பெண்கள்
என்றுமே பெண்கள் இலட்சியவாதிகள் தான் இலட்சியம் என்றால் என்ன ? தங்களுக்கென்று ஒரு கொள்கை , தங்களுக்கென்று ஒரு நேர்மையான பாதை , தங்களுக்கென்று ஒரு நேர்வழி. இவைகளை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பெண்களை இலட்சியப் பெண்கள் என்று சொல்லலாம். கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு இறுதி வரை அவனைத் திருத்த போராடிய இலட்சியப் பெண்கள், கைக் குழந்தையோடு , கைவிட்டுச் சென்ற அல்லது இறந்து விட்ட கணவனாக இருந்தாலும் , மறுமணம் செய்து கொள்ளாமல் , குழந்தைக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு வாழ்ந்த இலட்சியப் பெண்கள், பள்ளிப் படிப்புக்குக்கூட வழியில்லாத கிராமப் பெண்கள் , தங்கள் கணவனோடு இணைந்து விடியற்காலையிலேயே வயல்வெளிக்குச் சென்று வயல்வெளியில் மழையிலும் , வெயிலிலும் நாள் முழுவதும் வேலை செய்து குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்த இலட்சியப் பெண்களின் நிஜக்கதைகள் ஆயிரம் ஆயிரம் உள்ளன … இன்றைய பெண்கள் இலட்சியப் பெண்களாக இருந்து வந்த பெண்களுக்கு அவர்களின் அறிவார்ந்த படிப்பும் , கை நிறைய சம்பளமும் தன்னம்பிக்கையைக...