ராஜராஜசோழன் காலத்து ஓலைச்சுவடிகள்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜசோழன் காலத்து ஓலைச்சுவடிகள்

 http://www.southindianpost.com/news
தேனி மாவட்டம், தேவாரத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சுப்புராஜிடம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓலைச் சுவடிகளில் தஞ்சை பெரிய கோயில் பற்றிய அறிய தகவல்களும், ராஜராஜ சோழன் ஆட்சி முறை, திருமண உறவுகள் உட்பட விவரங்களடங்கிய இரண்டு கட்டு ஓலைச் சுவடிகள் உள்ளன. இயற்கை வைத்தியர் சுப்புராஜ் கூறுகையில்,"மருத்து குறிப்பு தொடர்பாக என்னிடம் பழமையான ஓலைச் சுவடிகள் உள்ளன. இவை எனது குருநாதர் திரியானந்த சித்தர் கொடுத்தவை. 80 வயது கடந்த அவர் ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை மேற் கொள்வதால் பாதுகாக்க என்னிடம் ஓலைச் சுவடிகளை கொடுத்தார். கடந்த ஆண்டு, தேசிய ஓலைச் சுவடி ஆணையத்தினர் என்னிடம் உள்ள ஓலைச் சுவடிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அவற்றில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராஜராஜ சோழன் ஆட்சிமுறை, திருமண உறவுகள், தஞ்சை பெரிய கோயில் உட்பட பல விபரங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் உள்ளன என்று கூறினர். ஓலை சுவடிகள் பிரமி எழுத்துகளை படிக்க தெரிந்தவர்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை