , மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான் ; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான். உரைநடைப்பகுதியால் அறியப்படும் செய்திகள் இராசேந்திர சோழன் தஞ்சை இராச ராசேச்சரத்தில் இருந்த என்னும் மரக்காலால் இரண்டாயிரம் கல நெல்லை ஆசாரிய போகமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். கல்வெட்டு மூலம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தை(யு)ம் பொற்சயப் பாவையும் சிர்த்தநி (ச் செ)சல்வியும் (த)ன் பெருந்தெவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வெலிப்படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள்- 2. கொள்ளிப் பாக்கைய...

சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருது-கோளும் (Dravidian Hypothesis), திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன் மொழிவுகளும் இந்தி-யவியலின் மிக முக்கியமான ஆய்வுக்-களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரண்டு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக் கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அய்ராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று , சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல , பழந்தமிழ் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள் , எச்சங்கள் சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்-தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்-பிற்கான வாய்ப்பைப் பெயராய்-வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப்பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாகரிகத்தின் மொழியைக் கண்டற...

மிதிவண்டி-தமிழ்ப் பெயர்கள்

படம்
மிதிவண்டி-தமிழ்ப் பெயர்கள்-நன்றி-http://annakannan-katturaigal.blogspot.in Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கிலி இணைப்பி Chain pin - இணைப்பி ஒட்டி Adjustable link - நெகிழ்வு இணைப்பி Circlip - வட்டக் கவ்வி Chain lever - சங்கிலி நெம்பி Frame - சட்டகம் Handle bar - பிடி செலுத்தி Gripper - பிடியுறை Cross Bar - குறுக்குத் தண்டு Cross Bar cover - குறுக்குத் தண்டு உற...