கல்வெட்டு
பட்டீசுவரம்
கல்வெட்டு:
தேவாங்கர் சமுதாயம் பற்றிய செய்திகள் அவர்களே வெளியிட்ட பழனிச் செப்பேடு, ஓ.கோயில்பட்டிச் செப்பேடு ஆகியவற்றின் மூலம் தெரியவருகின்றன. இவை தவிர ஒருசில கல்வெட்டுச் சான்றுகளும் சில சான்றுகளைத் தருகின்றன.
கும்பகோணம் நகருக்கு அருகிலுள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்று பட்டு நூல் நெசவு நெய்பவர்களுக்கும் சேணியர் என்னும் செட்டிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு வழக்கு பற்றிக் கூறுகிறது. (ஆதாரம்: Annual Report on Epigraphy 257/1927). திருமணச் சடங்குகளின் பொழுது வெற்றிலைப் பாக்கு மரியாதை யாருக்கு முதலில் தரப்பட வேண்டும் என்பதில் பட்டு நூல்காரர்களுக்கும், செட்டிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனைத் தஞ்சை நாயக்க அரசில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் தீர்த்து வைத்துள்ளார். இங்கு குறிப்பிடப்படும் சேணியர் என்பார் சேடர் என்று பெயர் பெறும் தேவாங்க மரபினராக இருக்கலாம். இது மேலும் ஆய்வுக்குரியது.
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றும் தேவாங்கர் பற்றிய செய்தியைத் தருகிறது. (ஆதாரம்: Annual Report on Epigraphy 368/1917). இக்கல்வெட்டில் இலைவணிகச் செட்டிகள் போலியான ஆவணங்களைக் காட்டி அரசு அலுவலர்களைத் துணைக் கொண்டு தேவாங்கர்களுக்கும், கைக்கோளர்களுக்கும் உரிய நில பட்டங்களைத் தங்களுக்குரியனவாக மாற்றிக் கொண்டனர். இதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தேவாங்கர்களும், கைக்கோளர்களும் அவ்வூரை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் அரசு அதிகாரிகளால் கைக்கோளர்களின் செப்பேட்டு ஆவணம் ஒப்பு நோக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது என்று தெரியவருகின்றது.
Hi,
பதிலளிநீக்குI am Senthil Kumar. Do you hae any other articles about Devanga Community.If yes then please forward it to world.devanga@gmail.com