செம்மொழிகளில் தமிழ் - முனைவர் மு. பழனியப்பன். உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் பெருமை தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தி. உலக அரங்கில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் தன்னிகரற்ற பெருமை இதுவாகும். இந்தப் பெருமை பல நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டும். தற்போது கிடைத்திருப்பது ஓரளவிற்கு மனநிறைவை தமிழ் மக்களிடமும் , தமிழ் அறிஞர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம் , சமஸ்கிருதம் , இலத்தீன் , பாரசீகம் , அரபு , எபிரேயம் , சீனம் , தமிழ் ஆகிய எட்டு மொழிகள் கொள்ளப்படுகின்றன. கிரேக்க மொழி பாரம்பரியம் மிக்க மொழியாகும். இந்தமொழியின் வரிவடிவம் கி. மு. 700 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இம்மொழியில் உள்ள இலக்கிய வளங்கள் அதிகம். ஹோமர் எழுதிய இலியது , ஒடிசி ஆகிய மாகாப்பியங்களும் , பிளாட்டோ , அரிஸ்டாட்டில் போன்றோரின் தத்துவ நூல்களும் இம்மொழியின் பெருமையை உலக அளவில் நிலைநிறுத்தி வருகின்றன. சமஸ்கிருதம் இந்தியவின் பழமையான மொழிகளுள் ஒன்றாகும். இந்த மொழியில் கி. மு. 1...
கருத்துகள்
கருத்துரையிடுக